search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாவட்டத்தில்  பரவலாக  பெய்த மழை: 2 குடிசை வீடுகள் சேதம்
    X

    கடலூர் மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை: 2 குடிசை வீடுகள் சேதம்

    • மேற்கு வங்க மாநிலம் சாகர் தீவுகளுக்கு சுமார் 750 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
    • தற்போது மழை காரணமாக வழக்கத்தை விட சற்று குறைவாக காணப்பட்டு வருகின்றது.

    கடலூர்:

    அந்தமான் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தற்போது அந்தமான் தீவுகளுக்கு சுமார் 500 கிலோமீட்டர் தொலைவிலும், மேற்கு வங்க மாநிலம் சாகர் தீவுகளுக்கு சுமார் 750 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இது மேலும் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடைந்து புயலாக வலுவடைந்து வங்காளதேசம் அல்லது மேற்கு வங்க கரையோரம் 25-ந தேதி காலை கரை கடக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் கடலூர் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 1 ஏற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது. மேலும் கடலூர் மாவட்டம் முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்து வந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய காரணத்தினால் சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 1000 த்திற்க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது‌.

    இந்த நிலையில் நேற்று கடலூர் பண்ருட்டி விருத்தாச்சலம் நெய்வேலி சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது. இதனை தொடர்ந்து இன்று மதியம் வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் நாளை(24-ந் தேதி) தமிழகம் முழுவதும் மிக பிரமாண்டமாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் துணிக்கடைகள், பட்டாசு கடைகள் பல்வேறு கடைகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் திரண்டு தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். தற்போது மழை காரணமாக வழக்கத்தை விட சற்று குறைவாக காணப்பட்டு வருகின்றது. மேலும் சாலை யோர வியாபாரிகள் தொடர் மழை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 2 குடிசை வீடுகள் சேதம் அடைந்து உள்ளன. மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்டம் முழுவதும் தொடர் மழை காரணமாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது மட்டும் இன்றி ஆறுகளில் செல்லக்கூடிய தண்ணீரின் வரத்து குறித்தும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது. கடலூர் மாவட்டம் முழுவதும் விவசாயிகள் தொடர் மழை காரணமாக தண்ணீர் தேங்காத வகையில் தொடர்ந்து முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொண்டு வருவதையும் காணமுடிகிறது. கடலூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லி மீட்டர் அளவில் பின்வருமாறு- பெல்லாந்துறை - 30.4, பண்ருட்டி - 26.0, குறிஞ்சிப்பாடி - 20.0, லக்கூர் - 19.2, தொழுதூர் - 18.0, சேத்தியாத்தோப்பு - 13.0, அண்ணாமலைநகர் - 12.8, வடக்குத்து - 12.0, பரங்கிப்பேட்டை - 11.0, வானமாதேவி - 10.6, விருத்தாசலம் - 9.3 எஸ்ஆர்சி குடிதாங்கி - 9.25, கீழ்செருவாய் - 8.0 மீ-மாத்தூர் - 6.0 ஸ்ரீமுஷ்ணம் - 5.2 16,. வேப்பூர் - 5.0. சிதம்பரம் - 5.0.

    Next Story
    ×