என் மலர்tooltip icon

    கடலூர்

    • வீரன் மற்றும் அண்ணாமலை வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.
    • படுகாயமடைந்த வீரன்,அண்ணாமலையை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்தியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    கடலூர் 

    வடலூர் வள்ளலார் நகர் சித்தர் தெருவை சேர்ந்தவர் ராஜவன்னியன் என்பவரின் மகன் வீரன் மற்றும் தம்பி அண்ணாமலை. இவர்கள் இருவரும் வடலூரில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 24-ம் தேதி மாலையில் வீரனும் தம்பி அண்ணாமலையும் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது வீட்டிற்கு செல்லும் வழியில் இளைஞர்கள் மது போதையில் பட்டாசுகளை வெடித்துக் கொண்டு இருந்தனர். இதைப் பார்த்த வீரன் மற்றும் அண்ணாமலை வழியில் செல்கின்ற பொது மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் ஏன் இவ்வாறு செய்து கொண்டிருக்கிறீர்கள் என கேட்டனர். அதற்கு இளைஞர்கள் நாங்கள் இப்படி தான் செய்வோம் எனவும் உன் வேலையை பார்த்துக் கொண்டு போ என்று கூறி வீரன் மற்றும் அண்ணாமலையிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் இருவருக்கும் கொலை மிரட்டல் செய்துள்ளனர்.

    இந்நிலையில் போதையில் இருந்த இளைஞர்கள் திடீரென்று எதிர்பாராத விதமாக அவர்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு பைப்பினால் இருவரையும் தாக்கினர். இதில் வீரன் மற்றும் தம்பி அண்ணாமலை இருவருக்கும் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த வீரன்,அண்ணா மலையை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்தியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து வீரன் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வீரமணி எஸ்ஐ சங்கர் தலைமையிலான போலீசார் இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வடலூர் புதுநகரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் கோபிநாத் என்கிற விக்னேஷ் (வயது 19) கோட்டக்கரை மாருதி நகரைச் சார்ந்த ரகோத்தமன் மகன் சஞ்சய் (19) அன்னை சத்யா வீதியை சேர்ந்த முருகன் மகன் பிரவீன் குமார் (18) ஆகிய 3 இளைஞர்களையும் கைது செய்து கடலூர் சிறையிலும் மேலும் 17 வயது சிறுவர்கள் 3 பேரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். இளைஞர்கள் போதையில் தகராறில் ஈடுபட்டது அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • பஸ் நிறுத்தத்தில் தள்ளு வண்டியில் இட்லி கடை நடத்தி வருகிறார்.
    • வீச்சரிவாளால் பழனி வேலை நோக்கி வெட்ட வந்துள்ளனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே பாப்பான் கொள்ளை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியம்இ வரது மகன் பழனிவேல்(35). இவர் சொரத்தான்குழி பஸ் நிறுத்தத்தில் தள்ளு வண்டியில் இட்லி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அங்கு மது போதையில் வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த அசோக் ராமன் (24),சிறுதொண்டமாதேவி கிராமத்தைச் சேர்ந்த இனிய சம்பத் (23) இருவரும் பழனிவேல் இடம் ரூ.2000 மாமூல் கேட்டு மிரட்டி உள்ளனர். அதற்கு பழனிவேல் சரியான வியாபாரம் இல்லை. இப்போது என்னால் தர முடியாது என்று மறுத்துள்ளார். ஆத்திரம டைந்த இருவரும் நாங்கள் ஊரில் எவ்வளவு பெரிய ரவுடி தெரியுமா நாங்கள் மாமுல் கேட்டால் தரமாட்டாயா என கேட்டு அசிங்கமாக திட்டி உள்ளனர். பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளால் பழனி வேலை நோக்கி வெட்ட வந்துள்ளனர்.

    இதனைப் பார்த்த பழனிவேல் சட்டென சுதாரித்துக் கொண்டு வில கவே பக்கத்தில் கிடந்த முந்திரிக்கட்டை எடுத்து தலையில் அடித்துள்ளனர். பின்னர் அவர் பாக்கெட்டில் இருந்த ரூ.1000 பணத்தை எடுத்துக் கொண்டு இனிமேல் நீ இங்கு கடை வைக்கக் கூடாது. மீறி வைத்தால் உன்னை கொன்று விடுவோம் என்று மிரட்டி உள்ளனர். இது தொடர்பாக பழனிவேல் கொடுத்த புகாரின் பேரில் காடாம்பு லியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நந்தகுமார் முத்தாண்டி குப்பம் எஸ்.ஐ.ராஜாராமன், டெல்டா பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்துசிறையில் அடைத்தனர்.

    • ஒரு வருடமாக அதே கிராமத்தில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.
    • வழக்கு பதிவு செய்து காணாமல் போன பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே எல்.என்.புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி ஜெயம் (26). இவர்கள் இருவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகி 6 வயதில் ஒருபெண் குழந்தை உள்ளது. தனது கணவரின் தொடர் குடிப்பழக்கத்தால் குடும்பத்திற்குள் பிரச்சனை ஏற்பட்டு ஜெயம் கடந்த ஒரு வருடமாக அதே கிராமத்தில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.

    நேற்று வீட்டில் தனியாக இருந்த ஜெயம் திடீரென்று காணவில்லை. இதைக் கண்டு அதிர்ந்து போன பெற்றோர்கள் அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக ஜெயம் தந்தை ஜெயபால்பண்ருட்டி போலீசில் புகார்கொடுத்தார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொறுப்பு), எஸ்.ஐ.சரண்யாவழக்கு பதிவு செய்து காணாமல் போன பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • ரெயில் தண்டவாளத்தில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உடலில் காயத்துடன் இறந்து கிடந்தார்.
    • எக்ஸ்பிரஸ் ெரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தது தெரிய வந்தது.

    கடலூர்:

    கடலூர் அருகே நெல்லிக்குப்பம் மோரை தெரு பகுதியில் உள்ள ெரயில் தண்டவாளத்தில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உடலில் காயத்துடன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த கடலூர் முதுநகர் ெரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நெல்லிக்குப்பம் மோரை தெருவை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 42). சென்னையில் இருந்து காரைக்கால் சென்ற எக்ஸ்பிரஸ் ெரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இறந்த ஜீவானந்தம் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து கடலூர் முதுநகர் ெரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 6 பேர் குடிபோதையில் அன்பழகன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார்கள்.
    • தலித் வளவனை 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக கூறப்படுகிறது.

    கடலூர்:, அக்.25-

    கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 48). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தலித் வளவன் என்பவருக்கும் முன்விரோத தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று தலித்வளவன் உள்ளிட்ட 6 பேர் குடிபோதையில் அன்பழகன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டின் கதவு மற்றும் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் தலித் வளவனை 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலித் வளவன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

    இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் அன்பழகன் கொடுத்த புகாரின் பேரில் தலித் வளவன், தமிழ், விக்கி உள்ளிட்ட 6 பேர் மீதும், தலித் வளவன் கொடுத்த புகாரின் பேரில் பால்ராஜ், திலீப், அஜித், சதீஷ் என மொத்தம் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்கடலூர் அருகே பில்லாலி தொட்டி சேர்ந்தவர் குரு (வயது 23) இவர் தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் நத்தப்பட்டு கஷ்டம்ஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது குடிபோதையில் நின்று கொண்டிருந்த 3 நபர்கள் மோட்டார் சைக்கிளை வழிமறித்து திடீரென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் குருவை அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும், பாவாடைராயனை 3 பேர் தாக்கினர். இந்த மோதலில் குரு மற்றும் பாவாடைராயன் ஆகியோர் காயம் அடைந்து கடலூர் அரசு மருத்துவமனை சிகிச்சை சேர்க்கப்பட்டனர். இது குறித்து குரு கொடுத்த புகாரின் பேரில் நத்தப்பட்டு காலனியை சேர்ந்தவர்கள் பாவாடைராயன், அறிவழகன், முருகன் மற்றும் பாவாடைராயன் கொடுத்த புகாரின் பேரில் பில்லாலி தொட்டி சேர்ந்தவர்கள் குரு, வசந்தகுமார், சாலக்கரையை சேர்ந்த ராமு என 6 பேர் மீது நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இருசக்கர வாகனத்தில் செல்லும்போது வாக்குவாதம் ஏற்பட்டது.
    • 4-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் கடலூர் ரோடு பெரியார் நகர் பஸ் நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி இரண்டு கோஷ்டியினரும் ஒருவரை ஒருவர் மாறி தாக்கிக்கொண்டனர்.இந்நிலையில் அங்கு தகராறு செய்தவர்களில் ஒருவர் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் மற்றொ ருவர் மண்டையை அடித்து உடைத்துள்ளர். இதில் படுகாயமடைந்த அவர் விருத்தாசலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேலும் இந்த மோதலில் 4-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து விருத்தாசலம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்து வமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • இந்தியா முழுவதும் தீப ஒளி திருநாளான தீபா வளி பண்டிைக நேற்று கோலாகலமாக கொண்டா டப்பட்டது.
    • பட்டாசுகள் வெடித்ததில் தீப்பொறி 20 கூரை வீடுகள் மீது விழுந்தது.

    கடலூர்:

    இந்தியா முழுவதும் தீப ஒளி திருநாளான தீபா வளி பண்டிைக நேற்று கோலாகலமாக கொண்டா டப்பட்டது. இதை யொட்டி சிறுவர்கள் முதல் பெரிய வர்கள் வரை புத்தாடை அணிந்து பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தனர். பட்டாசு விபத்துக்களை கண்காணிக்க கடலூர் மாவட்டத்தில் மாவட்ட தீயணைப்பு நிலைய அலு வலர் குமார் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் உஷார் நிலையில் இருந்த னர். கடலூர் மாவட்டத்தில் 15 தீயணைப்பு நிலைய ங்கள் உள்ளது.

    இதில் பணியா ற்றும் தீயணைப்பு படை வீரர்கள் 24 மணி நேரமும் பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதை கண்கா ணித்தபடி இருந்தனர். என்றாலும் கடலூர், விருத்தாசலம், சிதம்பரம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், வேப்பூர், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், கடலூர் சிப்காட், சேத்தியா த்தோப்பு, பரங்கிப்பேட்ைட, ஸ்ரீமுஷ்ணம், மங்கலம்பே ட்டை, முத்தாண்டிக்குப்பம் உள்ளிட்ட 20 இடங்களில் பட்டாசுகள் வெடித்ததில் தீப்பொறி 20 கூரை வீடுகள் மீது விழுந்தது. இதில் அந்த வீடுகள் முழுவதும் எரிந்து நாசமானது. தகவலறிந்த அந்தந்த தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதுதவிர 3 இடங்களில் கரும்பு தோ ட்டம் பட்டாசு தீ விபத்தில் எரிந்து சேதமானது. 2 இடங்களில் தென்னை மரம், ஒரு இடத்தில் வைக்கோல் போர், ஒரு இடத்தில் குளிர்சாதன பெட்டி எரிந்து நாசமானது.

    • சூரிய கிரகணம் இன்று மாலை 5.13மணிக்கு தொடங்கி மாலை 6.25 மணி வரை உள்ளது.
    • சிதம்பரம் நடராஜர்கோவில் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கோவில்கள் இருந்து வருகின்றன.

    கடலூர்:

    சூரிய கிரகணம் இன்று மாலை 5.13மணிக்கு தொடங்கி மாலை 6.25 மணி வரை உள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழு வதும் உள்ள கோவில்கள் இன்று மதியம் முதல் மாலை வரை கோவில்கள் சாற்றப்படுகிறது. மேலும் அனைத்து கோவில்களி லும் பரிகார பூஜைகள் செய்யப்பட்டு கோவில் முழுவதும் சுத்தம் செய்து பின்பு திறக்கப்பட உள்ளது. 

    கடலூர் மாவட்டத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 1600 கோவில்கள் உள்ளன. இதில் கடலூர் பாடலீஸ்வரர், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில், புதுப்பா ளையம் ராஜகோபால சாமி கோவில், திருப்பா திரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவில், திரு வதிகை விரட்டா னேஸ்வரர் கோவில், விருத்தாச்சலம் கொளஞ்சியப்பர் கோவில், சிதம்பரம் தில்லை காளிய ம்மன் கோவில், திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்கள் ஆகும்.

    இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இல்லாமல் சிதம்பரம் நடராஜர்கோவில் உள்ளிட்ட நூற்றுக்க ணக்கான கோவில்கள் இருந்து வருகின்றன. இன்று மாலை சூரிய கிரகணம் உள்ளதால் அனைத்து கோவில்களிலும் இன்று மதியம் முதல் மாலை சூரிய கிரகணம் முடிந்து பின்பு பரிகார பூஜைகள் மற்றும் கோவில் சுத்தம் செய்து பொதுமக்களுக்கு சாமி கும்பிட அனுமதிக்கப்படு கின்றனர். இது மட்டும் இன்றி இன்று கந்த சஷ்டி விழா தொடங்கியதை யொட்டி முருகர் கோவில்களில் இன்று முதல் சஷ்டி விழா கோலகலமாக தொடங்க ப்பட்டு உள்ளது. மேலும் சூரிய கிரகணம் முடிந்து சஷ்டி விழா அனைத்து முருகர் கோவில்களிலும் சிறப்பு பூஜை உடன் தொட ங்கி நடைபெற உள்ளது.

    இது மட்டும் இன்றி கடலூர் மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் காலை முதல் சூரிய கிரகணம் காரணமாக கோவில்கள் மூடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் குறிப்பிட்ட நட்சத்தி ரம் மற்றும் ராசிக்காரர்கள் சூரிய கிரகணம் முடிந்து பரிகார பூஜைகள் செய்ய ப்பட வேண்டும் என தெரிவி க்கப்பட்டுள்ளது. இது மட்டும் இன்றி இந்நேரத்தில் பொதுமக்கள் யாரும் உணவு உண்ணாமலும், வெறும் கண்களால் சூரியனை காணாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • 2012-ம் ஆண்டு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க இயலாத நிலை ஏற்பட்டது.
    • 2004 முதல் பணியில் அமர்த்தப்பட்ட 5,500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம், நிர்வாக சீர்கேட்டால் 2012-ம் ஆண்டு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க இயலாத நிலை ஏற்பட்டது. எனவே 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ெஜயலலிதா பல்கலைக்கழகத்தை அரசின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தார். இதற்காக மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவதாஸ் மீனாவை நிர்வாக அதிகாரியாக நியமித்தார்.

    நிதி சிக்கலில் இருந்து மீட்கும் வகையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு அரசுக்கு அவர் பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் மிகை பணியாளர்களாக பணியாற்றிய 1,200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 3,200க்கும் மேற்பட்ட ஆசிரியர் அல்லாத ஊழிய ர்களை தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு இடமாற்றம் செய்து அயல் பணிக்கு அனுப்பினர்.கடந்த 2010-ம் ஆண்டு தனியார் நிர்வாகத்தில் பல்கலை கழகம் இருந்த போது 206 பேர் அலுவ லக உதவியாளர் முதல், தோட்ட பணியாளர் வரை மாதம் 1,500 முதல் 5,000 ரூபாய் வரை சம்பளத்தில் தொகுப்பூதிய அடிப்ப டையில் தற்காலிக பணியில் சேர்க்கப்பட்டனர்.

    ஆட்சி மன்ற குழு பரிந்து ரையின்படி 2 ஆண்டு களில் பணி நிரந்தரம் செய்ய ப்பட்டு காலமுறை ஊதியம் கிடைக்கும் என்ற நம்பி க்கை, அன்றைய நிர்வாகம் ஏற்படுத்தியிருந்தது. ஆனால், எதிர்பாராத வகையில், 2012ம் ஆண்டு ஏற்பட்ட நிதி சிக்கலில் பல்கலை அரசு ஏற்றதால், தொகுப்பூதியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாமல் போனது. கடந்த 12 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றினாலும், பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்ற நம்பிக்கையோடு பணியாற்றி வந்தனர். பணி நிரந்தரம் கோரிக்கையை கடந்த ஆட்சியில் இருந்தே வலியுறுத்தி வருகின்றனர்.

    ஆனால் கடந்த மாதம் நடைபெற்ற ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் இந்த மாதத்தோடு, இவர்களுக்கு வேலை இல்லை என எடுத்த ரகசிய முடிவு, ஊழியர்க ளுக்கு வாய்மொழியாக கூறப்பட்டுள்ளது. இதனால் பல்கலை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு ள்ளது. ஊழியர்கள் போரா ட்டத்தில் இறங்க உள்ளனர். குறிப் பாக 10 ஆண்டுக்கு பின் அனைத்து ஊழியர் சங்கங்களும் கூட்டாக இணைந்து மீண்டும் 'ஜாக்' கூட்டமைப்பை உருவாக்கி தொடர்ச்சியாக போராட்ட ங்கள் நடத்த முடிவு செய்து ள்ளனர்.  இதுகுறித்து பாதிக்க ப்பட்ட தொகுப்பூயர்களில் ஒருவர் முத்துலிங்கம் கூறியதாவது:-

    அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தொகுப்பூதிய ஊழியர்களாக 206 பேர் 2010-ல் தி.மு.க., ஆட்சியின் போது பணியில் சேர்ந்தோம். இரண்டு ஆண்டுகளில் பணி நிரந்தரம் என்ற அடிப்படையில் பணியில் சேர்ந்தோம். கடந்த 2004 முதல் பணியில் அமர்த்தப்பட்ட 5,500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்; நாங்களும் நிரந்தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 2013ல் அ.தி.மு.க., அரசு அரசுடமை யாக்கிய பின், பல்கலைக் கழகம் நிர்வாகம், நிதி நெருக்கடிகளை காரணம் காட்டி, பணி நிரந்தரத்தை நிறுத்தி வைத்தது. ஆனால் இதுவரை எங்களை, பணி நிரந்தரம் செய்யவில்லை. நாங்கள் பணியில் சேரும் போதும் தி.மு.க., ஆட்சி தான்; தற்போதும் அதே ஆட்சிதான். பணி நிரந்தரம் செய்யாமல் சொற்ப ஊதியமாக கொடுத்து 8 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யாமல் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

    • சுந்தர்ராஜன் என்பவரின் வீடு பட்டாசு வெடித்து தீப்பிடித்து வீடு முழுவதும் சேதம் அடைந்தது.
    • அக்கம் பக்கம் வீடுகளுக்கு தீ பரவாமல் தடுத்து தீயை அணைத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த சின்னப்பேட்டை பிள்ளை யார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 38) என்பவரின் வீடு பட்டாசு வெடித்து தீப்பிடித்து வீடு முழுவதும் சேதம் அடைந்தது. இது பற்றி உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பண்ருட்டிதீயணைப்பு துறை அலுவலர் ஜமுனாராணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அக்கம் பக்கம் வீடுகளுக்கு தீ பரவாமல் தடுத்து தீயை அணைத்தனர். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் விசாரணை நடத்தி வருகின்றார்.

    • தண்ணீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • புதிய புயல் சின்னம் காரணமாக கடலூரில் இன்று வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்பட்டது.

    கடலூர்:

    கிழக்கு மத்திய வங்க கடலில் சிட்ராங் என்ற புதிய புயல் சின்னம் உருவானது. இது வங்க தேசம், பரிசால் அருகே மையம் கொண்டது. இந்த புயல் இன்று காலை கரையை கடந்தது.

    இதையொட்டி தமிழக கடலோர பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்தது. இந்த மழை 27-ந்தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல்மழை பெய்தது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் மீட்பு பணிகள் உஷார்படுத்தப்பட்டு உள்ளது.

    தண்ணீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய புயல் சின்னம் காரணமாக கடலூரில் இன்று வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்பட்டது.

    தாழங்குடா, தேவனாம்பட்டினம், தைக்கால் தோணித்துறை, துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றம் அதிகம் இருந்தது. ராட்சத அலைகள் மேலெழும்பி கரையை வந்து தொட்டபடி சென்றது.

    இதனால் கடற்கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த படகுகளை மீனவர்கள் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தினர். எனினும் மாவட்டம் முழுவதும் மீட்பு படையினர் 24 மணி நேரமும் உஷார் நிலையில் உள்ளனர்.

    • மக்கள் தீபாவளி பொருள் வாங்கபண்ருட்டி வர துவங்கியதால் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது.
    • பண்ருட்டி உள்ளதால் வாகனங்கள் அணி வகுப்பால் நெரிசல் ஏற்பட்டது

    கடலூர்:

    பண்ருட்டியில் கடந்த 2 நாட்களாக தீபாவளிவிற்பனை கலை கட்டியது.பண்ருட்டி மற்றும் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் தீபாவளி பொருள் வாங்கபண்ருட்டி வர துவங்கியதால் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. இதோடு மட்டுமில்லாமல் சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, சேலம், ஈரோடு, கடலூர், விழுப்புரம், சிதம்பரம், புதுவை உள்ளிட்ட முக்கிய பெரு நகரங்களுக்கு செல்லும் முக்கிய சந்திப்பாக பண்ருட்டி உள்ளதால் வாகனங்கள் அணிவகுப்பால்நெரிசல் ஏற்பட்டது நெரிசலைகட்டுப்படுத்த 4முனை சந்திப்பில் துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையி ல்போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன் மற்றும் போலீசார்ஜிம்மி ஜிப், ட்ரோன் ஆகியவை அமைத்து தீவிரம்கண்காணித்து போக்குவரத்து சீரமைத்து வருகின்றனர்.

    ×