என் மலர்
நீங்கள் தேடியது "சிட்ராங் புயல்"
- தண்ணீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- புதிய புயல் சின்னம் காரணமாக கடலூரில் இன்று வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்பட்டது.
கடலூர்:
கிழக்கு மத்திய வங்க கடலில் சிட்ராங் என்ற புதிய புயல் சின்னம் உருவானது. இது வங்க தேசம், பரிசால் அருகே மையம் கொண்டது. இந்த புயல் இன்று காலை கரையை கடந்தது.
இதையொட்டி தமிழக கடலோர பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்தது. இந்த மழை 27-ந்தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல்மழை பெய்தது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் மீட்பு பணிகள் உஷார்படுத்தப்பட்டு உள்ளது.
தண்ணீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய புயல் சின்னம் காரணமாக கடலூரில் இன்று வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்பட்டது.
தாழங்குடா, தேவனாம்பட்டினம், தைக்கால் தோணித்துறை, துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றம் அதிகம் இருந்தது. ராட்சத அலைகள் மேலெழும்பி கரையை வந்து தொட்டபடி சென்றது.
இதனால் கடற்கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த படகுகளை மீனவர்கள் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தினர். எனினும் மாவட்டம் முழுவதும் மீட்பு படையினர் 24 மணி நேரமும் உஷார் நிலையில் உள்ளனர்.






