என் மலர்
கடலூர்
- பின் பக்க கதவுகளை உடைத்து உள்ளே சென்று வீட்டில் நகை, பணம் ஏதும் உள்ளதா? என தேடிப் பார்த்தனர்.
- பொருட்கள் ஏதும் இல்லாத நிலையில் அப்படியே போட்டு விட்டு சென்றுள்ளனர்.
திட்டக்குடி, அக்.28-
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மருதத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வாசுகி (45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள், பின் பக்க கதவுகளை உடைத்து உள்ளே சென்று வீட்டில் நகை, பணம் ஏதும் உள்ளதா என தேடிப் பார்த்தனர். நகை ஏதும் இல்லாததால் வீட்டில் இருந்து ரூ.5 ஆயிரம் பணம் மட்டும் எடுத்துக் கொண்டு, அங்கு பிரிட்ஜ்யில் வைத்திருந்த கறி குழம்பு, சாப்பாடு போட்டு சாப்பிட்டுவிட்டு தட்டுகளை பின்புறம் உள்ள வயலில் எறிந்து விட்டு சென்றுள்ளனர். மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த தனசேகரன் மனைவி விஜயலட்சுமி (27), கை குழந்தையுடன் தனது வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள மேலூர் கிராமத்தில் இருக்கும் தனது அம்மா வீட்டுக்கு சென்றார். பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விஜயலட்சுமிக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே விரைந்து வந்த விஜயலட்சுமி வீடடின் உள்ளே சென்று பார்த்த பொழுது வீட்டின் அரை கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. வீட்டில் இருந்த 1¾ பவுன் தங்க நகை மற்றும் ஒரு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளது தெரியவந்தது. இதேபோல் வீட்டிற்கு பின்புறம் இருந்த மற்றொரு வீட்டிலும் பீரோவை உடைத்துள்ளனர். அங்கு பொருட்கள் ஏதும் இல்லாத நிலையில் அப்படியே போட்டு விட்டு சென்றுள்ளனர். இது குறித்து ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மருதத்தூர் கிராமத்தில் நேற்று இரவு 3 வீடுகளில் அடுத்தடுத்து திருட்டு நடைபெற்ற சம்பவம் அப்பாகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- நாகராஜ் சிறுமி குளிப்பதை அவருக்கு தெரியாமல் வீடியோ எடுத்தார்.
- சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பண்ருட்டி, அக்.28-
பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு பல்லவ ராயநத்தம் முருக ன்கோயி ல்தெருவைச்சேர்ந்தவர் நாகராஜ் (வயது 24), கூலி தொழிலாளி திருமணமா காதவர். அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி வீட்டில் தனியாக குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நாகராஜ் சிறுமி குளிப்பதை அவருக்கு தெரியாமல் வீடியோ எடுத்தார். இதனையடுத்து இந்த வீடியோவை சிறுமியிடம் காட்டி அவரை மிரட்டி பலமுறை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் சிறுமி உடல் பாதிக்கப்பட்டார்.
இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து சிறுமியை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து சிறுமியின் பெற்றோர் பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் பண்ருட்டி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நந்தகுமார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த நாகராஜனை வலைவீசி தேடி வருகின்றனர்.
- பண்ருட்டியில் பட்டதாரி இளம்பெண் மாயமானார்.
- படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஆர்.எஸ்.மணி நகரை சேர்ந்தவர் கண்ணையன். இவரது மகள் பிரியங்கா (வயது 20). இவர், வடலூரி ல் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.இவர் கடந்த 26-ந் தேதி இரவு 1.30 மணியளவில் தனது வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது திடீரென்று அவர் காணாமல் போய்விட்டார்.
அவரை பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன பட்டதாரி பெண்ணை தேடி வருகின்றனர்.
- பண்ருட்டியில் சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அவர்களிடமிருந்து பணம், சீட்டு கட்டுஉள்ளிட்டவைகளை பறிமுதல்செய்தனர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே வீரபெருமாநல்லூரில் காசு வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக கடலூர்மாவட்டபோலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா மேற்பார்வையில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும்போலீசார் வீரபெருமாநல்லூருக்கு விரைந்து சென்றுஅங்கு சூதாடியஅதே ஊரை சேர்ந்த விநாயக மூர்த்தி (வயது23),விஜய் (41), முத்துவேல் (55),தனவேல் (40), ஜானகிராமன் (50)வெங்கடேசன் (38) அகியோரை கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து பணம், சீட்டு கட்டுஉள்ளிட்டவைகளை பறிமுதல்செய்தனர்.
- மாணவர்கள் ஓழுங்கீனமாக சிகை அலங்காரம் செய்து வருவதாக பண்ருட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- அழகு சாதன நிலையத்திற்கு அழைத்துச்சென்று முடி திருத்தம் செய்துபள்ளிக்கு அனுப்பிவைத்தார்.
கடலூர்:
பண்ருட்டி பகுதியிலுள்ள அரசுமேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஓழுங்கீனமாக சிகை அலங்காரம் செய்து வருவதாக பண்ருட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து போலீஸ் டி.எஸ்.பி. ஷபியுல்லா, இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் சரண்யா மேற்பார்வையில் பயிற்சி சப்.இன்ஸ்பெக்டர் விஜய் பள்ளி வளாகத்திற்கு இன்று நேரில்சென்று பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினார். பின்னர்ஒழுங்கீனமாகவும்,தாறுமாறாகவும்சிகை அலங்காரம்செய்து வந்தமாணவர்களைஅழகு சாதன நிலையத்திற்கு அழைத்துச்சென்று முடி திருத்தம் செய்துபள்ளிக்கு அனுப்பிவைத்தார். போலீசாரின் செயலை பொதுமக்கள் பாராட்டினார்.
- தமிழ் என்பது தெய்வீக மொழி. தமிழ் மொழியில் இறையாண்மை, தனாதனம் போன்றவை கொண்டுள்ளது.
- தமிழ்மொழியை ஊக்குவித்தால் இறைநம்பிக்கை வளர்ந்து விடும்.
கடலூர்:
தி.மு.க. தலைமையில் நடைபெறும் தமிழக அரசு தமிழ் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என கூறி தமிழக பா.ஜ.க. சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதன் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.
அதன்படி தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.
கடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-
தமிழ் மொழி வளர வேண்டும் என்று பா.ஜனதா தலைவர்கள் தமிழகத்தில் போராடி வருகிறார்கள். ஆனால், தி.மு.க.வினர் இநத விஷயத்தில் நாடகமாடி வருகிறார்கள். இதனை மக்கள் மன்றத்தில் கொண்டு வர வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் நிலையாகும்.
கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு தமிழ் பாடத்தில் 48 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதற்கு தி.மு.க. அரசு வெட்கி தலைகுனிய வேண்டும். இதனை பார்க்கும் போது தமிழ்மொழி நாளுக்குநாள் அழிந்து வருகிறது. தரம் தாழ்ந்து வருகிறது.
1960-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் நேரு இந்தி திணிக்கப்படாது என உத்தரவாதம் அளித்திருந்தார். 1965-ம் ஆண்டு இந்தியை திணிப்பதாக கூறி தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தது. இந்தி திணிப்பை கையில் எடுத்தால்தான் ஆட்சிக்கு வரமுடியும் என்று போராட்டம் செய்தனர்.
1965-ம் ஆண்டு இந்திக்கு எதிர்ப்பாக போராட்டம் நடத்துவதை பெரியார் கடுமையாக எதிர்த்தார். அப்போது பெரியார் கூறுகையில், இந்தி கூடாது என்பதல்ல என்று பேசியுள்ளார். ஆங்கில மொழியை அரசாங்க மொழியாக்க வேண்டும் என்று 1969-ம் ஆண்டு பெரியார் பேசியுள்ளார்.
1948-ம் ஆண்டு தமிழை விட ஆங்கிலத்தை கட்டாயமாக்கினால் அவர்களுக்கு ஓட்டுப்போடுவேன் என்று பெரியார் கூறினார். தமிழ் என்பது தெய்வீக மொழி. தமிழ் மொழியில் இறையாண்மை, தனாதனம் போன்றவை கொண்டுள்ளது. தமிழ்மொழியை ஊக்குவித்தால் இறைநம்பிக்கை வளர்ந்து விடும்.
திருவாசகம், தேவாரம் போன்றவற்றை இன்றைய காலத்தில் பெற்றோர் தங்களது பிள்ளைகள் மத்தியில் படிக்க வைத்தால் தமிழும், இறைநம்பிக்கையும், இறைவழிபாடும் வளர்ந்து வரும் என கூறினர்.
ஆனால், தி.மு.க.வினர் தமிழை இறக்கி விட்டு ஆங்கிலத்தை வளர்க்கிறார்கள். தமிழ் மொழிக்காக தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை. இந்தி திணிப்பை தொடர்ந்து ஏற்படுத்துவதாக தி.மு.க.வினர் கூறி வருகிறார்கள். தமிழ் மொழியையும், பா.ஜ.க.வையும் பிரிக்க முடியாது.
1965-ல் இந்தி திணிப்பு போராட்டம் தொடங்கியதால் 1967-ல் தி.மு.க.வினர் எளிதாக ஆட்சியை பிடித்தனர். அதேபோன்று இப்போதும் இந்த பிரச்சினையை கையில் தூக்கி உள்ளனர்.
தமிழ் மொழியில் 48 ஆயிரம் குழந்தைகள் தேர்ச்சி அடையவில்லை. இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும். தோற்று விட்டோம் என கூறி இருக்க வேண்டும். இந்தியை யாரும் திணிக்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
- சிறுபாக்கம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக சிறுபாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கடலூர்:
சிறுபாக்கம் அருகே கீழ ஒரத்தூர் கிராமத்தின் ஏரிக்கரை யில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக சிறுபாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் அப்பகுதிக்கு சென்ற வேப்பூர் காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் அங்கு சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த ஜ.ஏந்தல் கிராமத்தை சேர்ந்த சாமிதுரை (வயது 75), கள்ளக்குறிச்சி தாலுக்கா அசக்களத்தூர் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி (55) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
- ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் மற்றும் கடலூர் பகுதி முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு உள்ளனர்.
- சோதனை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
கடலூர்:
தமிழக அரசு தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என கூறி தமிழக பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதன் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று காலை கடலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
இந்த நிலையில் கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் கார் திடீரென்று வெடித்து ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதோடு, கார் இரண்டாக உடைந்த சம்பவம் பெரும் அதிர்வலையை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் வெடிகுண்டு எடுத்துச் சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும், இதனை தொடர்ந்து 5 பேரை உ.பா. சட்டத்தில் கைது செய்து என்.ஐ.ஏ விசாரிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்திருந்தார்.
இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கு முன்பு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவு பேரில் தலைமை காவலர் பாரி தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தலைமை காவலர் இளங்கோவன் தலைமையில் மோப்பநாய் பீட் ஆர்ப்பாட்டம் நடைபெறும் மேடை முழுவதும் வெடிகுண்டு உள்ளதா? என்பதனை தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் சந்தேகப்படும்படியான பொருட்கள் உள்ளதா? என்பதனையும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இது மட்டுமின்றி ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் மற்றும் கடலூர் பகுதி முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த சோதனை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
- 5 செட் இடம் வாங்கி அதில் பிரத்தியங்கராதேவி கோவில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.
- படுகாயம் அடைந்த திருநங்கை வாசுகி புவனகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் புவன கிரி அருகே பு.மணவெளி கிராமத்தை சேர்ந்தவர் வாசுகி, திருநங்கையான இவர் அந்த பகுதியில் 5 செட் இடம் வாங்கி அதில் பிரத்தியங்கராதேவி கோவில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கு பூஜை நடத்தி னார். இதனை அறிந்த அந்த கிராமத்தை சேர்ந்த கருணாகரன், சிவகுரு நாதன், கங்கா, சீராலன், முரளி, குமார் உள்ளிட்ட 7 பேர் அங்கு வந்தனர். அப்போது அவர்கள் திரு நங்கையிடம் இந்த பகுதி யில் கோவில் கட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்த னர். இதனால் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் திருநங்கை வாசுகி தாக்கப்பட்டார். படுகாயம் அடைந்த திருநங்கை வாசுகி புவனகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனை அறிந்த ஏராளமான திருநங்கைகள் திரண்டனர். அவர்கள் புவனகிரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். திருநங்கை வாசுகியை தாக்கியவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவேசம் அடைந்த னர். இது தொடர்பாக போலீ சார் திருநங்கைகளிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதுதொடர்பாக கருணா கரன், சிவகுருநாதன், கங்கா உள்பட 7 பேர் மீது போலீ சார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை எற்படுத்தியது.
- பண்ருட்டி அருகே மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
- 15 வயது மாணவி ஒருவரை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே தொரப்பாடியை சேர்ந்தவர் மணிகண்டன் (26) திருமணம் ஆனவர். மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வாழ்ந்துவருகிறார்.இந்த நிலையில் கடந்த 17ம் தேதி அதே பகுதியை சேர்ந்த 10ம்வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி ஒருவரை ஆசை வார்த்தை கூறிகடத்தி சென்றார்.இதுகுறித்து மாணவியின் தாய் புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.
புதுக் கோட்டை போலீஸ் இன்ஸ் பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் செல்வம், பயிற்சி சப் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்த ப்பட்ட பள்ளி மாணவியை வலை வீசி தேடி வந்தனர். போலீசாரின்தீவிர தேடு தல் வேட்டையில் மணி கண்டனை மடக்கி பிடித்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட பள்ளி மாணவியை கடலூர் மகளிர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
- சம்பவத்தன்று சுனாமி நகரில் புறம்போக்கு இடத்தில் ஒரு சிலர் வேலி அமைத்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
- பக்கிரி மனைவி உஷா என்பவரை சங்கர்தாஸ் மற்றும் ஒரு சில சேர்ந்து நெட்டி தள்ளினர்.
கடலூர்:
கடலூர் முதுநகர் செல்லங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சங்கரதாஸ் (வயது 46). இவரது மனைவி ராஜலக்ஷ்மி. இவர் 36- வது வார்டு மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார். சம்பவத்தன்று சுனாமி நகரில் புறம்போக்கு இடத்தில் ஒரு சிலர் வேலி அமைத்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை சங்கரதாஸ் அகற்றும் போது அதே பகுதியை சேர்ந்த பக்கிரி என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் பக்கிரி உள்ளிட்ட சிலர் சங்கர் தாஸை அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் பக்கிரி மனைவி உஷா என்பவரை சங்கர்தாஸ் மற்றும் ஒரு சில சேர்ந்து நெட்டி தள்ளினர்.
இதில் சங்கரதாஸ், உஷா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் சங்கர்தாஸ் கொடுத்த புகாரின் பேரில் கவியரசன், பக்கிரி, குப்புராஜ், வினோ, ரவீந்திரன் உள்ளிட்ட 8 பேர் மீதும், உஷா கொடுத்த புகாரின் பேரில் சங்கரதாஸ், வெள்ளையன், கபிலன் உள்ளிட்ட 6 பேர் மீதும் என மொத்தம் 14 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
- கடலூரில் மனைவி இறந்த துக்கத்தில் முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
- கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த திருமாணிக்குழியை சேர்ந்தவர் விட்டல் நாதன் (வயது 87). இவரது மனைவி கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். இதன் காரணமாக முதியவர் விட்டல்நாதன் மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில், சம்பவத்தன்று அதே பகுதியில் பூச்சி மருந்து குடித்து மயக்க நிலையில் இருந்தார்.
இவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று விட்டல்நாதன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






