கடலூர் அருகே ரெயில் மோதி வாலிபர் சாவு

ரெயில் தண்டவாளத்தில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உடலில் காயத்துடன் இறந்து கிடந்தார்.எக்ஸ்பிரஸ் ெரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தது தெரிய வந்தது.
கடலூர் அருகே ரெயில்  மோதி வாலிபர் சாவு
Published on

கடலூர்:

கடலூர் அருகே நெல்லிக்குப்பம் மோரை தெரு பகுதியில் உள்ள ெரயில் தண்டவாளத்தில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உடலில் காயத்துடன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த கடலூர் முதுநகர் ெரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நெல்லிக்குப்பம் மோரை தெருவை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 42). சென்னையில் இருந்து காரைக்கால் சென்ற எக்ஸ்பிரஸ் ெரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இறந்த ஜீவானந்தம் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து கடலூர் முதுநகர் ெரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com