சிதம்பரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இனிப்பு கடைகள் மற்றும் இறைச்சி கடைகளை ஆய்வு மேற்கொண்டனர்.உணவு பாதுகாப்பு விதிகள் படி கடை நடத்த அறிவுறுத்தப் பட்டது.
சிதம்பரத்தில் இறைச்சி கடையை ஆய்வு செய்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கைலாஷ்குமார் நோட்டீஸ் அளித்தார்.
சிதம்பரத்தில் இறைச்சி கடையை ஆய்வு செய்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கைலாஷ்குமார் நோட்டீஸ் அளித்தார்.
Published on

கடலூர்:

சிதம்பரம் நகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இனிப்பு கடைகள் மற்றும் இறைச்சி கடைகளை ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கைலாஷ் குமார் வெளியிட்டுள்ள செய்தி:-

சிதம்பரம் நகரில் பல்வேறு புகார்களின் அடிப்படையில் நானும், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அருண்மொழி , ரவிச்சந்திரன், அன்பழகன் ஆகியோர் உணவு நிறுவனங்கள், இனிப்பு மற்றும் காரவகைகள் தயாரிப்பகங்கள் மற்றும் இறைச்சி கடைகளில் ஆய்வு மேற்கொண்டோம்.அப்போது சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட 2 இறைச்சி கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உணவு பாதுகாப்பு விதிகள் படி கடை நடத்த அறிவுறுத்தப் பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com