என் மலர்tooltip icon

    கடலூர்

    • இரவு சுமார் 11.30 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது,
    • மின்சாரம் நேற்று இரவு முழுவதும் இல்லை

    கடலூர்:

    திட்டக்குடி அருகே வாகையூர்,ஆக்க னூர், பாளையம், இடைச்செ ருவாய் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது இன்று காலை 9.30 மணி வரை மின்சாரம் இல்லாமல் பள்ளி செல்லும் மாணவ மாணவர்கள், குழந்தைகள், முதியோர் உட்பட மின்சாரம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டனர்.     

    நேற்று மழை காற்று அதிக அளவில் இல்லை, இருப்பினும் மின்சாரம் நேற்று இரவு முழுவதும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் தங்கு தடை இன்றி பொது மக்களுக்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • திருமலை நாதன் கோவில் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ரமேஷ் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவி த்தனர்.

    கடலூர:

    சிதம்பரம் அருகே கோவிலாம்பூண்டி வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது50) தொழிலாளி. இவர் சிதம்பரத்தி லிருந்துகந்தமங்கலம் திருமலை நாதன் கோவில் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போதே திடீரென வலிப்பு ஏற்பட்டு விழுந்து ள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர்

    உடனே ஆட்டோவில் இவரை சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ரமேஷ் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவி த்தனர். இதனையடுத்து இவரது மனைவி வைஜெய ந்திமாலா சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்கள். 

    • காட்டுமன்னார்கோவில் அருகே நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க கிராம மக்கள் கோரிக்கை
    • இக்கிராம மக்கள் தடம் எண் 257-ல் அரசு பஸ்சினை மீண்டும் இயக்க வேண்டுமென போக்குவரத்து துறையிடம் முறையிட்டனர்..

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகில் கொண்டசமுத்திரம் என்ற உட்கிராமம் உள்ளது. இங்குள்ள மாணவர்கள், நோயாளிகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், விவசாயிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் கிராமத்தில் இருந்து வெகு தூரம் நடந்து வந்து மாமங்கலம் பஸ் நிறுத்தம் வரை சென்று தான் பல ஊர்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தடம் எண் 257-ல் ஒரு அரசு பஸ் இக்கிராமத்திற்கு இயக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பஸ் காட்டுமன்னார்கோவிலில் இருந்து கொண்டசமுத்திரம் வழியாக திருமுட்டத்திற்கு சென்று வந்தது. தொடர் மழையின் காரணமாக இந்த ஊரின் பெரிய வாய்க்காலில் மழைநீர் ஓடியது. இதில் சாலையை இணைக்கும் சிறிய பாலம் மழைநீரில் மூழ்கியது. மேலும், இதற்கு அருகாமையிலேயே புதிய பாலம் கட்டும் பணியும் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

    இதையடுத்து இந்த பஸ் கொண்டசமுத்திரம் கிராமத்திற்குள் செல்லமுடியாததால் மாற்று வழியில் இயக்கப்பட்டது. தற்போது இந்த வாய்க்காலில் நீர் குறைந்து பாலம் தெரிகிறது. இந்த பாலத்தை சீரமைத்து போக்குவரத்திற்கு ஏற்றதாக மாற்றப்பட்டது. இதையடுத்து இக்கிராம மக்கள் தடம் எண் 257-ல் அரசு பஸ்சினை மீண்டும் இயக்க வேண்டுமென போக்குவரத்து துறையிடம் முறையிட்டனர். ஆனால் இந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால் இக்கிராம மக்கள் ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில் வந்து செல்ல நீண்ட தூரம் நடந்து வந்து மாமங்கலத்தில் பஸ் ஏறி செல்கின்றனர். எனவே, காட்டுமன்னார்கோவிலில் இருந்து மாமங்கலம் கொண்டசமுத்திரம் வழியாக திருமுட்டம் செல்லும் அரசு பஸ்சினை மீண்டும் இயக்கவேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் விரைந்து எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தனியார் மதுபானக் கூடம் நேற்று திறக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதி மக்களிடையே பலத்த எதிர்்ப்பு ஏற்பட்டது.
    • ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் .

    கடலூர்:

    நெய்வேலி இந்திரா நகர் பகுதியில் தனியார் தங்குவிடுதி பின்புறம், தனியார் மதுபானக் கூடம் நேற்று திறக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதி மக்களிடையே பலத்த எதிர்்ப்பு ஏற்பட்டது.  தனைக் கண்டித்து பா.ம.க வடக்கு மாவட்டத்தின் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்திரா நகர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மாலினி சண்முகவேல் தலைமை தாங்கினார். முக்கிய அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் ஜெகன் இதுகுறித்து பேசியதாவது:   இந்திரா நகர் ஊராட்சியில் தனியார் மதுபானக் கூடத்தை அனுமதிக்க மாட்டோம். அருகேயுள்ள வடக்குத்து ஊராட்சி மதுஇல்லா ஊராட்சியாக உள்ளது.

    இதற்கு நீதிமன்றம் உரிய சட்ட முறைகளை அளித்துள்ளது. உச்ச நீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலையில் மதுபானக் கடைகளுக்கு, தடை விதித்த நிலையில், மதுபானக் கூடம் விதிமுறைகளை மீறி அமைக்கப் பட்டுள்ளது. என்எல்சி மறுகுடியமர்வு வணிகபகுதியில், குடியிருப்புகள், அரசு பள்ளிக்கூடம் உள்ள இடத்தில் மதுபானக் கூடம் அமைந்துள்ளது.  ,அமைதிப் பூங்கவாக திகழும் இங்கு, இந்த மதுபானக் கூடம் இயங்கினால், சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடையும். எனவே இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இந்த மதுபான கூடத்திற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் அய்யா, அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் குறிக்கோளான மதுவில்லா தமிழகத்தை உருவாக்க பாடுபடுவோம், இவ்வாறு அவர் கூறினார்.  =இந்த ஆர்பாட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட வன்னியர் சங்கத் தலைவர் ராஜேந்திரன், மு.மாவட்ட துணைசெயலாளர் சண்முகவேல், அமைப்பு செயலாளர் கயல்ராஜன், இந்திரா நகர் ஊராட்சி துணைத் தலைவர் உமாராமதாஸ், வார்டு உறுப்பினர் சுமதி ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் செல்வக்குமார், பிரகாஷ், ராஜா, பிரபாகரன், தேவா, கிருஷ்ணமூர்த்தி, சிவராமன், அமிர்தலிங்கம், மணிக்கண்ணன், குமரவேல், ஹரி, மற்றும் பொதுமக்களும் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டம் குறித்து தகவல் அறிந்த நெய்வேலி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் முடிவுக்கு வந்தது.ெே

    • பண்ருட்டி அருகேஓட்டல் தொழிலாளியைகொலை செய்தது ஏன்? நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம்.
    • அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார் அவர்களை தீவிர விசாரனை நடத்தியது

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த மேல்மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்கொழுந்து (24). இவர் காடாம்புலியூரில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்தார். இவரை கடந்த 29-ந் தேதி இரவு அதே ஊரைச் சேர்ந்த இரண்டு பேர் பலத்த காயங்களுடன் வீட்டில் விட்டனர். சிவக்கொழுந்து விபத்தில் அடிபட்டு சாலையில் கிடந்ததாகவும், அவ்வழியே வந்த நாங்கள் ஏற்றி வந்ததாகவும் கூறிச் சென்றனர்   இதையடுத்து சிவக்கொழுந்து பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இறந்துபோனார். ஓட்டல் தொழிலாளியான சிவக்கொழுந்து சாலை விபத்தில் இறக்கவில்லை.

    அதுபோல சாலை விபத்து நடந்ததாக எங்கள் கிராம மக்கள் யாரும் கூறவில்லை. வீட்டிற்கு அழைத்து வந்து விட்டுச் சென்ற காட்டாண்டிக்குப்பம் 2 வாலிபர்கள்தான் கொலை செய்து இருக்கவேண்டும். அவர்களை கைது செய்த பின்னரே உடலை பெற்றுக் கொள்வோம் என்று கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்  பண்ருட்டி போலீஸ் துணைசூப்பிர ண்டுசபியுல்லா உத்திரவின் பேரில், காட்டாண்டிக்குப்பம் கிராமத்திற்கு காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைப்பாண்டியன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர்   இது தெரிந்த அந்த 2 வாலிபர்களும் தப்பியோட காடாம்புலியூர் பஸ் நிறுத்தத்திற்கு வந்தனர். அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் 2 பேரும் அபினேஷ், கார்மேகம் என்பது தெரிய வந்தது.

    மேலும், இந்த 2 பேரும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:

    நாங்கள் இருவரும் காட்டான்டிக்குப்பத்தை சேர்ந்தவர்கள். ஹோட்டலுக்கு சாப்பிட செல்லும்போது சிவக்கொழுந்து எங்களுக்கு அறிமுகமானார். நாங்கள் 3 பேரும் இரவு நேரங்களில் சந்தித்து மது குடிப்போம்.

    பரபரப்பு வாக்குமூலம்

    கடந்த 29-ந் தேதி இரவு சிவக்கொழுந்துவுடன் அமர்ந்து நாங்கள் 2 பேரும் மது அருந்தினோம். அப்போது நாங்கள் கொண்டு வந்த ஆட்டுக் கறியை சாப்பிடுவதில் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது சிவக்கொழுந்து எங்கள் 2 பேரையும் அசிங்கமாக திட்டினான்.

    இதனால் ஆத்திரமடைந்த நாங்கள், அருகில் கிடந்த உருட்டு கட்டையால் சிவக்கொழுந்தை தாக்கினோம்.இதில் சிவக்கொழுந்து தப்பியோட முயற்சித்தான். துரத்தி சென்று அடித்து கொலை செய்தோம். இந்த ெகாலையை மறைக்க விபத்தில் அடிபட்டு சிவக்கொழுந்து சாலையில் கிடந்ததாக கூறி அவரது வீட்டில் இறக்கிவிட்டு நாடகம் ஆடினோம்.

    ஆனால் நாங்கள் கொலை செய்ததை கண்டுபிடித்து விட்டனர். போலீசார் எங்களை தேடுவது தெரிந்து தப்பி ஓட முயன்றோம். ஆனாலும் போலீசார் எங்களை மடக்கி பிடித்துவிட்டனர். மேலும், நாங்கள் சிவக்கொழுந்துவை தாக்கப் பயன்படுத்திய தடியினையும் போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டாம் என்று வாக்குமூலத்தில் கூறியுள்ளனர். இதையடுத்து இந்த 2 பேரையும் 

    • ஆவின் நிலைய கட்டிடம் நீண்ட காலமாக உள்ளதால் மிகவும் சேதம் ஏற்பட்டு எப்பொழுது இடிந்து விழும் என்ற நிலையில் இருந்தது
    • எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் மேல் கல் போன்ற ஓடு இவரது தலையில் விழுந்து காயம் அடைந்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு ரோ ட்டில் ஆவின் பால் குளிர ட்டும் நிலையம் ஒன்று உள்ளது. இந்த ஆவின் நிலைய கட்டிடம் நீண்ட காலமாக உள்ளதால் மிகவும் சேதம் ஏற்பட்டு எப்பொழுது இடிந்து விழும் என்ற நிலையில் இருந்தது. இதனால் இந்த பழைய கட்டிடத்தை அப்புறப்படுத்தி புதிய கட்டிடம் கட்டுவதற்கு ஆவின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்க ப்பட்டது

    . எனவே கட்டிடத்தை இடிக்கும் பணியில் விழுப்புரம் மாவட்டம் வாணிய ம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாலு (வயது 67) என்பவர் ஈடுபட்டு வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் மேல் கல் போன்ற ஓடு இவரது தலையில் விழுந்து காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் பாலுவை மீட்டு புவனகிரி ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பா ண்டிச்சேரி தனியார் ஆஸ்ப த்திரியில் அனுமதிக்கப்ப ட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பாலு பரிதாபமாக இறந்தார். இது குறித்து சேத்தியாதோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 20 இடங்களில் திருடிய கொள்ளையன் கைது.
    • மொத்தம் 20இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டு கொள்ளை யடித்தது தெரியவந்தது. ,

    க்டலூர்:

    பண்ருட்டி அருகே கொங்கராய னூரில்கடந்த 2021-ம் ஆண்டு லாலாப்பேட்டை யை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவரை தாக்கி வழிபறிகொள்ளை நடந்ததுஇந்த வழக்கில் சம்மந்தபட்டகீழ்பூத்தமங்கலம்விஜயகுமார் என்பவரைடிஎஸ்பி சபிபுல்லா உத்தரவின் பேரில் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்.இன்ஸ்பெக்டர்தங்கவேல், ஏட்டு ஜோதி மற்றும் அன்பரசன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர் 

    இவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.விசாரணையில் கடலூர் மாவட்டத்தில் திருப்பாப்புலியூர்,நெல்லிகுப்பம், நெய்வேலி டவுன்ஷிப், குறிஞ்சிப்பாடி, விருதாச்சலம், பண்ருட்டியில் 9 இடங்களிலும் விழுப்புரம் மாவட்டத்தில் மைலம்,வானூர், திருவெண்ணைநல்லூர், திண்டிவனம் பகுதியில் 7 இடங்களிலும், கள்ளகுறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, திருநாவலூர் பகுதியில் 2 இடங்களிலும் மொத்தம் 20இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டு கொள்ளை யடித்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவனை கைது செய்து அவனிடமிருந்து கொள்ளையடித்த பணம் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    • இவர் காடாம்புலியூரில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை செய்து வந்தார். இரவு இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் விபத்துக்குள்ளாகி கிடந்த தாகவும், அவரை மீட்டு அழைத்து வந்தோம் எனக் கூறினர்
    • உறவினர்கள் சாலை மறியல்-பதட்டம்

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த மேல்மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்கொழுந்து (வயது 24). இவர் காடாம்புலியூரில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை செய்து வந்தார். கடந்த 29-ந் தேதியன்று இரவு இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் விபத்துக்குள்ளாகி கிடந்த தாகவும், அவரை மீட்டு அழைத்து வந்தோம் எனக் கூறி அதே ஊரைச் சேர்ந்த 2 பேர் சிவக்கொ ழுந்துவை அவரது வீட்டில் விட்டுச் சென்றனர்        

        இதையடுத்து பலத்த காயங்களுடன் இருந்த சிவக்கொழுந்தை பெற்றோர்கள் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனு மதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து போனார். சிவக்கொழுந்து சாலை விபத்துக்குள்ளாகவில்லை, கொலை செய்யப்பட்டுள் ளார் என அவரது பெற்றோர் மற்றும் உறவி னர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். மேலும், இது குறித்து விசாரித்து கொலையாளிகளை கைது செய்தால் தான் உடலை வாங்குவோம் என்று கூறி மறியலில் ஈடுபட்டனர்   இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பண்ருட்டி உதவி போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா பேச்சுவார்த்தை நடத்தி னார். சிவக்கொழுந்து கொலை செய்யப்பட்டிருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி யளித்தார். இதையடுத்து காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதா மரைப்பாண்டியன் தலை மையிலான போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர். இதில் சம்பவத்தன்று சிவக்கொ ழுந்துவை வீட்டில் விட்டுச் சென்ற 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர்  விசாரணையில் 2 பேரும் அதே ஊரைச் சேர்ந்த கார்மேகம், அபினேஷ் என்பதும் கடந்த 29-ந் தேதி இரவு சிவக்கொழுந்துவுடன் அமர்ந்து மது அருந்தி யுள்ளனர். அப்போது இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில்ஆத்திரமடைந்த கார்மேகம், அபினேஷ் 2 பேரும் சேர்ந்து சிவக்கொழுந்தை தாக்கியுள்ளனர். இதில் சிவக்கொழுந்து தப்பியோட முயற்சித்துளளார். இருந்தபோதும் அவரை விரட்டிச் சென்று அடித்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே சிவக்கொழுந்து மயங்கி விழுந்துள்ளார். இதனால் செய்வதறியாது 2 பேரும் திகைத்தனர். மேலும், சாலையில் அடிபட்டு கிடந்தார் என்று கூறி வீட்டில் விட்டு விட திட்டம் போட்டு சிவக்ெகாழுந்துவை வீட்டில் விட்டு சென்றுள்ளனர் என்ற போலீசாருக்கு தெரிய வந்தது  இதையடுத்து 2 பேரையும் கைது செய்த காடாம்புலியூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • புதுச்சேரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தா
    • எதிரில் வந்த அரசு பஸ் மோதி உயிரிழந்தார்,

    கடலூர்:

    கடலூர் அடுத்த எம். புதூர் கிராமத்தை சேர்ந்தவர் வைத்தியநாதன் (வயது 47).காய்கறி வியாபாரி. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ந்தேதி புதுச்சேரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையம் அருகே சென்றபோது எதிரில் வந்த அரசு பஸ் மோதி உயிரிழந்தார். இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். வழக்கில் நஷ்டஈடு கேட்டு இறந்த வைத்தியநாதன் மனைவி மற்றும் குழந்தைகள் கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் மூத்தவக்கில் சிவமணி, வக்கீல்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் மூலம் வழக்கு தொடர்ந்தனர். வழக்கினை விசாரித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்ட வைத்தியநாதன் குடும்பத்திற்கு வட்டியுடன் சேர்த்து 20 லட்சத்து 5 ஆயிரத்து 534 ரூபாய் நஷ்டஈடாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டம் வழங்க உத்தரவிட்டது.

    ஆனால் அரசு போக்குவரத்து கழகம் நஷ்டஈடு தொகையை வழங்கவில்லை. இதனை தொடர்ந்து அவர்கள் மீண்டும் நிறைவேற்ற மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. அதன்படி கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து சேலம் நோக்கி செல்ல இருந்த அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர். 

    • ராஜவள்ளி (வயது 74). இவர் நேற்று மாலை அருகிலுள்ள வாய்க்காலுக்கு கை, கால்களை கழுவச் சென்றார்.
    • வாய்க்காலில் தவறி விழுந்து முச்சுத் திணறி இறந்து போனார்.

    கடலூர்:

    சிதம்பரம் அடுத்த நாஞ்சவயல் சத்யா நகரைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மனைவி ராஜவள்ளி (வயது 74). இவர் நேற்று மாலை அருகிலுள்ள வாய்க்காலுக்கு கை, கால்களை கழுவச் சென்றார். வயது முதிர்வு காரணமாக வாய்க்காலில் தவறி விழுந்து முச்சுத் திணறி இறந்து போனார். அங்கு சென்றவர்கள் இவரது வீட்டிற்கு தகவல் கொடுத்தனர்

    . சம்பவ இடத்திற்கு வந்த இவரது மருமகள் பாரதி சிதம்பரம் தாலுக்கா போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். புகாரின் பேரில் மூதாட்டியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பூச நட்சத்திர தினத்தில் 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடக்கும்.
    • 7-ந் தேதி வள்ளலார் முக்தியடைந்த சித்தி வளாகத் திருஅறை தரிசனம் நடைபெறும்.

    கடலூர் மாவட்டம் வடலூர் அருகே மருதூரில் வள்ளலார் அவதரித்தார்.

    வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன், உணவே மருந்து, மருந்தே உணவு போன்ற போதனைகளை கூறியதோடு அதற்கேற்றார் போல வாழ்ந்து காட்டியவர்.

    தீர்க்க முடியாத பல்வேறு நோய்களை இயற்கை வைத்திய முறைகளில் தீர்த்து வைத்தவர். யாரும் பசியால் இறக்க கூடாது என்ற எண்ணத்தில் சன்மார்க்க சங்கத்தை நிறுவி 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கினார். இதனால் வள்ளலார் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்.

    இறைவனுக்கு உருவம் கிடையாது. ஜோதி வடிவானவர் என்று உலகிற்கு பறைசாட்டியவர் வள்ளலார். அதற்கென ஞான சபை அமைத்து ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திர தினத்தன்று ஆன்மீகவாதிகளுக்கு ஜோதி தரிசனம் தருவார்.

    அவரை பின்பற்றி மாதந்தோறும் வடலூரில் பார்வதிபுரத்தில் உள்ள ஞானசபையில் பூச நட்சத்திர தினத்தில் 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடக்கும்.

    தை மாதத்தில் அவர் முக்தியடைந்ததால் தைப்பூச தினத்தன்று 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். இது மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக வடலூர் சுற்று வட்டார பகுதி மக்களால் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இந்த தைப்பூச விழாவிற்கு தமிழகம் மற்றும் உலகெங்கிலும் இருக்கும் வள்ளலார் சபையினர் இங்கு வந்து ஜோதி தரிசனம் பார்த்து செல்வர்.

    இந்த ஆண்டுக்கான விழா நாளை (4-ந் தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அன்று காலை 5 மணிமுதல் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் பாடப்படும். காலை 7.30 மணிக்கு மருதூர் வள்ளலார் சன்னதியில் மருதூர் கிராமவாசிகளால் கொடியேற்றப்படும். நற்கருங்குழியில் உள்ள வள்ளலார் சன்னதியில் நற்கருங்குழி கிராமவாச களால் கொடி யேற்றப்படும்.

    பார்வதிபுரத்தில் உள்ள வள்ளலார் ஞானசபையில் காலை 10 மணிக்கு தைப்பூச விழாவிற்கான கொடியேற்று விழா நடைபெற வுள்ளது. இக்கொடியினை பார்வதிபுரம் கிராமவாசிகள் ஏற்றிவைத்து விழாவினை தொடங்கிவைக்க உள்ளனர். இதைத் தொடர்ந்து திரு அருட்பா கருத்தரங்கம், சன்மார்க்க கருத்தரங்கங்கள் நடக்கவுள்ளது.

    5-ந் தேதி தைப்பூச தினத்தன்று காலை 6 மணி, 10 மணி, நண்பகல் 1 மணி இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் அதிகாலை 5.30 மணி என 6 வேளைகளில் 7 திரைகளை நீக்கி ஞானசபையில் ஜோதி தரிசனம் நடக்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து 7-ந் தேதி நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணிவரை வள்ளலார் முக்தியடைந்த சித்தி வளாகத் திருஅறை தரிசனம் நடைபெறும்.

    இதையொட்டி சிறப்பு பஸ் வசதி மற்றும் ரெயில் வசதி செய்யப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பும் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. இதற்காக 1000 போலீ சார் வடலூரில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • தனியார் ஆப் மூலம் ரூ.8,40,000 பரிசு கிடைத்துள்ளதாக தபால் வழியாக மர்ம நபர்கள் மூலம் கூப்பன் அனுப்பினர்.
    • சுதா 27.09.2022 முதல் 27.01.2023 வரை சில தவணைகளாக மொத்தம் ரூ.3,79,100 பணத்தை வங்கியிலிருந்து அனுப்பியுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பெண்ணாடம் பகுதியை சேர்ந்த சுதாவிற்கு கடந்த செப்டம்பர் 27-ந்தேதி தனியார் ஆப் மூலம் ரூ.8,40,000 பரிசு கிடைத்துள்ளதாக தபால் வழியாக மர்ம நபர்கள் மூலம் கூப்பன் அனுப்பினர். அதை உண்மை என்று நம்பிய சுதா அதில் கொடுக்கப்பட்டிருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது சுதாவிடம் பிரேம் குமார் மற்றும் சுனில் குமார் என்ற பெயரில் மர்ம நபர்கள் பேசினர். உடனே அவர்கள் கூப்பனில் உள்ள பரிசு தொகையை பெறுவதற்கு ரிசர்வ் வங்கியில் என்.ஓ.சி பெற வேண்டும் என்று கூறி அதற்கான தொகையை வங்கி கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளனர். 

    இதனையடுத்து சுதா 27.09.2022 முதல் 27.01.2023 வரை சில தவணைகளாக மொத்தம் ரூ.3,79,100 பணத்தை வங்கியிலிருந்து அனுப்பியுள்ளார். பின்னர் போனில் பேசிய நபர்கள் மேலும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால பாதிக்கப்பட்ட சுதா நேஷனல் க்ரைம் ரிப்போர்ட்டிங் கோர்ட்டில் புகார் செய்தார். புகாரின் பேரில் கடலூர் மாவட்ட இணையவழி குற்ற காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×