என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காட்டுமன்னார்கோவில் அருகே நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும்இயக்க கிராம மக்கள் கோரிக்கை
    X

    காட்டுமன்னார்கோவில் அருகே நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும்இயக்க கிராம மக்கள் கோரிக்கை

    • காட்டுமன்னார்கோவில் அருகே நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க கிராம மக்கள் கோரிக்கை
    • இக்கிராம மக்கள் தடம் எண் 257-ல் அரசு பஸ்சினை மீண்டும் இயக்க வேண்டுமென போக்குவரத்து துறையிடம் முறையிட்டனர்..

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகில் கொண்டசமுத்திரம் என்ற உட்கிராமம் உள்ளது. இங்குள்ள மாணவர்கள், நோயாளிகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், விவசாயிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் கிராமத்தில் இருந்து வெகு தூரம் நடந்து வந்து மாமங்கலம் பஸ் நிறுத்தம் வரை சென்று தான் பல ஊர்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தடம் எண் 257-ல் ஒரு அரசு பஸ் இக்கிராமத்திற்கு இயக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பஸ் காட்டுமன்னார்கோவிலில் இருந்து கொண்டசமுத்திரம் வழியாக திருமுட்டத்திற்கு சென்று வந்தது. தொடர் மழையின் காரணமாக இந்த ஊரின் பெரிய வாய்க்காலில் மழைநீர் ஓடியது. இதில் சாலையை இணைக்கும் சிறிய பாலம் மழைநீரில் மூழ்கியது. மேலும், இதற்கு அருகாமையிலேயே புதிய பாலம் கட்டும் பணியும் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

    இதையடுத்து இந்த பஸ் கொண்டசமுத்திரம் கிராமத்திற்குள் செல்லமுடியாததால் மாற்று வழியில் இயக்கப்பட்டது. தற்போது இந்த வாய்க்காலில் நீர் குறைந்து பாலம் தெரிகிறது. இந்த பாலத்தை சீரமைத்து போக்குவரத்திற்கு ஏற்றதாக மாற்றப்பட்டது. இதையடுத்து இக்கிராம மக்கள் தடம் எண் 257-ல் அரசு பஸ்சினை மீண்டும் இயக்க வேண்டுமென போக்குவரத்து துறையிடம் முறையிட்டனர். ஆனால் இந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால் இக்கிராம மக்கள் ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில் வந்து செல்ல நீண்ட தூரம் நடந்து வந்து மாமங்கலத்தில் பஸ் ஏறி செல்கின்றனர். எனவே, காட்டுமன்னார்கோவிலில் இருந்து மாமங்கலம் கொண்டசமுத்திரம் வழியாக திருமுட்டம் செல்லும் அரசு பஸ்சினை மீண்டும் இயக்கவேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் விரைந்து எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×