என் மலர்tooltip icon

    கடலூர்

    2 பெண் பிள்ளைகளுடன் உயிருக்கு பயந்து வாழ்வதாக கலெக்டரிடம் தாய் மனு

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இ

    ன்று திங்கட்கிழமை என்பதால் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் காலை முதல் நடைபெற்று வருகின்றது. இதனையொட்டி கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்து கோரிக்கை மனுவினை அதிகாரிகளிடம் வழங்கி வருகின்றனர். அதிகாரிகள் கோரிக்கை மனுக்களை பெற்று அந்தந்த துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் விருத்தாச்சலம் பெரிய காப்பான்குளம் சேர்ந்தவர் அருள்தாஸ். இவரது மனைவி கற்பகம். தனது 2 மகள்களுடன் பள்ளிச் சீருடையுடன் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனக்கும் எனது கணவர் அருள்தாஸ் என்பவருக்கும் திருமணம் ஆகி இரண்டு மகள்கள் பள்ளியில் படித்து வருகின்றனர். எனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு எங்களை வீட்டில் இருக்கக் கூடாது என கூறி மிரட்டி வருகின்றார். இதன் காரணமாக நாங்கள் உயிருக்கு பயந்து வாழ்ந்து வருகின்றோம். இது தொடர்பாக மகளிர் போலீஸ் நிலையத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் எனது கணவருடன் சேர்ந்து வாழ்வதற்கும், எனது மகள்களின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகாமல் இருப்பதற்கும்  நடவடிக்கை எடுக்க வேண்டும்  இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

    பண்ருட்டி இந்திராகாந்தி சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிரடி நடவடிக்கை

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சிக்கு சொந்தமான பஸ் நிலையத்தில் இருந்து பஸ் வெளியே வரும் இந்திரா காந்தி சாலையில் பெருமளவுக்குஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.அதாவது 100 அடி சாலையானது தற்போது 10 அடியாக குறுகி உள்ளது. எனவே பஸ் நிலையத்தில்இருந்து வெளியே வரும் பஸ் மற்றும் வாகனங்கள் மெதுவாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து பொதுமக்கள் நகர மன்ற தலைவர் ராஜேந்திரனை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர் நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் நகராட்சி ஆணையாளர்மகேஸ்வரி, நகர நில அளவையர்அசோக் குமார்ஆகியோர் இந்திரா காந்தி சாலை பஸ் நிலையம் பகுதியில் நேரில் சென்று ஆய்வு செய்தனர். உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றகிராம மக்கள் கலெக்டரிடம் மனு,

    கடலூர்:

    காட்டுமன்னார்கோவில் பூர்த்தங்குடி, தெ.நெடுஞ்சேரி ஊர் பொதுமக்கள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த னர். அந்த மனுவில் கூறியி ருப்பதாவது   காட்டுமன்னார்கோயில் பெட்ரோல் பங்க் அரு காமையிலும், காட்டு மன்னார்கோயில் நெடுஞ்சாலை ஒரத்திலும் டாஸ்மாக் கடை மற்றும் பார் அமைந்துள்ளது. இங்கு வரும் மதுபான பிரியர்கள் சாலையிலேேய வாகனங்களை நிறுத்தி விடு கின்றனர். மேலும், குடித்து விட்டு மது போதையில் கூச்சலிடுகின்றனர்.  இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அருகாமையில் உள்ள குடியிருப்பு வாசிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மாலையில் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் மாணவ, மாணவியர்கள் பெரிதும் பாதிப்படை கின்றனர். இதனால் டி.நெடுஞ்சேரி முதல் கந்தகுமாரன் வரை அதிகளவில் வாகன விபத்துக்கள் நடக்கின்றன. இந்த மதுபான கடை டி.நெடுஞ்சேரி ஊராட்சி எல்லைக்கு உட்பட்டது. இடப்பற்றாகுறை காரண மாக பூர்த்தங்குடி ஊராட்சி யில் முறை கேடாக இயங்கி வருகின்றது. இந்த டாஸ்மாக் கடையை நிரந் தரமாக எங்கள் ஊராட்சியில் இருந்து இட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


    • மகன் இறந்த துக்கத்தில் தந்தை விஷம் குடித்து தற்கொலை.
    • மகன் இறந்த சோகத்தில், நிலத்திற்காக வாங்கி வைத்திருந்த மருந்தினை எடுத்து அன்பழகன் குடித்துவிட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி பெரிய காட்டுப் பாளையத்தை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 56). விவசாயி. இவருக்கு 2 மகன்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இவரது இளைய மகன் விபத்தில் பலியானர். மகன் இறந்த தூக்கத்தில் தந்தை அன்பழகன் மதுவுக்கு அடிமையானார்  தைப்பூச தினமான நேற்று மகனின் நினைவு அவருக்கு மீண்டும் வந்தது. ஒவ்வொரு தைப்பூச தினத்தன்றும் அப்பாவிடம் காசு வாங்கிக் கொண்டு வடலூர் செல்வாயே, இன்று நீ இல்லையே என்று அழுது கொண்டே புலம்பியுள்ளார். இவரது பெரியமகன் மற்றும் மனைவி 2 பேரும் அன்பழகனுக்கு ஆறுதல் கூறினர்.

    சிறிது நேரம் கழித்து இவரது மகனும், மனைவியும் வீட்டிலிருந்து வெளியில் சென்றனர். மகன் இறந்த சோகத்தில், நிலத்திற்காக வாங்கி வைத்திருந்த மருந்தினை எடுத்து அன்பழகன் குடித்துவிட்டார். சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த மனைவி கணவன் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் பூவராகவன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருத்தாசலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    கடலூர்:

    எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ., மற்றும் பிற தேசிய மயமாக்கப்பட்ட வங்கி களை முதலீடு செய்ய நிர்ப்பந்தித்தது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும், முதலீட்டாளர்களை பாதுகாக்க சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்திருந்தது.

    அதன்படி கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் விருத்தாசலம் எம்.எல்.ஏ.வுமான ராதா கிருஷ்ணன் தலைமை யில் விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கடலூர் ரோட்டில் அமைந்துள்ள எஸ்.பி.ஐ., வங்கி கிளை முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

    • இந்த மாற்றத்தினால் கடலூர் மாவட்டம் முழு வதும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது.
    • பல்வேறு நோய் தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.

    கடலூர் :

    தமிழகத்தில் கடந்து சில நாட்களுக்கு முன்பு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. கடலில் காற்று அதிகம் இருந்ததால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல அனுமதிக்கவில்லை. தற்போது கடல் பகுதியில் அமைதி திரும்பியது. என்றாலும் கடலூர் மாவட்டத்தில் திடீர் என பருவநிலை மாறி உள்ளது. இந்த மாற்றத்தினால் கடலூர் மாவட்டம் முழு வதும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. இந்த கடும் குளிர் கடலூர் நெல்லிக்குப்பம் பண்ருட்டி விழுப்புரம் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் சாலைகளில் பனிமூட்டம் அடர்ந்த புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

    இதனால் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் செல்வோர் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் முகப்பு விளக்கை எரிய விட்டபடி கடும் குளிரில் நடுங்கியபடி எப்போது விபத்து ஏற்படும் என்ற அச்சத்துடன் வாகனங்களை ஓட்டி செல்கிறார்கள்.  குறிப்பாக கடலூரில் இருந்து பண்ருட்டி செல்லும் சாலையில் கடுங்குளிர் வாட்டி வதைகிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கடுங்குளிரை தாங்காமல் பெரும் சிரமப்பட்டு செல்கிறார்கள்.  இந்த கடும் குளிரால் அவர்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய் தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும் கடலூர் மாவட்டம் முழுவதும் வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் வயதானோர் இந்த குளிரால் ஏற்படும் உடல் நடுக்கத்தை தாங்க முடியாமல் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர் அலுவல கத்திற்கு செல்லும் பணி யாளர்கள் அதிகாலை நேரத்தில் இந்தக் கடுங்குளிரிலும் குளிர்ந்த தண்ணீரில் குளித்து விட்டு செல்கின்றனர்.இந்த தண்ணீரால் அவர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கடலூர் மாவட்ட பொதுமக்கள் அனைவரும் ஏற்படும் கடும் குளிரிலிருந்து ஸ்வெட்டர் அணிந்து செல்கிறார்கள். எனவே பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய உடல் நல பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    • நடந்து செல்லும் பொது மக்கள் சாலைகளில் நீண்ட நாட்களாக உள்ள பள்ளத்தால் முகம் சுழித்து மன வேதனைஅடைகின்றனர்.
    • வாகன ஓட்டிகளுக்கு நோய்வாய் ஏற்படும் வாய்ப்பு அளவுக்கு அதிகமாக உள்ளது

    கடலூர்:

    தமிழகத்தில் 108 வைணவ தலங்களில் முதன்மையான திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் உள்ளது. இதுதவிர திருப்பாடல் பெற்ற பாடலீஸ்வரர் கோவிலும் இங்கு உள்ளது.இப்படிப்பட்ட அற்புத ஸ்தலங்களால் அமையப் பெற்றது கடலூர் மாவட்டம். மேலும் கடலூர் மாநகராட்சியாக மாற்றப்பட்டு பொது மக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் பல்வேறு நடவடிக்கைகள் அதிகாரி களால் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.   மேலும் கடலூரில் சில்வர் பீச், பெரிய மால் எண்ணிலடங்காத சிறிய மற்றும் பெரிய அளவிலான விலை குறைந்த விலை அதிகமான பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் வேறு எந்த பகுதியை காட்டிலும் கடலூர் மாவட்டம் முதன்மையாக உள்ளது. மேலும் விழுப்புரம், திண்டிவனம், சென்னை, திருவண்ணாமலை, விருத்தாச்சலம், சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கடலூர் மாவட்டம் வழியாகத்தான் செல்ல முடியும். மேலும் கடலூர் துறைமுக பகுதி, தேவனாம்பட்டினம் பல்வேறு மீனவ குடும்பங்க ளுக்கு வாழ்வாதாரமாக உள்ளது.

    இப்படிப்பட்ட பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய கடலூர் மாவட்டத்தில் சாலைகளில் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொது மக்கள் சாலைகளில் நீண்ட நாட்களாக உள்ள பள்ளத்தால் முகம் சுழித்து மன வேதனை அடைந்துள்ளனர். குறிப்பாக கடலூரில் இருந்து முதுநகர் மற்றும் கடலூரில் இருந்து புதுவை மாநிலத்திற்கு செல்லக்கூடிய சாலை மிக மோசமாக நீண்ட நாட்களாக குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். சாலை மிகவும் சேதம் அடைந்து பெரும் பள்ளங்களாக உள்ளதால் அதில் செல்லக்கூடிய வாகனங்களால் சிறிது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.  மேலும் சாலையிலிருந்து வரும் புகையினால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு நோய்வாய் ஏற்படும் வாய்ப்பு அளவுக்கு அதிகமாக உள்ளது. இந்த சாலையில் ஏற்படும் பள்ளத்தினால் வாகனங்களும் பெரிதும் சேதமடைகிறது  நீண்ட நாட்களாக சாலையில் உள்ள பள்ளங்களை சரி செய்ய பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தும் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது பொதுமக்கள் மத்தியில் வேதனை அளிக்கிறது. எனவே அதிகாரிகள் இதில் தனிக்கவனம் செலுத்தி சாலைகளில் உள்ள குண்டு குழியுமாக உள்ள பெரிய பள்ளங்களை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுகின்றனர்.

    • முதல் முறையாக தேர்வாணையம் இத்தேர்வினை தமிழ் வழியிலும் எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 10,000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் பால சுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது- கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 10,000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான கல்வித் தகுதி10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். மேலும் முதல் முறையாக தேர்வாணையம் இத்தேர்வினை தமிழ் வழியிலும் எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்காலி யிடங்களுக்கு தேர்வாணைய இணையதளம் வாயிலாக 17.02.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

    இத்தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்ப தாரர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 07.02.2023 அன்று தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை நடத்தப்படும். எனவே இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது விவரத்தினை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் 9499055908 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டோ பதிவு செய்து இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    • நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளியில் 350 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
    • அனைத்து அடிப்படை வசதிகளும் உடனடியாக செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடலூர்

    கடலூர் மாவட்டம், வேப்பூா் அடுத்த கீழக்குறிச்சி கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த நடுநிலை பள்ளியில் சுமார் 164 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி கடந்த 2008-ம் ஆண்டு உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தபட்டது. அதன்படி நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளியில் 350 மாணவர்கள் பயின்று வருகின்றனர். உயர்நிலை பள்ளிக்கு போதுமான கட்டிட வசதி இல்லாததால் மழை, வெய்யில் காலங்களில் நடுநிலை பள்ளி வளாகத்தில் 9,10-ம் வகுப்பு மாணவர்களும் பயின்று வருகின்றனர். மேலும், இந்த பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், அந்த நிதியை பயன்படுத்தி கட்டிடம் மற்றும் வசதிகள் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    இந்த பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம், கழிவறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாததால் பள்ளி மாணவ, மாணவிகள் கடும் அவதிப்படுகின்றனர். இது தொடர்பாக கிராம மக்கள் சார்பில் கிராம சபை கூட்டத்தின் வாயிலாகவும், பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைத்தும் அரசு அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது அந்த பள்ளியில் மாணவ, மாணவிகள் எங்கள் பள்ளிக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் உடனடியாக செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். எங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றாத பட்சத்தில் கிராம மக்களோடு ஒன்றிணைந்து சாலைமறியலில் ஈடுபட உள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

    • அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர்.
    • இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அண்ணா மலைநகர் போலீஸ் சரகம் வடக்கிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். (வயது 54). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வேலைக்கு புறப்பட்டார். ஆனால் இரவுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அண்ணாமலைநகர் டாஸ்மாக் கடை அருகே கிருஷ்ணராஜ் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல்அறிந்த அண்ணா மலைநகர் போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். அப்ேபாது கிருஷ்ணராஜ் பிணமாக கிடந்தார். அவர் குடிபோதையில் சுருண்டு விழுந்து இறந்து இருப்பது தெரிய வந்தது. உடனே உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கான அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    • மேலும் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.
    • மேலும் 2 முறை திருட்டு முயற்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

    கடலூர்:

    கடலூர் அருகே எஸ்.குமராபுரத்தில் பிரசித்தி பெற்ற 41 அடி காரிய சித்தி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. நேற்று வழக்கம்போல் இரவு பூஜை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றனர். இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இதில் கோவில் வளாகத்தில் இருந்த சாமி அறை மற்றும் மற்றொரு அறை பூட்டு உடைக்கப்பட்டு அறை கதவு திறந்திருந்தது. மேலும் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. இதனைத் தொடர்ந்து நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்திரவேல் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் ஒரு கிலோ வெள்ளி பூஜை பொருட்கள் மற்றும் சாமி நெற்றியில் இருந்த 1 1/2 பவுன் தங்க நகை மற்றும் 15 ஆயிரம் ரொக்க பணம் திருடி சென்றது தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் 1 1/2 லட்சமாகும்.

    ஆனால் சாமி சிலைகளை மர்ம நபர்கள் திருடி செல்லாமல் சென்றனர். மேலும் தடவியல் நிபுணர் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். மேலும் போலீஸ் மோப்பநாய் கோவிலுக்கு வரவழைத்து மோப்பம் பிடித்து அந்த பகுதியில் உள்ள சுடுகாடு வரை சென்று நின்றது. இந்த நிலையில் கோவிலில் கடந்த 3 முறை மர்ம நபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதில், ஒரு முறை ஆஞ்சநேயரிடம் இருந்த வெள்ளி பூணூலை திருடி சென்றனர். மேலும் 2 முறை திருட்டு முயற்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.  தற்போது நேற்று நள்ளிரவு 4-வது முறையாக மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்டதில் கோவிலில் இருந்த வெள்ளி பொருட்கள், தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை திருடி சென்றது பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இக்கோவில் சாலை ஓரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நிலையில் திருடு சம்பவம் நடந்தது அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை உள்ளது.
    • காலை 6 மணிக்கு 7 திரை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது.

    கடலூர் மாவட்டம் வடலூர் பார்வதிபுரம் கிராமத்தில் உள்ள அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச விழா ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

    இந்த ஆண்டு 152 ஆண்டு தைப்பூச விழாவாக நடைப்பெற்றது. இதன் தொடக்கமாக கடந்த 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தருமச்சாலையில் மகாமந்திரம் ஓதப்பட்டது, 31-ந்தேதி முதல் பிப்ரவரி 3-ந் தேதி வரை ஞான சபையில் அருட்பா முற்றோதல் நடைபெற்றது.

    நேற்று (4-ந்தேதி) காலை 5 மணி மணிக்கு அகவல் பாராயணமும், 7.30 மணிக்கு வள்ளலார் பிறந்த மருதூர், தண்ணீ ரால் விளக்கு எரித்த கருங்குழி யிலும். வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தி லும், தருமச்சாலையிலும் சன்மார்க்க கொடி ஏற்றம் நடைபெற்றது, ஞானசபையில் கொடி ஏற்றம் காலை 10 மணிக்கும் பார்வதிபுரம் கிராம மக்கள் சார்பில் நடைபெற்றது, இரவு தருமச்சாலை மேடையில் சன்மார்க்க சொற்பொழிவும் கலை நிகழ்ச்சிகளும் நடை பெற்றது.

    தைப்பூச திருவிழாவை இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு 7 திரை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது.

    அப்போது சன்மார்க்க அன்பர்கள் பக்தி பரவசத்துடன் அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி என்கிற மகாமந்திர ஒலி ஞானசபை திடல் எங்கும் ஓங்கி ஓலித்தது.

    இதனை காண தமிழகம் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள், லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் திரண்டு வந்து ஜோதி தரிசனம் பார்த்தனர், மேலும், வெளிநாட்டினரும் வடலூருக்கு வந்து ஜோதி தரிசனம் செய்தனர்.

    இதையடுத்து இன்று காலை 10 மணிக்கு தருமச்சாலை மேடையில் சிறப்பு நிகழ்வுகள் மாவட்ட அறநிலையத் துறையின் அதிகாரி முன்னிலையில் சன்மார்க்க அறிஞர்கள் உரையாற்றினார்கள்.

    அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், அறநிலை யத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட உயர் அதிகாரிகள் உட்பட பலர் ஜோதி தரிசனம் பார்த்தனர்.

    இதனை தொடர்ந்து இன்று காலை 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10மணி நாளை காலை 5.30 மணிக்கும் 7 திரை நீக்கி ஜோதி தரிசனம் நடக்கிறது.

    வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை தரிசனம் வருகிற 7-ந் தேதி பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பத்தில் நடை பெற உள்ளது.

    அப்போது வடலூர் ஞான சபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டியை பூக்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க வள்ளலார் சித்திபெற்ற திருஅறை உள்ள மேட்டுக்குப்பம் கொண்டு செல்லப்படும். அங்கு பக்தர்கள் வழி பாட்டுக்கு பின்னர் மீண்டும் வடலூர் கொண்டு வரப்படும்.

    தைப்பூச திருவிழாவையொட்டி பல்வேறு சன்மார்க்க சங்கத்தினர்களால் சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சி. நாடகம் உள்ளிட்ட பல கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வநிலையம் உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் ராஜா சரவணக்குமார் மற்றும் பார்வதிபரம், மேட்டுக்குப்பம், கருங்குழி, மருதூர் கிராம மக்கள் செய்திருந்தனர். விழாவினை முன்னிட்டு 700 போலீசார், 200 ஊர்க்காவல் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ×