சிதம்பரம் அருகே குடிபோதையில் தொழிலாளி சுருண்டு விழுந்து சாவு

அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சிதம்பரம் அருகே குடிபோதையில் தொழிலாளி சுருண்டு விழுந்து சாவு
Published on

கடலூர்: 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அண்ணா மலைநகர் போலீஸ் சரகம் வடக்கிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். (வயது 54). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வேலைக்கு புறப்பட்டார். ஆனால் இரவுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அண்ணாமலைநகர் டாஸ்மாக் கடை அருகே கிருஷ்ணராஜ் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல்அறிந்த அண்ணா மலைநகர் போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். அப்ேபாது கிருஷ்ணராஜ் பிணமாக கிடந்தார். அவர் குடிபோதையில் சுருண்டு விழுந்து இறந்து இருப்பது தெரிய வந்தது. உடனே உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கான அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com