என் மலர்
கடலூர்
- இன்று அதிகாலை பண்ருட்டியில் வழக்கத்தை விட பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது.
- பனியின் தாக்கத்தால் காலையில் நடைபயிற்சி செல்பவர்கள், குழந்தைகள், முதியவர்கள் வீட்டுக்குள் முடங்கினர்/
கடலூர்:
தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். இதன் பின்னர் மார்ச் மாதம் கோடை காலம் தொடங்கும். இதற்கு இடைப்பட்ட காலமான ஜனவரி, பிப்ரவாி மாதங்களில் குளிரும், பனிப்பொழிவும் நிலவும். இந்த நிலையில் வழக்கம் போல வடகிழக்கு பருவமழை கடந்த டிசம்பர் மாதம் வரை பெய்து ஓய்ந்த நிலையில், குளிர்காலம் தொடங்கியது. அதன் பின்னர் வளிமண்டல சுழற்சி காரணமாக அடிக்கடி மழையும் பெய்து வந்தது. தமிழகத்தை பொறுத்தவரை தை மாதத்தில் இருந்து பனியின் தாக்கம் மெல்ல மெல்ல குறையும். கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிக்குப்பம் பண்ருட்டி, புவனகிரி, சிதம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு முதல் அதிகாலை வரை கடுங்குளிர் நிலவி வருகிறது. காலை மற்றும் இரவு நேரங்களில் பனிப்பொழிவு இருந்தாலும் மதியம் அடிக்கக்கூடிய வெயில் இதமானதாக இருக்கிறது ஆனால் இன்று அதிகாலை பண்ருட்டியில் வழக்கத்தை விட பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. பண்ருட்டியில் இருந்து நெய்வேலி, வடலூர் ,கும்பகோணம், தஞ்சை செல்லும் சாலை, பண்ருட்டி -சென்னைசாலை, பண்ருட்டி-கடலூர்சாலை, பண்ருட்டி சேலம் சாலை, பண்ருட்டி - அரசூர் சாலைகளில் அதிக அளவு பனிமூட்டம் காணப்பட்டது.இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படியும், குறைந்த வேகத்தில் சென்றதையும் காண முடிந்தது. பனியின் தாக்கத்தால் காலையில் நடைபயிற்சி செல்பவர்கள், குழந்தைகள், முதியவர்கள் வீட்டுக்குள் முடங்கினர். குளிர்ச்சியான சீதோஷன நிலையால் வீடுகளில் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய் உறைநிலைக்கு சென்றதுனிப்பொழிவு குறையும் காலத்தில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால் வீடுகளில் இரவு நேரத்தில் பொதுமக்கள் மின்விசிறி பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். மேலும் பகல் நேரம் தவிர காலை மற்றும் மாலை, இரவு நேரங்களில் வெளியே வரும்போது குழந்தைகள், பெண்கள் உள்பட பெரும்பாலானோர் சுவெட்டர், குல்லா போன்ற குளிர்தடுப்பு ஆடைகளை அணிந்து கொண்டே வெளியே வருகின்றனர். இந்த ஆண்டு வெயில், மழை, பனிப்பொழிவு என மாறி, மாறி வருவதால் பலர் சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பண்ருட்டி பகுதியில் இன்று பனிப்பொழிவு அதிகரித்து காணப்பட்டது இதனால் அதிகாலையில் பாதசாரிகள் நடந்து செல்லவும், இருசக்கர வாகனங்களில் சென்றவர்களும் சிரமப்பட்டனர். கார்கள், வேன்கள், லாரிகள்,பஸ்கள் மிகுந்த சிரமத்துடன் பயணத்தை தொடர்ந்தனர் ெரயில் நிலைய வளாகம் பனிப்பொழிவால் நிரம்பிருந்தது. காலையில் வந்த எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ெரயில்கள் கடும் பனிமூட்டத்துக்கு இடையே ரெயில் நிலையத்துக்குள் வந்து சென்றன. இதேபோல் சிதம்பரத்திலும் இன்று அதிகளவு பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள். சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரம் தெரியாத வகையில் பனிப்பொழிவு காணப்பட்டது.புவனகிரி பகுதியிலும் பனிப்பொழிவு அதிகளவில் காணப்பட்டது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றன.
- குடும்ப பிரச்சனை காரணமாக சத்குருவிற்கும் தனலட்சுமிக்கும் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
- பிரச்சனை காரணமாக சத்குரு நேரடியாக பிரகாஷின் வீட்டிற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
கடலூர்:
கடலூர் செல்லங்குப்பம் வெள்ளிப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 35). இவரது மனைவி தமிழரசி (31). இவர்களுக்கு ஹாசினி என்ற 4 மாத குழந்தை உள்ளது. தமிழரசியின் தங்கை தனலட்சுமி, இவரது கணவர் சற்குரு. இவர்களுக்கு 6 மாத ஆண் குழந்தை உள்ளது.
இதில் சற்குரு, தனலட்சுமி ஆகியோர் கடலூர் தேவனாம்பட்டினத்தில் வசித்து வந்தனர். இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக சற்குருவிற்கும், தனலட்சுமிக்கும் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு தனலட்சுமி அவரது அக்கா தமிழரசி வீட்டிற்கு வந்தார்.
இதன் பின்னர் இன்று காலை பிரகாஷ் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். அப்போது வீட்டில் இருந்த தனலட்சுமியிடம் சற்குரு போனில் பேசினார். பின்னர் சற்குருவுக்கும், தனலட்சுமிக்கும் இடையே உள்ள பிரச்சினை காரணமாக சற்குரு நேரடியாக பிரகாஷின் வீட்டிற்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் சிறிது நேரத்தில் இவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது.
உடனே சற்குரு தான் வந்த மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை எடுத்து வீட்டில் இருந்தவர்கள் மீது வீட்டை பூட்டி கொண்டு பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். பின்னர் தன் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். சிறிது நேரத்தில் அந்த இடம் முழுவதும் தீயினால் புகை மண்டலமாக காணப்பட்டது.
இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து கடலூர் முதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த முதுநகர் போலீசார் ஆபத்தான நிலையில் அவர்களை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த தீ விபத்தில் தமிழரசி அவரது குழந்தை ஹாசினி, மற்றும் 6 மாத ஆண் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. மேலும் தீ விபத்தில் படுகாயம் அடைந்த சற்குரு அவரது மனைவி தனலட்சுமி, தனலட்சுமியின் தாய் செல்வி ஆகியோரை ஆபத்தான நிலையில் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.
- மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசனம் நடைபெற்றது.
- லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இறைவன் ஜோதி வடிவானவன் என்பதை உலகுக்கு உணர்த்திய ராமலிங்க அடிகளார், கடலூர் மாவட்டம் வடலூரில் சத்தியஞான சபையை நிறுவினார். இங்கு மாதந்தோறும் பூச நட்சத்திரத்தன்று 6 திரைகள் மட்டும் விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். ஆனால் தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தன்று 7 திரைகளையும் விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். இந்த ஆண்டு தைப்பூச விழா கடந்த 5-ந்தேதி கோலாகலமாக நடைபெற்றது.
இதில் 6 காலங்களில் நடந்த ஜோதி தரிசனத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதன் தொடர்ச்சியாக வள்ளலார் சித்திப்பெற்ற மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசனம் நேற்று நடைபெற்றது. இங்குள்ள ஒரு அறைக்கு உள்ளே சென்ற வள்ளலார், உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு, அங்கு சித்தி பெற்றார். அந்த அறை திறக்கப்பட்டு, தீபம் காண்பிப்பதே திருஅறை தரிசனம் என்று அழைக்கப்படுகிறது.
அதன்படி நேற்று மேட்டுக்குப்பத்தில் நடந்த திருஅறை தரிசனத்துக்காக, வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய (பேழை) பெட்டியை சத்திய ஞானசபையில் இருந்து பூக்களால் அலங்கரித்து காலை 6 மணிக்கு தூக்கிக்கொண்டு ஊர்வலமாக புறப்பட்டனர். மேட்டுக்குப்பத்தில் உள்ள திருமாளிகையை ஊர்வலம் சென்றடைந்தது. இதை தொடர்ந்து திருஅறை தரிசனம் தொடங்கியது. திருஅறை முன்பு திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை 5 மணி வரை திரு அறை தரிசனம் நடைபெற்றது
- இந்தபூங்காவில் உள்ள பெரும்பாலான விளையாட்டு பொருட்கள் உடைந்து உள்ளன.
- விளையாட்டு பொருட்களால் சிறுவர்களின் உயிரை காவு வாங்குவதற்கு தயாராகவே விளையாட்டு பொருட்கள் அமைக்கப்பட்டது
கடலூர்:
கடலூர் பாரதி சாலையில் மிகவும் பிரபலமான பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் சிறுவர்கள் விளையாடுவதற்கு ஊஞ்சல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு பொருட்கள் மற்றும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பூங்கா சுற்றி நடப்பதற்கு நடை பாதைகள் மற்றும் பூங்காவிற்குள் அனைவரும் இளைப்பாற மரங்கள் நடப்பட்டு உள்ளன.
தற்போது இந்தபூங்காவில் உள்ள பெரும்பாலான விளையாட்டு பொருட்கள் உடைந்து உள்ளன. அதோடு நடைபாதைகளில் உள்ள கற்கள் முழுவதும் சிதைந்து குண்டும் குழியுமாக காட்சியளித்து வருகின்றன.
இது மட்டும் இன்றி பூங்காவில் உள்ள கட்டிடம் சிதலமடைந்து பயனற்ற நிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்த பூங்காவிற்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்லும் போது 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால் கட்டணம் வசூலிப்பது ஏற்றவாறு உள்ளே எந்த வித வசதியும் ஏற்படுத்தவில்லை. அது மட்டும் இன்றி தினந் தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் பூங்கா விற்கு வந்து விளையாட்டுப் பொருட்களில் விளையாட செல்ல நேர்ந்தால் அங்கு உடைந்திருக்கும் விளையாட்டு பொருட்களால் சிறுவர்களின் உயிரை காவு வாங்குவதற்கு தயாராகவே விளையாட்டு பொருட்கள் அமைக்கப்பட்டது போல் உள்ளது என பெற்றோர்கள் குமுறி வருகின்றனர்.
இதற்காக விளையாட்டுப் பொருட்களில் விளையாடாமல் பூங்காவில் ஓடிப் பிடித்தும், கண்ணாம்பூச்சி போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை கட்டணம் செலுத்தி சிறுவர்கள் விளையாடுவதோடு உடைந்த விளையாட்டுப் பொருட்களில் பெற்றோர்களின் பாதுகாப்புடன் சிறிது நேரம் மனம் நொந்தபடி விளையாடி செல்வதை காண முடிந்தது. மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகளில் நடக்கும் போது அடிக்கடி கீழே விழுவதும், பெரியோர்களுக்கு மூட்டு வலி ஏற்படுவதும், விழுவதால் உடலில் காயம் ஏற்படுவதும் அடிக்கடி நிகழும் சம்பவமாக உள்ளது இது தொடர்பாக அங்குள்ள நபர்களிடம் இது தொடர்பாக கேட்டால் 5 ரூபாய்க்கு இந்த வசதி தான் செய்ய முடியும். விருப்பம் இருந்தால் வரவும் இல்லை என்றால் வேறு இடத்திற்கு செல்லுங்கள் என கறாராக கூறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் மேலும் கடலூர் மையப் பகுதியில் அமைந்துள்ள கட்டண வசூலிக்கப்படும் பூங்காவில் அடிப்படை வசதிகளான சிறுவர்களுக்கு விளையாட்டு பொருட்கள், அனைவரும் நடந்து செல்லும் வகையிலான நடைபாதைகள் மற்றும் அவசர தேவைக்காக கழிவறை வசதி எதுவும் இல்லாமல் இது போன்ற பூங்காக்களால் ஏதேனும் சிறுவர்களுக்கு உயிர் பலி நேரிட்டால் இதற்கு யார் பதில் கூறுவார்கள்? உயிரிழப்பு ஏற்பட்ட பிறகு அதிகாரிகள் வருங்காலங்களில் இது போன்ற நிகழ்வு நடக்காது? இதற்கான முழு நடவடிக்கை எடுப்போம் என வாசகங்களை அடுக்கிக் கொண்டு சொல்வதோடு அனைவரின் உயிரும் மிக முக்கியம் என கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக பூங்காவை ஆய்வு செய்து இதற்கான நிரந்தர நடவடிக்கை எடுப்பார்களா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
ஆனால் இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை என பொதுமக்கள் ஒருபுறம் தெரிவித்தாலும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை ஆகும் .
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என பொறுத்திருந்து பார்ப்போம்.
கடலூர்:
கடலூர் மையப்பகுதியில் அமைந்துள்ளது மஞ்சக்குப்பம் மைதானம். இந்த மஞ்சக்குப்பம் மைதானம் என்பது தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தலைவர்களுக்கு மிகவும் பரிச்சியமானது என அனைவரும் அறிந்ததாகும். மேலும் அனைத்து தலைவர்களின் கட்சிகளின் கூட்டமும் இந்த மைதானத்தில் நடைபெறுவது வழக்கம் கடலூர் மையப் பகுதியில் இந்த மைதானம் அமையப்பெற்றதால் தினந்தோறும் ஆயிரக்க ணக்கான பொதுமக்கள் இவ்வழியாக சென்று வருவதோடு மாலை நேரங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மைதானத்தில் காற்றோட்டமாக அமர்ந்து பேசி செல்வது வழக்கம்.
இந்த மைதானம் அவர்களுக்கு மட்டும் ஏற்ற இடம் இல்லை. மது பிரியர்களான எங்களுக்கும் இந்த காற்றோட்டமான மைதானம் என்பது எந்தவித டென்ஷனும் இல்லாமல் அமைதியாக தங்கள் நண்பர்களுடன் அமர்ந்து குடிப்பதற்கு ஏற்ற இடமாக அமைந்துள்ளது என்பதனை குறிப்பது போல் தினந்தோறும் குடிபிரியர்கள் இங்கு அமர்ந்து மது குடித்து சென்று வருகின்றனர் இதன் காரணமாக மஞ்சகுப்பம் மைதானத்தில் தற்போது மது பாட்டில்கள் அதிக அளவில் படர்ந்து சூழ்ந்து உள்ளன. மேலும் மைதானத்தில் வாகனத்தில் செல்பவர்கள் மது பாட்டில்களின் மீது ஏற்றி செல்வதால் மது பாட்டில்கள் முழுவதும் உடைந்து கண்ணடி துகள்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றது மேலும் ஒரு சில மது பிரியர்கள் அதிக போதை காரணமாக மைதானத்தில் மது பாட்டில்களை உடைத்து வீசி செல்வதால் நடந்து செல்லும் பொது மக்களுக்கு அடிக்கடி காயம் ஏற்பட்டு வருவதையும் காண முடிந்தது.
மேலும் இரவு நேரங்களில் இவ்வழியாக செல்லக்கூடிய பெரும்பாலான மோட்டார் சைக்கிள் பஞ்சர் ஆகி பாதிப்பை உண்டாக்குவதும் இருந்து வருகின்றது.
இந்த நிலையில் இந்த மஞ்சகுப்பம் மைதானம் சுற்றியும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் இருந்த போதிலும் மதுபிரியர்கள் தங்களுக்கான மைதானமாக மாற்றியது அனைவரையும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சி யையும் ஆழ்த்தியுள்ளது.
ஆகையால் இரவு நேரங்களில் போலீசார் வாகன ரோந்து பணியில் ஈடுபட்டு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் அருகே புதுச்சேரி மாநிலம் உள்ளதால் அங்குள்ள மது பாட்டில்கள் விலை குறைவாகவும் மற்றும் சாராயம் விற்பனை செய்வதால் தமிழகப் பகுதியில் இருந்து தினந்தோறும் ஏராளமான மது பிரியர்கள் புதுவை மாநில பகுதிக்கு சென்று மது அருந்தி வருகின்றனர் இதன் காரணமாக கடலூர் அருகே உள்ள புதுவை மாநில எல்லையில் உள்ள சாராயக்கடை உரிமையாளர்கள் கடந்த சில வருடங்களாக மது பிரியர்களுக்காக இலவசமாக ஷேர் ஆட்டோ வசதி ஏற்படுத்தினர் தென் பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போது இலவச படகு சவாரி, சிறிய மரப்பாலம், தண்ணீர் செல்லாத போது மண் சாலை அமைத்து மதுபிரியர்கள் எளிதாக சாராயக்கடைக்கு சென்று மது குடிப்பதற்கு ஏதுவாக அமைத்தனர்.
இதன் காரணமாக கடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை குறையும் நிலை ஏற்பட்டது. மேலும் மது பிரியர்கள் புதுவை மாநிலத்திற்கு சென்று மது குடிக்காமல் தடுப்பதற்கு போலீசார் சோதனைச் சாவடிகள் அமைத்து கடும் நடவடிக்கையும் மேற்கொண்டு வருகின்றனர்.தென்பெண்ணை ஆற்றில் பாதி பகுதி புதுவை மாநிலத்திற்கும், பாதி பகுதி தமிழக பகுதிக்கும் சொந்தமானது என்பதால் சாராயக்கடை உரிமையாளர்கள் புதுவை மாநில பகுதிகளில் மண்சாலை, சிறிய பாலம் போன்றவற்றை உருவாக்கி தயார் நிலையில் வைத்துள்ளனர்மேலும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ,வருவாய்த்துறை அதிகாரிகள் கண்ணி இமைக்கும் நேரத்தில் தங்களுக்கு தேவையான சாலை வசதிகளை மேம்படுத்தி மது பிரியர்கள் வந்து செல்வதற்கு சாலை வசதிகளை தயார்படுத்தி விடுகின்றனர் இந்த நிலையில் நெல்லிக்குப்பம் அருகே முள்ளிகிராம் பட்டு பகுதியில் இருந்து தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே நடந்து சென்று புதுவை மாநிலம் மணல்மேடு பகுதியில் உள்ள சாராயக் கடைக்கு எளிதாக செல்லும் வகையில் மண் சாலை அமைக்கும் பணி ஜே.சி.பி. வாகனம் மூலம் விறுவிறுப்பாக நடந்தது
இதனை பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து இது சம்பந்தமாக வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் புகார் அளித்தனர். ஆனால் அவர்கள்சரியான நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் போலீசா ருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் இரவோடு இரவாக சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தமிழகப் பகுதிகளில் தற்காலிகமாக அமைக்க ப்பட்ட மண்சாலையை ஜேசிபி வாகனம் மூலம் அகற்றினார்கள் மேலும்யாரும் செல்லாமல்இருக்க அதிரடியாக பள்ளம் தோண்டப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இவ் வழியாக மது பிரியர்கள் செல்லாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதுடன் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது மட்டும் இன்றி இதற்கான ஏற்பாடுகள் செய்தது யார்? இதில் சாராயக்கடை உரிமையாளர்கள் தலையீடு உள்ளதா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் தமிழகப் பகுதிகளில் ஆற்றில் அத்துமீறி மண் சாலை அமைத்தது தொடர்பாக வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
- சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சிதம்பரம் ராமகிருஷ்ணா வித்யாசாலா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
- கைபேசியை மாணவிகள் கவனமுடன் கையாள வேண்டும்.
கடலூர்:
சிதம்பரம் நகர அனைத்து மகளிர் காவல் துறை சார்பில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சிதம்பரம் ராமகிருஷ்ணா வித்யாசாலா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. தலைமை யாசிரியர் சிவகுரு தலைமை வகித்தார். அனைத்து மகளிர் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் பொன்மகரம் விழிப்புணர்வு உரையாற்றினார்.
மேலும் கைபேசியை மாணவிகள் கவனமுடன் கையாள வேண்டும் என அறிவுரை வழங்கப் பட்டது. நிகழ்ச்சியில் சப் இன்ஸ்பெக்டர் திருபுரசுந்தரி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். பள்ளியில் மாணவிகளுக்கான ஆலோசனைக் குழு அமைக்கப் பட்டது. நிகழ்ச்சி அனுபவம் குறித்த வினா வுக்கு பதில் அளித்த மாண விக்கு பரிசு வழங்கப்பட்டது.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இ
ன்று திங்கட்கிழமை என்பதால் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் காலை முதல் நடைபெற்று வருகின்றது. இதனையொட்டி கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்து கோரிக்கை மனுவினை அதிகாரிகளிடம் வழங்கி வருகின்றனர். அதிகாரிகள் கோரிக்கை மனுக்களை பெற்று அந்தந்த துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் விருத்தாச்சலம் பெரிய காப்பான்குளம் சேர்ந்தவர் அருள்தாஸ். இவரது மனைவி கற்பகம். தனது 2 மகள்களுடன் பள்ளிச் சீருடையுடன் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனக்கும் எனது கணவர் அருள்தாஸ் என்பவருக்கும் திருமணம் ஆகி இரண்டு மகள்கள் பள்ளியில் படித்து வருகின்றனர். எனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு எங்களை வீட்டில் இருக்கக் கூடாது என கூறி மிரட்டி வருகின்றார். இதன் காரணமாக நாங்கள் உயிருக்கு பயந்து வாழ்ந்து வருகின்றோம். இது தொடர்பாக மகளிர் போலீஸ் நிலையத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் எனது கணவருடன் சேர்ந்து வாழ்வதற்கும், எனது மகள்களின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகாமல் இருப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சிக்கு சொந்தமான பஸ் நிலையத்தில் இருந்து பஸ் வெளியே வரும் இந்திரா காந்தி சாலையில் பெருமளவுக்குஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.அதாவது 100 அடி சாலையானது தற்போது 10 அடியாக குறுகி உள்ளது. எனவே பஸ் நிலையத்தில்இருந்து வெளியே வரும் பஸ் மற்றும் வாகனங்கள் மெதுவாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பொதுமக்கள் நகர மன்ற தலைவர் ராஜேந்திரனை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர் நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் நகராட்சி ஆணையாளர்மகேஸ்வரி, நகர நில அளவையர்அசோக் குமார்ஆகியோர் இந்திரா காந்தி சாலை பஸ் நிலையம் பகுதியில் நேரில் சென்று ஆய்வு செய்தனர். உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
கடலூர்:
காட்டுமன்னார்கோவில் பூர்த்தங்குடி, தெ.நெடுஞ்சேரி ஊர் பொதுமக்கள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த னர். அந்த மனுவில் கூறியி ருப்பதாவது காட்டுமன்னார்கோயில் பெட்ரோல் பங்க் அரு காமையிலும், காட்டு மன்னார்கோயில் நெடுஞ்சாலை ஒரத்திலும் டாஸ்மாக் கடை மற்றும் பார் அமைந்துள்ளது. இங்கு வரும் மதுபான பிரியர்கள் சாலையிலேேய வாகனங்களை நிறுத்தி விடு கின்றனர். மேலும், குடித்து விட்டு மது போதையில் கூச்சலிடுகின்றனர். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அருகாமையில் உள்ள குடியிருப்பு வாசிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மாலையில் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் மாணவ, மாணவியர்கள் பெரிதும் பாதிப்படை கின்றனர். இதனால் டி.நெடுஞ்சேரி முதல் கந்தகுமாரன் வரை அதிகளவில் வாகன விபத்துக்கள் நடக்கின்றன. இந்த மதுபான கடை டி.நெடுஞ்சேரி ஊராட்சி எல்லைக்கு உட்பட்டது. இடப்பற்றாகுறை காரண மாக பூர்த்தங்குடி ஊராட்சி யில் முறை கேடாக இயங்கி வருகின்றது. இந்த டாஸ்மாக் கடையை நிரந் தரமாக எங்கள் ஊராட்சியில் இருந்து இட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மகன் இறந்த துக்கத்தில் தந்தை விஷம் குடித்து தற்கொலை.
- மகன் இறந்த சோகத்தில், நிலத்திற்காக வாங்கி வைத்திருந்த மருந்தினை எடுத்து அன்பழகன் குடித்துவிட்டார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பெரிய காட்டுப் பாளையத்தை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 56). விவசாயி. இவருக்கு 2 மகன்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இவரது இளைய மகன் விபத்தில் பலியானர். மகன் இறந்த தூக்கத்தில் தந்தை அன்பழகன் மதுவுக்கு அடிமையானார் தைப்பூச தினமான நேற்று மகனின் நினைவு அவருக்கு மீண்டும் வந்தது. ஒவ்வொரு தைப்பூச தினத்தன்றும் அப்பாவிடம் காசு வாங்கிக் கொண்டு வடலூர் செல்வாயே, இன்று நீ இல்லையே என்று அழுது கொண்டே புலம்பியுள்ளார். இவரது பெரியமகன் மற்றும் மனைவி 2 பேரும் அன்பழகனுக்கு ஆறுதல் கூறினர்.
சிறிது நேரம் கழித்து இவரது மகனும், மனைவியும் வீட்டிலிருந்து வெளியில் சென்றனர். மகன் இறந்த சோகத்தில், நிலத்திற்காக வாங்கி வைத்திருந்த மருந்தினை எடுத்து அன்பழகன் குடித்துவிட்டார். சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த மனைவி கணவன் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் பூவராகவன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ., மற்றும் பிற தேசிய மயமாக்கப்பட்ட வங்கி களை முதலீடு செய்ய நிர்ப்பந்தித்தது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும், முதலீட்டாளர்களை பாதுகாக்க சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்திருந்தது.
அதன்படி கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் விருத்தாசலம் எம்.எல்.ஏ.வுமான ராதா கிருஷ்ணன் தலைமை யில் விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கடலூர் ரோட்டில் அமைந்துள்ள எஸ்.பி.ஐ., வங்கி கிளை முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.






