என் மலர்tooltip icon

    கடலூர்

    • அரசு மருத்துவமனையில் முற்றுகையிட்டு சிகிச்சை சரியான முறையில் அளிக்காமல் கவன குறைவால் உதயகுமார் இறந்ததாக கூறி முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • தொடர்ந்து ஏராளமான போலீசார் அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிக்கப்பட்டனர்.

    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 27). அவரது மனைவி மனிஷா. இவர்களுக்கு 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமண நாளில் இருந்து சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். மேலும் உதயகுமார் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல இருந்தார்.

    இந்த நிலையில் உதயகுமாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடலூர் அரசு மருத்துவமனையில் கடந்த 8-ந்தேதி அறுவை சிகிச்சை செய்வதற்காக சேர்க்கப்பட்டார். நேற்று (10 ந் தேதி) காலை உதயகுமாருக்கு அறுவை சிகிச்சை நடந்தது.

    இன்று (11-ந் தேதி) அதிகாலை உதயகுமாருக்கு திடீரென்று உடல்நிலை மோசமாகி அரசு மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனை அறிந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் 100-க்கும் மேற்பட்டவர்கள் கடலூர் அரசு மருத்துவமனைக்கு திரண்டனர். பின்னர் அரசு மருத்துவமனையில் முற்றுகையிட்டு சிகிச்சை சரியான முறையில் அளிக்காமல் கவன குறைவால் உதயகுமார் இறந்ததாக கூறி முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஏராளமான போலீசார் அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிக்கப்பட்டனர்.

    பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வக்கீல் சிவராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் கூறுகையில், தற்போது உதயகுமாருக்கு 27 வயது ஆகியுள்ளது. இரணைய ஆபரேஷன் செய்த உதயகுமார் ஹார்ட் அட்டாக்கால் இறந்ததாக கூறப்படுகிறது.

    இந்த வயதில் இது போன்ற நிகழ்வு ஏற்படுமா? ஆகையால் உதயகுமாருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மற்றும் செவிலியர்களின் கவனக்குறைவால் அவர் இறந்து உள்ளார். மேலும் இவரது இறப்பில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது.

    மேலும் இவரது பிரேத பரிசோதனை கடலூர் அரசு மருத்துவமனையில் பண்ணாமல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். மேலும் அங்கு பிரேத பரிசோதனை செய்யும் போது வீடியோ பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதனை ஏற்றுக்கொண்டால் எங்கள் போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து போலீசார் இவர்களின் கோரிக்கையை ஏற்றதை தொடர்ந்து இறந்த உதயகுமார் மனைவி மனிஷா, சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் அளித்ததன் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    அரசு, தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆயிரக்கணக்காக மாணவ, மாணவியர் தினமும் வந்து செல்கின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தலைநகராக உள்ளது. இங்கு வயலப்பாடி, அகரம் பாடர், பெறுமுளை, சிறுமுளை, இ.கிரனூர், ஆவினங்குடி, பட்டூர், இடைச்செருவாய், கீழச்செருவாய் போன்ற கிராமங்கள் உள்ளது.இந்த கிராம மக்கள் தங்களுக்கு தேவையான பல்வேறு பொருட்களை வாங்கிச் செல்ல தினமும் திட்டக்குடிக்கு வந்து செல்வர். இது தவிர திட்டக்குடியில் உள்ள அரசு, தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆயிரக்கணக்காக மாணவ, மாணவியர் தினமும் வந்து செல்கின்றனர்.

    மேலும், திட்டக்குடி நகராட்சி, போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம், அரசு ஆஸ்பத்திரிக்கும் ஏராளமான பொது மக்கள் பல்வேறு பிரச்சனையை தீர்த்துக் கொள்ள வருகின்றனர். இது தவிர முகூர்த்த நாட்களில் வழக்கத்தைவிட கூடுதலான பொதுமக்கள் திட்டக்குடிக்கு வருகை தருகின்றனர்இதனால் திட்டக்குடி நகரம் தினமும் அதிகாலையில் இருந்து இரவு வரை எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். அதிலும் குறிப்பாக திட்டக்குடி, ராமநத்தம் மாநில நெடுஞ்சாலையில் மாலை நேரங்களில் அதிக அளவில் கனரக வாகனங்கள், கல்லூரி வாகனங்கள், கரும்பு டிராக்டர்கள், ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள் அதிகளவில் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனால் தினமும் அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், கூலித் தொழிலாளர்கள் தங்களது வீட்டிற்கு செல்ல பஸ்சிற்காக காத்திருக்கின்றனர். ஆனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கிவிடும் அரசு பஸ் தினமும் 1 மணி நேரத்திற்கு மேலாக தாமதமாகவே பஸ் நிலையம் வருகிறது.

    திட்டக்குடியில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீஸ் பிரிவை தனியாக அமைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனை அமைக்காமல் மாவட்ட நிர்வாகமும், போலீஸ் துறையும் காலங்கடத்தி வருகிறது.

    எனவே திட்டக்குடியில் போக்குவரத்து போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும். போக்குவரத்து போலீசாரை வைத்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பொது மக்கள் மற்றும் வாகன ஒட்டிகளில் கோரிக்கையாக உள்ளது.

    • மது போதையில் உறவுக்கார மாணவன் மணி பாலனை (17) அழைத்துச் செல்வதற்காக வந்து உள்ளனர்.
    • இரு சக்கர வாகனத்தில் பட்டாகத்தியை சுழட்டிக்கொண்டு சென்றது தெரியவந்தது.

    கடலூர்:

    ண்ருட்டி, பிப்.11-பண்ருட்டி அருகே புதுப்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சிறு கிராமத்தில்நேற்று மாலை இரண்டு சக்கர வாகனத்தில் குடிபோதையில்கத்தியை சுழட்டிக்கொண்டு சென்ற வர்களை பொதுமக்கள் பிடித்து புதுப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.இதுகுறித்து புதுப்பே ட்டை போலீஸ் இன்ஸ்பெ க்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் அந்தநபர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்விசாரணையில் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் காந்தலவாடி கிராமத்தைச் சேர்ந்ததி வான் (வயது 23)முருகன் ( 23) என தெரிய வந்தது.

    இவர்கள் சமையல் வேலை செய்பவர்கள். மடப்பட்டில் சமையல் வேலை முடித்துவிட்டுமது போதையில் சிறு கிராமத்தில்உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும்தனது உறவுக்கார மாணவன் மணி பாலனை (17) அழைத்துச் செல்வதற்காக வந்து உள்ளனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் பட்டாகத்தியை சுழட்டிக்கொண்டு சென்றது தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து சிறு கிராமத்தை சேர்ந்தமகேஷ்குமார் என்பவர் கொடுத்த புகாரில்புதுப்பேட்டை போலீசார் திவான், முருகன் மீது வழக்கு பதிந்து 2பேரையும் கைது செய்தனர். மாணவன் மணி பாலனுக்கு அறிவுரைக் கூறி எச்சரித்துபெற்றோருடன் அனுப்பிவைத்தனர்.

    • .எஸ்சி. நர்சிங்படித்து வருகிறார்.சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற அந்த மாணவி திடீரென மாயமனார்.
    • கரும்புதோட்டத்தில்பதுங்கி இருந்த ஆட்டோ டிரைவர்சரண்ராஜை சுற்றிவளைத்துபிடித்தனர்.

    கடலூர்:

    விழுப்புரம் அருகே உள்ளநரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி பண்ருட்டியில் உள்ள தனியார் கல்லூரியில்பி.எஸ்சி. நர்சிங்படித்து வருகிறார்.சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற அந்த மாணவி திடீரென மாயமனார்.இதுகுறித்து மாணவியின்பெற்றோர், பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார்செய்தனர். அந்தபுகாரில், தங்களது மகள் பண்ருட்டி எல்.என்.புரம்அய்யனார் கோவில் வழியாக கல்லூரிக்கு சென்று வருவார்அப்போது அதேபகுதியை சேர்ந்த சரண்ராஜ் ( 22 ) என்பவர் ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்றுவிட்டதாக கூறியிருந்தனர்.

    அதன்பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்தங்கவேலு ஆகியோர்வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியையும், அவரை கடத்திச்சென்ற சரண்ராஜ் என்பவரையும் தேடி வந்தனர்.அதனை தொடர்ந்து பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கிவிட்டார்.அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு தலைமையி லானதனிப்படை போலீசார் விசாரரணை நடத்தினர். அப்போது 2 பேரும் தஞ்சையில் இருப்பது தெரிய வந்தது. உடனே பொலீசார் தஞ்சை விரைந்தனர்.அங்கு கரும்புதோட்டத்தில்பதுங்கி இருந்த ஆட்டோ டிரைவர்சரண்ராஜை சுற்றிவளைத்துபிடித்தனர்.விசாரணையில் சரண்ராஜ்க்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்தது. இது போன்று ஆட்டோ டிரைவர் பல பெண்களின் விளையாடியதும் தெரியவந்தது.இதனைத்தொடர்ந்து போக்சோவில் சரண்ராஜை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். கல்லூரி மாணவியை மீட்டு பண்ருட்டி அழைத்து வந்தனர்அதன்பின்னர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்வள்ளி, சப்.இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர் கடத்தப்பட்ட கல்லூரிமாணவியிடம்விசாரணைநடத்தினர். பின்னர் மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தி மகளிர் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    இவரது வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக ராஜேஸ்வரி பணியாற்றி வருகிறார். இவரது தந்தை ராஜாமணி (வயது 65 ). இவர்நேற்று காலை அய்யனார் கோவில்தெருவில் உள்ள அவரது வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லைஅதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ராஜாமணியை பல்வேறு இடங்களில் ேதடினர்.

    எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.இதுகுறித்து பண்ருட்டி போலீசில் ராஜேஸ்வரி புகார்கொடுத்தார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிந்து ராஜாமணி எங்கு சென்றார். என்ன ஆனார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் மாமனாரின் வீட்டில் விருத்தாச்சலத்தில் தங்கியுள்ளார்,

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூர் பார்வதிபுரம் பகுதியில் வாகீசம்பிள்ளை நகரை சேர்ந்தவர் வேலு. இவரது மகன் கிருஷ்ணராஜ். இவர் நெய்வேலி டவுன்ஷிப்பில் கார் உதிரி பாகங்கள் விற்பனை கடை சொந்தமாக வைத்துள்ளார்கிருஷ்ணராஜ் மனைவிக்கு குழந்தை பிறந்து 4 மாதம் ஆன நிலையில் அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் மாமனாரின் வீட்டில் விருத்தாச்சலத்தில் தங்கியுள்ளார்நேற்று காலை வேலு அவரது மனைவியும் தனது சொந்த ஊரான ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளையங்கோட்டையில் உள்ள விவசாய விளை நிலங்களை பார்ப்பதற்காக வீட்டின் கதவை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.

    இதையடுத்து மாலை 4:30 மணிக்கு திரும்பி அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்மேலும் வீட்டிற்குள் சென்று பார்த்து போது பீரோவில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன. மேலும் அதில் இருந்த 5பவுன் நகை, 14,000பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து வடலூர் போலீ ஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது

    தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். 

    காட்டுமன்னார்கோவிலில்செம்மண் ஏற்றிச் செல்லும் லாரிகளால் போக்குவரத்து நெரிசல்:பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதி

    கடலூர்:

    காட்டுமன்னார் கோவி லில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் உள்ளன. சுற்றுவட்டார கிரா மத்திலிருந்து ஏராளமான மாணவர்கள் தினமும் இங்கு வந்து செல்வர், இது தவிர வட்டாட்சியர் அலு வலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பொது மக்கள் வந்து செல்வர். இதனால் காட்டுமன்னார் கோவில் நகரப்பகுதி அதி காலை முதல் இரவுவரை பரபரப்பாக காணப்படும்இங்குள்ள முக்கிய வீதிகளில் சாலைகளை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் உள்ளன.

    கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வரும் நிலையில் காட்டுமன்னார் கோவில் கடைவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.மேலும், சிதம்பரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிக்காக காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள வீரநல்லூர், மாமங்கலம் போன்ற பகுதிகளில் இருந்து கிராவல் செம்மண் எடுக்கப்படுகிறது. இந்த கிராவல் செம்மண் டாரஸ் எனப்படும் பெரிய டிப்பர் லாரிகளில் இரவு பகலாக கொண்டு செல்லப்படுகிறது. குறிப்பாக நிடத்திற்கு ஒரு லாரி சாலையை கடந்து செல்கிறது.க்ஷஇதனால் ஏற்கனவே இருந்ததை விட போக்கு வரத்து நெரிசல் அதிகமாகி விட்டது. இது தொடர்பாக நாளேடுகளில் செய்தி வரும் போது போலீ சார் ஒப்பந்ததாரரை அழைத்து பேசுகின்றனர். ஒரிரு தினங்கள் பள்ளி, கல்லூரி நேரங்களில் லாரிகள் இயக்கப்படாது. பின்னர் தொடர்ந்து இரவு பகலாக லாரிகள் இயக்கப்படும்.

    எனவே, இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், காட்டுமன்னார்கோவில் சாலைகளில் உள்ள ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட வேண்டும். பள்ளி, கல்லூரி நேரங்களில் கிராவல் மண் ஏற்றி செல்லும் லாரிகளுக்கு அபராதம் விதித்து பறிமுதல் செய்ய வேண்டுமென காட்டுமன்னார்கோவில் பொது மக்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் அதிக அளவு ஏற்பட்டு உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
    • அதி காரிகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டு கட்டிடங்கள் இடிக்கப்பட்டது.

    கடலூர்:

    புவனகிரி-விருத்தாசலம் சாலை, புவனகிரி- கடலூர் சாலை மற்றும் ஒரு வழி பாதையான சின்ன தேவாங்கர் தெரு ஆகிய இடங்களில் அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் அதிக அளவு ஏற்பட்டு உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளதுஇது சம்பந்தமாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள், வாகன ஓட்டிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் முதல்-அமைச்சருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது

    இதனை அறிந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, அளவீடு செய்து ஆக்கிரமிப்பு செய்த இடத்தில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்த மான இடம் வரை அம்புக்குறி பெயிண்டால் போடப்பட்டதுஇதனை அகற்றிக் கொள்ள சுமார் 15 நாட்க ளுக்கு முன்பாக அனைத்து கடைக்காரரிடம் கடிதங்கள் கொடுக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான கடைக்கா ரர்கள் முன்பக்கம் இருந்த கீத்து கொட்டகை மற்றும் தகர சீட்டுகள் பொருத்தப்பட்டிருந்ததை அகற்றிக் கொண்டனர். ஆக்கிரமிப்பு செய்து கட்டி வைத்த செங்கல் சுவர் மற்றும் காங்கிரட் தளம் அமைக்கப்பட்டு இருந்ததை அகற்றவில்லை.இதனை அறிந்த நெடுஞ்சாலை துறை அதி காரிகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டு கட்டிடங்கள் இடிக்கப்பட்டது. இதனால் சாலை அதிக அளவில் பொது மக்கள் வாகன ஓட்டிகள் செல்வதற்கு வசதி யாக உள்ளது.


    ஆனால் தார் சாலை ஒட்டியுள்ள மின்கம்பங்களை ஆக்கிரம்புகள் அகற்றிய இடத்தின் ஓரமாக பொருத்தி னால் தார் சாலை மிகவும் அகலமாக இருக்கும். போக்கு வரத்திற்கும் இடை யூறு இல்லாமல் இருக்கும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கூறுகின்ற னர்இதனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி யாக மின்கம்பங்களை அகற்றி விபத்துகளை தவிர்க்கவும், போக்குவரத்திற்கு இடை யூறு இல்லாமல் செய்து கொடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • டீக்கடைகள் உணவகங்கள் பழக்கடை குளிர்பான கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • 2 டீக்கடைகளில் கலப்பட தூள் வைத்திருந்த 2 கிலோ டீ தூள் அழிக்கப்பட்டது,

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நல்லதம்பி, பண்ருட்டி உணவு பாதுகாப்பு அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு உள்ளிட்ட பகுதியில் உள்ள டீக்கடைகள் உணவகங்கள் பழக்கடை குளிர்பான கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது காலா வதியான பொருட்கள், குளிர்பானங்கள், கலப்பட டீ தூள், பழக்கடைகளில் கார்போக்கல் வைத்து பழங்கள் பழுக்க வைக்க படுகிறதா என்பதை குறித்து ஆய்வு மேற்கொண்டனர் 2 டீக்கடைகளில் கலப்பட தூள் வைத்திருந்த 2 கிலோ டீ தூள் அழிக்கப்பட்டு அவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

    சாதனா (வயது 5). இன்று காலை இவரை இவரது தாத்தா பள்ளிக்கு அழைத்து சென்றார்

    கடலூர்:

    சிதம்பரம் அடுத்த அம்மாபேட்டை வசிப்பவர் வேலுச்சாமி, இவரது மகள் சாதனா (வயது 5). இன்று காலை இவரை இவரது தாத்தா பள்ளிக்கு அழைத்து சென்றார். அப்போது சீர்காழி - புறவழிச்சாலையை கடக்க முயற்சித்தனர். அப்போது அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் சாதனா மீது மோதிவிட்டார். மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் தப்பிவிட்டார்.

    அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட சாதனாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவர் தன் ஊரைசேர்ந்த மணிமாறன் என்பவர் இல்ல திருமண விழாவிற்கு டிஜிட்டல் பேனர் வைத்திருந்தார்,
    • ஆகாஷை அசிங்கமாக திட்டி கையால் முகத்தில் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்

    கடலூர்:  

    பண்ருட்டி அடுத்த அங்கு செட்டிபாளையம் பழைய காலணி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 22). இவர்,அதே ஊரைசேர்ந்த மணிமாறன் என்பவர் இல்ல திருமண விழாவிற்கு டிஜிட்டல் பேனர் வைத்திருந்தார். அதற்கு அதே ஒரு சேர்ந்த மதிவாணன் என்பவர் எதற்கு இவனுக்கெல்லாம் பேனர் வைக்கிறாய் என கேட்டு ஆகாஷை அசிங்கமாக திட்டி கையால் முகத்தில் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்

    இதுகுறித்து ஆகாஷ் கொடுத்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து மதிவாணனை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • தனது ஊழியரின் விரோத போக்கை கண்டித்து கடலூர் கலெக்டர் அலுவலக வளாக த்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • தனி துணை கலெக்டரை கண்டித்து வருவாய் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

    கடலூர்:

    தமிழ்நாடு வருவாய்து றை அலுவலர் சங்கம் சார்பில் கடலூர் தனி துணை கலெக்டர் கீதா தனது ஊழியரின் விரோத போக்கை கண்டித்து கடலூர் கலெ க்டர் அலுவலக வளாக த்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலா ளர் ஆறுமுகம் முன்னி லை வகித்தார். துணைத்த லைவர் ராஜேஷ் பாபு வரவேற்றார். ஆர்ப்பா ட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் பூபாலச்சந்திரன், இணைச் செயலாளர்கள் சிவக்குமார், சக்திவேல், சஞ்சய், சதாசிவம் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள். இதில் வட்டத் தலைவர்கள் ராஜேந்திரன் சீனிவாசன் கமலநாதன் ஆனந்தகுமார் விக்னேஷ் பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கு முன்னதாக கோரி க்கை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். முடிவில் ரத்தினகுமரன் நன்றி கூறினார்.

    ×