என் மலர்
கடலூர்
- . இவர்பண்ருட்டி- சென்னை சாலைெரயில்வே மேம்பாலம் பகுதியில் உள்ள ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்தார்.
- அப்போது ரமேஷ் ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி பலியானார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி எல்.எல்.புரம் புது நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). இவர்பண்ருட்டி- சென்னை சாலைெரயில்வே மேம்பாலம் பகுதியில் உள்ள ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்தார்நேற்று இரவு இவர் திருச்செந்தூர்எக்ஸ்பிரஸ் ெரயிலில்ஏறி திருச்செந்தூ ருக்கு பயணம் செய்தார். அப்போது பண்ருட்டி ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீர் என தவறி விழுந்தார். அப்போது ரமேஷ் ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி பலியானார்.
இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இவர் நெய்வேலி சாலையில் மோட்டார் சைக்கிள் ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார்.
- கடைக்கு வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைந்து இருப்பதைக் கண்டார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வடலூர் மாருதி நகர் பழ முதிர்ச்சோலை தெருவில் வசிக்கும் சதீஷ் (வயது 45). இவர் நெய்வேலி சாலையில் மோட்டார் சைக்கிள் ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார்கடந்த 11-ந்தேதி இரவு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். மறுநாள் காலை 7 மணி அளவில் கடைக்கு வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைந்து இருப்பதைக் கண்டார். கடையின் உள்ளே சென்று பார்த்த போது பித்தளை குத்து விளக்கு 2, காமாட்சி அம்மன் விளக்கு 2, தாம்பூலத் தட்டு 2 போன்றவைகளை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றது தெரியவந்ததுஇது குறித்து உடனடியாக வடலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராக் களை ஆய்வு செய்தனர். அதில் ஒரு வாலிபர் உள்ளிட்ட 2 சிறுவர்கள் இச்சம்பவத்தில் ஈடு பட்டது போலீசாருக்கு தெரியவந்ததுதொடர்ந்து வடலூர் சர்வோதயா நகர் காளி கோயில் தெரு நடரானஜ் மகன் பார்த்திபன் (வயது 18), மாருதி நகர் சுப்பிரமணி மகன் சந்தோஷ் (17), புதுநகர் சக்திவேல் மகன் சுரேந்தர் (எ)சூர்யா (15) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் 18 வயதிற்கும் குறைவாக இருந்த 2 சிறுவர்களை அரசு காப்பகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
- பலியாகி கிடந்த 4 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திட்டக்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 35). இவரது மனைவி கவுசல்யா (32). இவர்களது மகள் சாரா. இவர்கள் தற்போது தஞ்சாவூரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
மதிவாணனின் உறவினர் இல்ல திருமணம் சென்னை வடபழனி பகுதியில் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக மதிவாணன் முடிவு செய்தார். அதன்படி மதிவாணன், அவரது மனைவி கவுசல்யா, மகள் சாரா, மாமனார் துரை (60), மாமியார் தவமணி (55) ஆகியோர் ஒரு காரில் சென்னை வடபழனிக்கு சென்றனர்.
அங்கு திருமண விழாவில் பங்கேற்று விட்டு நேற்று இரவு சொந்த ஊருக்கு காரில் புறப்பட்டனர். வரும் வழியில் செங்கல்பட்டு பகுதியில் உள்ள மதிவாணனின் தங்கை தேவி வீட்டுக்கு சென்றனர். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு அங்கிருந்து காரில் புறப்பட்டனர்.
அவர்கள் வந்த கார் இன்று அதிகாலை கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆவட்டி கிராமம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது காருக்கு பின்னால் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அரசு பஸ் வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் கார் மீது அரசு பஸ் பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் மதிவாணன், அவரது மனைவி கவுசல்யா, மாமியார் தவமணி, மகள் சாரா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.
விபத்து நடந்த இடம் ரத்த வெள்ளமாக காட்சி அளித்தது. பலியானவர்களின் உடல்கள் இடிபாடுகளில் சிக்கி கிடந்தது. இது பற்றி தகவலறிந்த வேப்பூர் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்தனர்.
விபத்தில் பலியான 4 பேரின் உடல்களை மீட்டனர். இடிபாடுகளில் சிக்கி மதிவாணனின் மாமனார் துரை உயிருக்கு போராடினார். அவரை மீட்டு வேப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது நிலைமை மோசமானது. உடனே துரை பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அங்கு பலியாகி கிடந்த 4 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தகவல் அறிந்த விருத்தாசலம் போலீஸ் டி.எஸ்.பி. ஆரோக்கியராஜ் சம்பவ இடத்துக்கு சென்று நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
- ரெயில்வே அதிகாரிகள் உடனடியாக பயணிகள் ரெயிலை பாதி வழியில் நிற்க வைத்தனர்
- நள்ளிரவு மற்றும் அதிகாலையில் இது போன்ற நிகழ்வு ஏற்பட்டிருந்தால் பெருமளவில் ரெயில் விபத்து ஏற்படும் அபாயம் நிலவி இருக்கும்.
கடலூர் முதுநகர் ரெயில் நிலையம் அருகே மணவெளி பகுதியில் இன்று காலை வழக்கம் போல் செந்தூர் எக்ஸ்பிரஸ் திருச்செந்தூரில் இருந்து கடலூர் முதுநகர் வழியாக சென்னை நோக்கி சென்றது.
அப்போது மணவெளி பகுதியில் தண்டவாளத்தில் திடீரென்று விரிசல் ஏற்பட்ட காரணமாக செந்தூர் எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்த போது தண்டவாளத்தில் விரிசல் இருந்ததை அங்கு பணியில் இருந்த கேட் கீப்பர் பார்வையிட்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து எக்ஸ்பிரஸ் சென்ற பிறகு உடனடியாக ரெயில் நிலைய அதிகாரியிடம் தண்டவாளத்தில் விரிசல் தொடர்பாக தகவல் கொடுத்தார். இதனை தொடர்ந்து ரெயில் நிலைய அதிகாரி உடனடியாக ரெயில்வே துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு உடனடியாக ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வந்தனர். அப்போது விழுப்புரத்தில் இருந்து காலையில் தினமும் மயிலாடுதுறைக்கு பயணிகள் ரெயில் வந்து கொண்டிருந்தது.
இதனை தொடர்ந்து ரெயில்வே அதிகாரிகள் உடனடியாக பயணிகள் ரெயிலை பாதி வழியில் நிற்க வைத்தனர். பின்னர் ரெயில்வே ஊழியர்கள் உடனடியாக தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை தற்காலிகமாக சரி செய்தனர்
மேலும் இவ்வழியாக செல்லக்கூடிய அனைத்து ரெயில்களும் குறைந்த பட்சம் 20 கிலோமீட்டர் வேகத்தில் செல்வதற்கு அறிவுறுத்தப்பட்டன. மேலும் சுமார் 20 நிமிடம் பிறகு பயணிகள் ரெயிலை மெதுவாக இயக்க வைத்து அனுமதித்தனர்.
பின்னர் ரெயில் அதிகளவில் இல்லாத நேரத்தை பயன்படுத்திக் கொண்டு நிரந்தரமாக விரிசலை சரி செய்து நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர். தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது ஏன்? ஏதேனும் ரெயிலை கவிழ்க்க செய்த சதியா? அல்லது எதிர்பாராமல் தண்டவாளத்தில் விரிசில் ஏற்பட்டதா? உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் ரெயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காலை நேரத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது குறித்து ரெயில்வே ஊழியர் உடனடியாக பார்வையிட்டதால் பெரும் ரெயில் விபத்தை தவிர்த்து இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நள்ளிரவு மற்றும் அதிகாலையில் இது போன்ற நிகழ்வு ஏற்பட்டிருந்தால் பெருமளவில் ரெயில் விபத்து ஏற்படும் அபாயம் நிலவி இருக்கும். ஆனால் இதற்கான சூழ்நிலை ஏற்படாமல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை பொதுமக்கள் பாராட்டினர்.
கடலூர்:
திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளையர்களை பிடிக்க பண்ருட்டியை அடுத்த புதுப்பேட்டையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே தனியாக நடந்து வந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் ஒரு கிலோ கஞ்சா வைத்திருந்தார். அதனை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் குறிஞ்சிப்பாடி ரயிலடி பகுதியைச் சேர்ந்த விஜய் (வயது 23), இவரது நண்பர் சரத் (25) என்பவருடன் சென்னைக்கு சென்று கஞ்சா வாங்கினார்கள். மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டதை கண்டு பயந்த சரத் கஞ்சா பொட்டலத்துடன் விஜயை இறக்கிவிட்டார். போலீசாரிடம் மோட்டார் சைக்கிளை காட்டி விட்டு சிறிது தூரத்தில் நிற்கிறேன், நீ நடந்து வா என்று கூறிச் சென்றார். இதனால் விஜய் கஞ்சா பொட்ட லங்களை மறைத்து வைத்துக் கொண்டு நடந்து சென்றது போலீசாருக்கு தெரிந்தது.
இதையடுத்து 2 வாலிபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்த புதுப்பேட்டை போலீசார் விஜயை கைது செய்தனர். மோட்டார் சைக்கிளில் தப்பியோடிய சரத்தை தேடி வருகின்றனர்.
வானூர்:
கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டை பகுதியை சேர்ந்த வர்கள் மணி கண்டன் (வயது 25), ஞான மணி (28). இவர்கள் 2 பேரும் கட்டிட வேலை செய்து வருகிறார்கள். தற்போது திண்டி வனத்தில் கட்டிடவேலை செய்தனர். நேற்று இரவு வேலை முடிந்து 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் பரங்கிபேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இவர்கள் வானூர் அருகே மொரட்டாண்டி டோல்கேட் பகுதியில் சென்றபோது அந்த வழியாக லாரி குறுக்கே சென்றது. கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் லாரி மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் மணி கண்டன் சம்பவ இடத்தி லேயே உயிர் இழந்தார். ஞானமணி படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டி ருந்தார். இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அவரை தூக்கிக் கொண்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தகவல் அறிந்த ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விபத்தில் பலியான மணிகண்டன் உடலை கைப்பற்றி புதுவை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர்:
பண்ருட்டி அருகே எனதரிமங்கலம் கிரா மத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி இவரது மகள் திவ்யா (வயது 22).
புகார்
சம்பவத்தன்று பண் ருட்டி அருகே அங்குசெட்டி பாளையத்திலுள்ள அவ ரது உறவினர் வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் திவ்யாவை பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் திவ்யா கிடைக்கவில்லை.
இதனால் புதுப்பேட்டை போலீசில் திவ்யாவின் தாய் மகாலட்சுமி புகார் கொடுத்தார்.
கடத்தல்
புகாரின் பேரில் விழுப்புரம் மாவட்டம் திருப்பாச்சனூரை சேர்ந்த விக்னேஷ் (25) என்பவர் ஆசை வார்த்தை கூறி திவ்யாவை கடத்தி சென்றதாக தெரிய வந்தது.
இது குறித்து புதுப் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன திவ்யாவையும், கடத்திய விக்னேசையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருேக உள்ள நற்கரலந்தன்குடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சேகர். விவசாயி. அவரது மகள் மதுமிதா (வயது 21). அண்ணா மலை பல்கலை கழகத்தில் பி.எட். இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் பல்கலைகழகத்துக்கு சென்றார்.
இது குறித்து பல்கலைகழக தோழிகள் மதுமிதாவின் தாய் உமாதேவி யிடம் ஏன் உங்கள் மகள் வகுப்புக்கு வரவில்லை என்று கேட்டனர். இதனால் உமாதேவி அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் தனது மகளை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் மதுமிதா கிைடக்க வில்லை. இதுகுறித்து உமாதேவி அண்ணாமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிந்து மதுமிதா எங்குசென்றார். என்ன ஆனார். கடத்தப் பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பண்ருட்டி:
பண்ருட்டி வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் சார்பில் மெகா மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதற்கு பண்ருட்டி வட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், சார்பு நீதிபதி பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆர்த்தி, குற்றவியல் நீதித்துறை நடுவர் மகேஷ் ஆகிேயார் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து நீதிமன்றங்களில் நிலுவை யில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள், மின்வாரியம், இன்சூரன்ஸ் வழக்குகள் என ஏராளமான வழக்குகளை சுமூக தீர்வு காண்பதற்காக எடுத்து கொள்ளப்பட்டன.
சமரசத்திற்கு எடுத்துக் கொள்ள கூடிய கிரிமினல் வழக்குகள், பண மோசடி வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், நில எடுப்பு வழக்குகள் மற்றும் வங்கி வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அனைத்து வழக்குகளுக்கும் விசாரணை நடைபெற்று முடிவில் 130 வழக்குகளுக்கு சுமூக தீர்வு காணப்பட்டது. இதன்மூலம் ரூ.2 கோடியே 31 லட்சத்து 76ஆயிரத்து 800 இழப்பீடாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பண்ருட்டி சட்ட பணிகள் குழு இளநிலை நிர்வாக உதவியாளர் ஆனந்த் ஜோதி செய்திருந்தார்.
- நடராஜர் சிலையை விற்க ஒரு சிலர் விலை பேசி வருவதாக சமூக வளைதளங்களில் பரவியது.
- பெரியசாமியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் நடராஜர் சிலையை விற்க ஒரு சிலர் விலை பேசி வருவதாக சமூக வளைதளங்களில் பரவியது இதனைப் பார்த்த கடலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், ஆவினங்குடி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுமாறு உத்தரவிட்டார். அவரின் உத்தரவின் பேரில் திட்டக்குடி இன்ஸ்பெக்டர் சீனிபாபு, ஆவினங்குடி சப்-இன்ஸ்பெக்டர் துரைக்கண்ணு, தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் ஆவினங்குடி, திட்டக்குடி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இத்தகவலை சமூக வளைதளங்களில் வெளியிட்டவர்களை தொடர்பு கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வேப்பூரை அடுத்த காஞ்சிராங்குனத்தை சேர்ந்த பெரியசாமியின் (வயது 42) உறவினர்கள் இதனை வெளியிட்டது தெரியவந்தது. உடனடியாக பெரியசாமியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.
அவர் தந்த தகவலின் பேரில் ஆவினங்குடி ராமர் (33), வேப்பூர் அடுத்த பாசார் ராமச்சந்திரன் (33), மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அடுத்த ராஜசூரியன்பேட்டையை சேர்ந்த சரவணன் (35) ஆகியோரை பிடித்தனர்.
இதில் தொழுதூர் அடுத்த அதர்நத்தத்தை சேர்ந்த வேல்முருகன் தன்னிடம் நடராஜர் சிலை உள்ளது. இதை விற்றுக் கொடுத்தால் பங்கு தருவதாக ராமர், சரவணனிடம் கூறியுள்ளார். இதையடுத்து சிலை வாங்குவது போல வேல்முருகனை ஆவினங்குடிக்கு ராமர் வரவழைத்தார். அப்போது ராமர், சரவணன் மற்றும் அவர்களது நண்பர்கள் வேல்முருகனை தாக்கிவிட்டு, அவரிடமிருந்த சிலையை பறித்து ராமர் வீட்டி பதுக்கிவிட்டனர்.
இச்சிலையினை பெரியசாமி, ராமச்சந்தின் ஆகியோரிடம் விற்க ராமர், சரவணன் முயற்சித்தனர். அப்போது நடராஜர் சிலையை பெரியசாமி படம் பிடித்து அவரது உறவினர்களுக்கு அனுப்பியுள்ளார். பெரியசாமியின் உறவினர்கள் நடராஜர் சிலை விற்பனைக்கு உள்ளது என்று சமூக வளைதளங்களில் பதிவிட்டனர். இது வைரலாக பரவியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து மேற்கண்ட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களிடமிருந்த நடராஜர் சிலையை பறிமுதல் செய்தனர். இந்த சிலை ஐம்பொன்னால் ஆன சிலையா? என்பது குறித்து ஆய்வு செய்ய சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த வழக்கின் முக்கிய நபரான பா.ம.க. பிரமுகர் வேல்முருகனை போலீசார் தனிப்படை அமைத்து போலீசார் தேடிவந்தனர். அப்போது திட்டக்குடி அடுத்த அரங்கூரில் வேல்முருகன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அங்கு விரைந்த போலீசார் பா.ம.க. பிரமுகர் வேல்முருகனை இன்று காலை கைது செய்தனர். இந்த சிலை எங்கிருந்து திருடப்பட்டது? அல்லது வேறு யாராவது கொடுத்து விற்க சொன்னார்களா? எப்படி கிடைத்தது? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் பா.ம.க. பிரமுகர் வேல்முருகனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- டிஜிட்டல் பேனர்கள் மற்றும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தது,
- டிஜிட்டல் பேனர்கள், தனியார் நிறுவனங்களின் அறிவிப்பு பலகைகள், பேனர்கள் அகற்றப்பட்டன.
கடலூர்:
பண்ருட்டி நகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி அரசியல் கட்சிகளோ, தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்களோ டிஜிட்டல் பேனர்கள் மற்றும் அறிவிப்பு பலகைகள் வைக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளதுஅதையும் மீறி வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்கள் மற்றும் அறிவிப்பு பலகைகளை அதிகாரிகள் அவ்வப்போது அகற்றி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.பண்ருட்டி நகரப்பகுதியில் அனுமதி இன்றி டிஜிட்டல் பேனர்கள் மற்றும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து அவற்றை அகற்ற நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி உத்தரவிட்டார்அதன்பேரில் நகரமைப்பு அதிகாரி என்ஜினீயர் மணி தலைமையில், நகரமைப்பு ஆய்வாளர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் இன்று நகர பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்கள் மற்றும் அறிவிப்பு பலகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த பேனர்கள் அகற்றும் பணி மதியம் 2 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது.
ண்ணா சிலை அருகில்,பஸ் நிலையம், 4 முனைசந்திப்பு, கடலூர் ரோடு, சென்னை சாலை, கும்பகோணம் சாலை,காந்தி ரோடு, ராஜாஜி சாலை ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் டிஜிட்டல் பேனர்கள், தனியார் நிறுவனங்களின் அறிவிப்பு பலகைகள், பேனர்கள் அகற்றப்பட்டன. மொத்தம் 35 டிஜிட்டல் பேனர்களும், 4 விளம்பர பலகைகளும் அகற்றப்பட்டன.
- அப்பா அடித்ததால்,மனமுடைந்த இவர் அருகிலுள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தின் மீது ஏறி கீழே குதிதுவிடுவேன் என்று தற்கொலை மிர ட்டல் விடுத்துள்ளார்.
- தீயணைப்புத் துறையினர், மற்றும் ஊர் பொதுமக்கள் உதவியுடன் கீழே இறக்கி அவரது தாய் சிவஞானம் என்பவருடன்அனுப்பி வைக்கப்பட்டார்,
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பெருமுளை கிராமம் வடக்கு தெரு, காலனியை சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது 2-வது மகன் கபில் தேவ் (வயது20).சம்பவத்தன்று குடிபோ தையில் தந்தை- மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது நாராயணசாமி, கபில்தே வை அடித்தார்.
இதனால் மனமுடைந்த கபில்தேவ் இரவு 12.30 மணி அளவில் அருகிலுள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தின் மீது ஏறி கீழே குதிதுவிடுவேன் என்று தற்கொலை மிர ட்டல் விடுத்துள்ளார். இதை அறிந்த அப்பகுதி இளைஞர்கள் திட்டக்குடி தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இளைஞர்கள் உயர் மின்னழுத்த கோபுரத்தின் மேலே ஏறி திட்டக்குடி தீயணைப்புத் துறையினர், மற்றும் ஊர் பொதுமக்கள் உதவியுடன் கீழே இறக்கி அவரது தாய் சிவஞானம் என்பவருடன்அனுப்பி வைக்கப்பட்டார்இரவு 1 மணி அளவில் நடந்த இந்த சம்பவத்தால் இரவு அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.






