என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.2 கோடியே இழப்பீடு"

    சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் சார்பில் மெகா மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    பண்ருட்டி:

    பண்ருட்டி வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் சார்பில் மெகா மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதற்கு பண்ருட்டி வட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், சார்பு நீதிபதி பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆர்த்தி, குற்றவியல் நீதித்துறை நடுவர் மகேஷ் ஆகிேயார் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து நீதிமன்றங்களில் நிலுவை யில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள், மின்வாரியம், இன்சூரன்ஸ் வழக்குகள் என ஏராளமான வழக்குகளை சுமூக தீர்வு காண்பதற்காக எடுத்து கொள்ளப்பட்டன.

    சமரசத்திற்கு எடுத்துக் கொள்ள கூடிய கிரிமினல் வழக்குகள், பண மோசடி வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், நில எடுப்பு வழக்குகள் மற்றும் வங்கி வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அனைத்து வழக்குகளுக்கும் விசாரணை நடைபெற்று முடிவில் 130 வழக்குகளுக்கு சுமூக தீர்வு காணப்பட்டது. இதன்மூலம் ரூ.2 கோடியே 31 லட்சத்து 76ஆயிரத்து 800 இழப்பீடாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பண்ருட்டி சட்ட பணிகள் குழு இளநிலை நிர்வாக உதவியாளர் ஆனந்த் ஜோதி செய்திருந்தார்.

    ×