குடிபோதையில் தந்தை அடித்ததால் விபரீதம்உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்

அப்பா அடித்ததால்,மனமுடைந்த இவர் அருகிலுள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தின் மீது ஏறி கீழே குதிதுவிடுவேன் என்று தற்கொலை மிர ட்டல் விடுத்துள்ளார். தீயணைப்புத் துறையினர், மற்றும் ஊர் பொதுமக்கள் உதவியுடன் கீழே இறக்கி அவரது தாய் சிவஞானம் என்பவருடன்அனுப்பி வைக்கப்பட்டார்,
குடிபோதையில் தந்தை அடித்ததால் விபரீதம்உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பெருமுளை கிராமம் வடக்கு தெரு, காலனியை சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது 2-வது மகன் கபில் தேவ் (வயது20).சம்பவத்தன்று குடிபோ தையில் தந்தை- மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது நாராயணசாமி, கபில்தே வை அடித்தார்.

இதனால் மனமுடைந்த கபில்தேவ் இரவு 12.30 மணி அளவில் அருகிலுள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தின் மீது ஏறி கீழே குதிதுவிடுவேன் என்று தற்கொலை மிர ட்டல் விடுத்துள்ளார். இதை அறிந்த அப்பகுதி இளைஞர்கள் திட்டக்குடி தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இளைஞர்கள் உயர் மின்னழுத்த கோபுரத்தின் மேலே ஏறி திட்டக்குடி தீயணைப்புத் துறையினர், மற்றும் ஊர் பொதுமக்கள் உதவியுடன் கீழே இறக்கி அவரது தாய் சிவஞானம் என்பவருடன்அனுப்பி வைக்கப்பட்டார்இரவு 1 மணி அளவில் நடந்த இந்த சம்பவத்தால் இரவு அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com