search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Accidental death"

    பரங்கிபேட்டை பகுதியை சேர்ந்த வர்கள் மணி கண்டன் (வயது 25), ஞான மணி (28). இவர்கள் 2 பேரும் கட்டிட வேலை செய்து வருகிறார்கள்.

    வானூர்:

    கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டை பகுதியை சேர்ந்த வர்கள் மணி கண்டன் (வயது 25), ஞான மணி (28). இவர்கள் 2 பேரும் கட்டிட வேலை செய்து வருகிறார்கள். தற்போது திண்டி வனத்தில் கட்டிடவேலை செய்தனர். நேற்று இரவு வேலை முடிந்து 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் பரங்கிபேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இவர்கள் வானூர் அருகே மொரட்டாண்டி டோல்கேட் பகுதியில் சென்றபோது அந்த வழியாக லாரி குறுக்கே சென்றது. கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் லாரி மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் மணி கண்டன் சம்பவ இடத்தி லேயே உயிர் இழந்தார். ஞானமணி படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டி ருந்தார். இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அவரை தூக்கிக் கொண்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தகவல் அறிந்த ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விபத்தில் பலியான மணிகண்டன் உடலை கைப்பற்றி புதுவை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பைக் மீது லாரி மோதியது
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அருகே உள்ள புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர். குமார் (வயது 42) இவர் செய்யாறு மாங்கல் கூட்ரோட்டில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

    வேலை முடிந்து நேற்று காலை 8 மணி அளவில் வீட்டுக்கு செல்வதற்காக தனது பைக்கில் காஞ்சிபுரம் செய்யாறு சாலை அருகே வந்து கொண்டு இருந்தார்.

    அப்போது எதிரே வந்த லாரி குமார் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் குமாருக்கு தலை, உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.

    அருகில் இருந்தவர்கள் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அவரது மனைவி மகேஸ்வரி செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பைக்கில் சென்ற போது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம் பள்ளி அடுத்த மேல் அக்ராவரம் பகுதியைச் சேர்ந்தவர் அனுமந்தன் (வயது 55). மாட்டு வியாபாரி. இவர் நேற்று தனது பைக்கில் வீட்டிலிருந்து வெலக்கல் நத்தம் பகுதிக்கு சென்றார்.

    அப்போது சுண்ணாம்பு குட்டை அருகே செல்லும்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் அனுமந்தன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் நாற்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிறப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இவரது மகன் செந்தமிழன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×