விபத்தில் காவலாளி சாவு

பைக் மீது லாரி மோதியது போலீசார் விசாரணை
விபத்தில் காவலாளி சாவு
Published on

செய்யாறு:

செய்யாறு அருகே உள்ள புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர். குமார் (வயது 42) இவர் செய்யாறு மாங்கல் கூட்ரோட்டில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

வேலை முடிந்து நேற்று காலை 8 மணி அளவில் வீட்டுக்கு செல்வதற்காக தனது பைக்கில் காஞ்சிபுரம் செய்யாறு சாலை அருகே வந்து கொண்டு இருந்தார்.

அப்போது எதிரே வந்த லாரி குமார் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் குமாருக்கு தலை, உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.

அருகில் இருந்தவர்கள் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அவரது மனைவி மகேஸ்வரி செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com