வானூர் அருகே விபத்து லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி கட்டிட தொழிலாளி பலி

பரங்கிபேட்டை பகுதியை சேர்ந்த வர்கள் மணி கண்டன் (வயது 25), ஞான மணி (28). இவர்கள் 2 பேரும் கட்டிட வேலை செய்து வருகிறார்கள்.
வானூர் அருகே விபத்து லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி கட்டிட தொழிலாளி பலி
Published on

வானூர்:

கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டை பகுதியை சேர்ந்த வர்கள் மணி கண்டன் (வயது 25), ஞான மணி (28). இவர்கள் 2 பேரும் கட்டிட வேலை செய்து வருகிறார்கள். தற்போது திண்டி வனத்தில் கட்டிடவேலை செய்தனர். நேற்று இரவு வேலை முடிந்து 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் பரங்கிபேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இவர்கள் வானூர் அருகே மொரட்டாண்டி டோல்கேட் பகுதியில் சென்றபோது அந்த வழியாக லாரி குறுக்கே சென்றது. கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் லாரி மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் மணி கண்டன் சம்பவ இடத்தி லேயே உயிர் இழந்தார். ஞானமணி படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டி ருந்தார். இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அவரை தூக்கிக் கொண்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தகவல் அறிந்த ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விபத்தில் பலியான மணிகண்டன் உடலை கைப்பற்றி புதுவை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com