என் மலர்
நீங்கள் தேடியது "Divya is nowhere to be found."
வெளியில் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை
கடலூர்:
பண்ருட்டி அருகே எனதரிமங்கலம் கிரா மத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி இவரது மகள் திவ்யா (வயது 22).
புகார்
சம்பவத்தன்று பண் ருட்டி அருகே அங்குசெட்டி பாளையத்திலுள்ள அவ ரது உறவினர் வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் திவ்யாவை பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் திவ்யா கிடைக்கவில்லை.
இதனால் புதுப்பேட்டை போலீசில் திவ்யாவின் தாய் மகாலட்சுமி புகார் கொடுத்தார்.
கடத்தல்
புகாரின் பேரில் விழுப்புரம் மாவட்டம் திருப்பாச்சனூரை சேர்ந்த விக்னேஷ் (25) என்பவர் ஆசை வார்த்தை கூறி திவ்யாவை கடத்தி சென்றதாக தெரிய வந்தது.
இது குறித்து புதுப் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன திவ்யாவையும், கடத்திய விக்னேசையும் வலைவீசி தேடி வருகின்றனர்.






