சென்னையிலிருந்துகஞ்சா கடத்திய வாலிபர் கைது

தனியாக நடந்து வந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
சென்னையிலிருந்துகஞ்சா கடத்திய வாலிபர் கைது
Published on

கடலூர்:

திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளையர்களை பிடிக்க பண்ருட்டியை அடுத்த புதுப்பேட்டையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே தனியாக நடந்து வந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் ஒரு கிலோ கஞ்சா வைத்திருந்தார். அதனை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் குறிஞ்சிப்பாடி ரயிலடி பகுதியைச் சேர்ந்த விஜய் (வயது 23), இவரது நண்பர் சரத் (25) என்பவருடன் சென்னைக்கு சென்று கஞ்சா வாங்கினார்கள். மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டதை கண்டு பயந்த சரத் கஞ்சா பொட்டலத்துடன் விஜயை இறக்கிவிட்டார். போலீசாரிடம் மோட்டார் சைக்கிளை காட்டி விட்டு சிறிது தூரத்தில் நிற்கிறேன், நீ நடந்து வா என்று கூறிச் சென்றார். இதனால் விஜய் கஞ்சா பொட்ட லங்களை மறைத்து வைத்துக் கொண்டு நடந்து சென்றது போலீசாருக்கு தெரிந்தது.

இதையடுத்து 2 வாலிபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்த புதுப்பேட்டை போலீசார் விஜயை கைது செய்தனர். மோட்டார் சைக்கிளில் தப்பியோடிய சரத்தை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com