என் மலர்tooltip icon

    கடலூர்

    • சிதம்பரம் பகுதிக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் கோவிந்தசாமி தெருவை சேர்ந்தவர் ஆண்டணி ஜோசப்ராஜ் (வயது 35). இவர் இன்று காலை சிதம்பரம் அருகே கிள்ளை-சிதம்பரம் பகுதிக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.அப்போது அந்த வழியாக திருச்ெசந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் ஆண்டணி ஜோசப்ராஜ் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.இதுகுறித்து சிதம்பரம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்குமார் உத்தரவின் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • அருள்ராஜை திருமணம் செய்த பெண் வேலூர், கோவை, திருவண்ணாமலை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 15 வாலிபர்களை மணந்திருப்பது தெரியவந்தது.
    • பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வானியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது 25). கரும்பு வெட்டும் கூலிதொழிலாளி. இவர் பேஸ்புக்கில் தனது நண்பர்கள் ஏராளமானவர்களுடன் தொடர்பில் இருந்து வந்தார்.

    அப்போது அருள்ராஜிக்கு வேலூரை சேர்ந்த இளம்பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. அப்போது அந்த பெண் தான் ஒரு ஆதரவற்றவர் என்று பகிர்ந்துள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அருள்ராஜ் அந்த பெண்ணை கடந்த ஆண்டு பண்ருட்டி திருவதிகை வீரட்டானேசுவரர் கோவிலில் திருமணம் செய்தார்.

    ஆரம்பத்தில் இவர்கள் வாழ்க்கை இனிதாக சென்றது. அருள்ராஜ் கரும்பு வெட்டும் தொழிலுக்கு செல்லும்போது வெளியூர்களில் தங்குவது வழக்கம். அப்போது அந்த பெண் அருள்ராஜிடம் தனது உறவினர்களை பார்க்க செல்வதாக கூறிவிட்டு செல்வார். இதுபோன்று அடிக்கடி நடந்தது.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அருள்ராஜ் தனது தங்கை திருமணத்துக்காக 7 பவுன் நகை, 90 ஆயிரம் ரொக்கபணம் ஆகியவை வாங்கி வைத்திருந்தார். இந்த பணத்தை அந்த பெண்ணிடம் கொடுத்து வைத்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அருள்ராஜ் திருமணம் செய்த பெண் நகை, பணத்துடன் திடீரென மாயமானார்.

    நீண்ட நாட்களாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அருள்ராஜ் அந்த பெண் கொடுத்த முகவரி குறித்து விசாரித்தபோது அது போலியானது என தெரியவந்தது. அவர் வழங்கிய செல்போன் எண்ணும் வேறு நபருக்கு உரியது.

    அதிர்ச்சியடைந்த அருள்ராஜ் இதுகுறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்தது. அருள்ராஜை திருமணம் செய்த பெண் வேலூர், கோவை, திருவண்ணாமலை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 15 வாலிபர்களை மணந்திருப்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக அந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • நோயாளி ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு ஆஸ்பத்திரிக்கு வந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
    • அண்ணாமலை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியை சேர்ந்தவர் தவிட்டுமணி (வயது 67). இவருக்கு வாய் புற்றுநோய் ஏற்பட்டது. இதனால் கடந்த 10-ந் தேதி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு புற்றுநோய்க்கான தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்தார்.

    அப்போது நோயின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வந்தது. இதனால் வேதனையால் அவர் அவதிப்பட்டார். எனவே உயிர்வாழ்வதைவிட தற்கொலை செய்வது மேல் என தவிட்டுமணி தீர்மானித்தார். அதன்படி இன்று காலை வார்டு வளாகத்தில் உள்ள மாடிப்படிக்கு சென்றார். பின்பு அங்குள்ள கம்பியில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தவிட்டுமணி தற்கொலை செய்தார்.

    இன்று காலை நோயாளி ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு ஆஸ்பத்திரிக்கு வந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • தென்பெண்ணை ஆறு ஓரமாக செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார். நேற்று சாமுவேல்
    • தகர செட்டில் தூக்கு போட்டு இறந்த நிலையில் இருந்தார்

    கடலூர்:

    உளுந்தூர்பேட்டை புது நண்ணாவரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் சாமுவேல் (வயது 24) கடந்த 3 வருடமாக மேல் பட்டாம்பாக்கம் தென்பெண்ணை ஆறு ஓரமாக செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார்.நேற்று சாமுவேல் திடீரென்று அங்குள்ள தகர செட்டில் தூக்கு போட்டு இறந்த நிலையில் இருந்தார். இதனை பார்த்த சாமுவேல் தம்பி ராஜவேல் அதிர்ச்சி அடைந்து நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் சாமுவேல் உடலை கைப்பற்றி முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோத னைக்காக கொண்டு சென்றனர். இது குறித்து சக்திவேல் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் சாமுவேல் இறப்பில் சந்தேகம் இருப்ப தாக புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது

    சீட்டு கட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி பகுதிகளில் பல்வேறு சட்டவிரோத செயல்பாடுகளில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, புதுச்சேரியி்ல் இருந்து கடத்தி வரும் மது விற்பனை, கஞ்சா விற்பனை, சூதாட்டம் போன்றவைகளில் ஈடுபடும் நபர்களால் பண்ருட்டி பகுதியின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை அடிக்கடி ஏற்படுகிறது.

    இதனை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், பண்ருட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு சபியுல்லா ஆகியோர் பண்ருட்டி போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதன்படி பண்ருட்டி பகுதிகளில் மேற்கண்ட செயல்களில் ஈடுபடும் நபர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பண்ருட்டி நகரில் தங்கும் விடுதிகளில் சூதாட்டம் நடப்பதாக பண்ருட்டி போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கவேல், புஷ்பராஜ், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீசார் பண்ருட்டி நகரில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் ஆய்வு செய்தனர். இதில் அங்கு ரூம்களை வாடகைக்கு எடுத்து பணத்தை வைத்து சீட்டு கட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட பணம், சீட்டு கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தீ விபத்தில் கடந்த 9-ந்தேதி பலியாகினர்.
    • தாயார் செல்வி (50) மேல் சிகிச்சைக்காபலனின்றி இன்று அதிகாலை செல்வி பரிதாபமாக இறந்துவிட்டார்.


    கடலூர்.:

    கடலூர் முதுநகர் செல்லாங்குப்பத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தீ விபத்தில் கடந்த 9-ந்தேதி பலியாகினர். தற்கொலைக்கு முயன்ற தங்கையின் கணவரை தடுக்க சென்ற தமிழரசி, அவரது 4 மாத மகள் ஹாசினி, தனலட்சுமியின் 4 மாத பெண் குழந்தை சம்பவ இடத்திலேயே தீயில் கருகி இறந்து போனர்.

    மேலும், இதில் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கணவன், மனைவியான சற்குரு, தனலட்சுமி ஆகியோரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதில் இறந்து போன தமிழரசி, தனலட்சுமியின் தாயார் செல்வி (50) மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை செல்வி பரிதாபமாக இறந்துவிட்டார். இதனால் தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 6 பேராக உயர்ந்துள்ளது. தாய், 2 மகள்கள், ஒரு மருமகன், 2 குழந்தைகள் என ஒரே குடும்பத்தில் 6 பேர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடேயே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • வீட்டை பூட்டி விட்டு ஆரணியில் உள்ள உறவினர் திருமணத்திற்கு சென்றுள்ளார்கள்.
    • வீட்டின் வலது பக்க ஜன்னல் உடைந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    கடலூர்:

    வடலூர் மாருதி நகர் கோட்டக்கரை பகுதியை சேர்ந்த தேவநாதன் இவரது மனைவி சுமித்ரா (வயது 43). இவர்கள் கடந்த 9-ம்தேதி காலையில் வீட்டை பூட்டி விட்டு ஆரணியில் உள்ள உறவினர் திருமணத்திற்கு சென்றுள்ளார்கள். தொடர்ந்து திருமணம் முடிந்து நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு வீட்டிற்கு வந்தனர். வீட்டின் வலது பக்க ஜன்னல் உடைந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் வீட்டின் உள்ளே சென்று கதவை திறந்து பார்த்தபோது பீரோவில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 4 கிராம் கம்மல், 1 கிராம் மூக்குத்தி, 100 கிராம் வெள்ளி கொலுசு ஆகியவற்றை கொள்ளை யர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

    • . இவர்பண்ருட்டி- சென்னை சாலைெரயில்வே மேம்பாலம் பகுதியில் உள்ள ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்தார்.
    • அப்போது ரமேஷ் ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி பலியானார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி எல்.எல்.புரம் புது நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). இவர்பண்ருட்டி- சென்னை சாலைெரயில்வே மேம்பாலம் பகுதியில் உள்ள ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்தார்நேற்று இரவு இவர் திருச்செந்தூர்எக்ஸ்பிரஸ் ெரயிலில்ஏறி திருச்செந்தூ ருக்கு பயணம் செய்தார். அப்போது பண்ருட்டி ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீர் என தவறி விழுந்தார். அப்போது ரமேஷ் ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி பலியானார்.

    இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இவர் நெய்வேலி சாலையில் மோட்டார் சைக்கிள் ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார்.
    • கடைக்கு வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைந்து இருப்பதைக் கண்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூர் மாருதி நகர் பழ முதிர்ச்சோலை தெருவில் வசிக்கும் சதீஷ் (வயது 45). இவர் நெய்வேலி சாலையில் மோட்டார் சைக்கிள் ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார்கடந்த 11-ந்தேதி இரவு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். மறுநாள் காலை 7 மணி அளவில் கடைக்கு வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைந்து இருப்பதைக் கண்டார். கடையின் உள்ளே சென்று பார்த்த போது பித்தளை குத்து விளக்கு 2, காமாட்சி அம்மன் விளக்கு 2, தாம்பூலத் தட்டு 2 போன்றவைகளை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றது தெரியவந்ததுஇது குறித்து உடனடியாக வடலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராக் களை ஆய்வு செய்தனர். அதில் ஒரு வாலிபர் உள்ளிட்ட 2 சிறுவர்கள் இச்சம்பவத்தில் ஈடு பட்டது போலீசாருக்கு தெரியவந்ததுதொடர்ந்து வடலூர் சர்வோதயா நகர் காளி கோயில் தெரு நடரானஜ் மகன் பார்த்திபன் (வயது 18), மாருதி நகர் சுப்பிரமணி மகன் சந்தோஷ் (17), புதுநகர் சக்திவேல் மகன் சுரேந்தர் (எ)சூர்யா (15) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் 18 வயதிற்கும் குறைவாக இருந்த 2 சிறுவர்களை அரசு காப்பகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    • பலியாகி கிடந்த 4 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திட்டக்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 35). இவரது மனைவி கவுசல்யா (32). இவர்களது மகள் சாரா. இவர்கள் தற்போது தஞ்சாவூரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

    மதிவாணனின் உறவினர் இல்ல திருமணம் சென்னை வடபழனி பகுதியில் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக மதிவாணன் முடிவு செய்தார். அதன்படி மதிவாணன், அவரது மனைவி கவுசல்யா, மகள் சாரா, மாமனார் துரை (60), மாமியார் தவமணி (55) ஆகியோர் ஒரு காரில் சென்னை வடபழனிக்கு சென்றனர்.

    அங்கு திருமண விழாவில் பங்கேற்று விட்டு நேற்று இரவு சொந்த ஊருக்கு காரில் புறப்பட்டனர். வரும் வழியில் செங்கல்பட்டு பகுதியில் உள்ள மதிவாணனின் தங்கை தேவி வீட்டுக்கு சென்றனர். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு அங்கிருந்து காரில் புறப்பட்டனர்.

    அவர்கள் வந்த கார் இன்று அதிகாலை கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆவட்டி கிராமம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது காருக்கு பின்னால் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அரசு பஸ் வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் கார் மீது அரசு பஸ் பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது.

    இந்த விபத்தில் மதிவாணன், அவரது மனைவி கவுசல்யா, மாமியார் தவமணி, மகள் சாரா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

    விபத்து நடந்த இடம் ரத்த வெள்ளமாக காட்சி அளித்தது. பலியானவர்களின் உடல்கள் இடிபாடுகளில் சிக்கி கிடந்தது. இது பற்றி தகவலறிந்த வேப்பூர் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்தனர்.

    விபத்தில் பலியான 4 பேரின் உடல்களை மீட்டனர். இடிபாடுகளில் சிக்கி மதிவாணனின் மாமனார் துரை உயிருக்கு போராடினார். அவரை மீட்டு வேப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது நிலைமை மோசமானது. உடனே துரை பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அங்கு பலியாகி கிடந்த 4 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தகவல் அறிந்த விருத்தாசலம் போலீஸ் டி.எஸ்.பி. ஆரோக்கியராஜ் சம்பவ இடத்துக்கு சென்று நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    • ரெயில்வே அதிகாரிகள் உடனடியாக பயணிகள் ரெயிலை பாதி வழியில் நிற்க வைத்தனர்
    • நள்ளிரவு மற்றும் அதிகாலையில் இது போன்ற நிகழ்வு ஏற்பட்டிருந்தால் பெருமளவில் ரெயில் விபத்து ஏற்படும் அபாயம் நிலவி இருக்கும்.

    கடலூர் முதுநகர் ரெயில் நிலையம் அருகே மணவெளி பகுதியில் இன்று காலை வழக்கம் போல் செந்தூர் எக்ஸ்பிரஸ் திருச்செந்தூரில் இருந்து கடலூர் முதுநகர் வழியாக சென்னை நோக்கி சென்றது.

    அப்போது மணவெளி பகுதியில் தண்டவாளத்தில் திடீரென்று விரிசல் ஏற்பட்ட காரணமாக செந்தூர் எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்த போது தண்டவாளத்தில் விரிசல் இருந்ததை அங்கு பணியில் இருந்த கேட் கீப்பர் பார்வையிட்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து எக்ஸ்பிரஸ் சென்ற பிறகு உடனடியாக ரெயில் நிலைய அதிகாரியிடம் தண்டவாளத்தில் விரிசல் தொடர்பாக தகவல் கொடுத்தார். இதனை தொடர்ந்து ரெயில் நிலைய அதிகாரி உடனடியாக ரெயில்வே துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு உடனடியாக ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வந்தனர். அப்போது விழுப்புரத்தில் இருந்து காலையில் தினமும் மயிலாடுதுறைக்கு பயணிகள் ரெயில் வந்து கொண்டிருந்தது.

    இதனை தொடர்ந்து ரெயில்வே அதிகாரிகள் உடனடியாக பயணிகள் ரெயிலை பாதி வழியில் நிற்க வைத்தனர். பின்னர் ரெயில்வே ஊழியர்கள் உடனடியாக தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை தற்காலிகமாக சரி செய்தனர்

    மேலும் இவ்வழியாக செல்லக்கூடிய அனைத்து ரெயில்களும் குறைந்த பட்சம் 20 கிலோமீட்டர் வேகத்தில் செல்வதற்கு அறிவுறுத்தப்பட்டன. மேலும் சுமார் 20 நிமிடம் பிறகு பயணிகள் ரெயிலை மெதுவாக இயக்க வைத்து அனுமதித்தனர்.

    பின்னர் ரெயில் அதிகளவில் இல்லாத நேரத்தை பயன்படுத்திக் கொண்டு நிரந்தரமாக விரிசலை சரி செய்து நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர். தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது ஏன்? ஏதேனும் ரெயிலை கவிழ்க்க செய்த சதியா? அல்லது எதிர்பாராமல் தண்டவாளத்தில் விரிசில் ஏற்பட்டதா? உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் ரெயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    காலை நேரத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது குறித்து ரெயில்வே ஊழியர் உடனடியாக பார்வையிட்டதால் பெரும் ரெயில் விபத்தை தவிர்த்து இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    நள்ளிரவு மற்றும் அதிகாலையில் இது போன்ற நிகழ்வு ஏற்பட்டிருந்தால் பெருமளவில் ரெயில் விபத்து ஏற்படும் அபாயம் நிலவி இருக்கும். ஆனால் இதற்கான சூழ்நிலை ஏற்படாமல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை பொதுமக்கள் பாராட்டினர்.

    தனியாக நடந்து வந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

    கடலூர்:

    திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளையர்களை பிடிக்க பண்ருட்டியை அடுத்த புதுப்பேட்டையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே தனியாக நடந்து வந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் ஒரு கிலோ கஞ்சா வைத்திருந்தார். அதனை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் குறிஞ்சிப்பாடி ரயிலடி பகுதியைச் சேர்ந்த விஜய் (வயது 23), இவரது நண்பர் சரத் (25) என்பவருடன் சென்னைக்கு சென்று கஞ்சா வாங்கினார்கள். மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டதை கண்டு பயந்த சரத் கஞ்சா பொட்டலத்துடன் விஜயை இறக்கிவிட்டார். போலீசாரிடம் மோட்டார் சைக்கிளை காட்டி விட்டு சிறிது தூரத்தில் நிற்கிறேன், நீ நடந்து வா என்று கூறிச் சென்றார். இதனால் விஜய் கஞ்சா பொட்ட லங்களை மறைத்து வைத்துக் கொண்டு நடந்து சென்றது போலீசாருக்கு தெரிந்தது.

    இதையடுத்து 2 வாலிபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்த புதுப்பேட்டை போலீசார் விஜயை கைது செய்தனர். மோட்டார் சைக்கிளில் தப்பியோடிய சரத்தை தேடி வருகின்றனர்.

    ×