என் மலர்
கடலூர்
- நூற்றுக் கணக்கான மீனவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் சோனாங்குப்பம் மீனவ கிராமத்திற்கு கடல் வழியாக சென்றனர்.
- பஞ்சநாதனை பயங்கர ஆயுதங்களை கொண்டு குத்தியதில் பஞ்சநாதன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர்,:
கடலூர் தேவனாம்பட்டி னம் மற்றும் சோனாங் குப்பம் மீனவர்களுக்கு முன் விரோத தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதி இவர்களுக்குள் மீண்டும் மோதல் ஏற்பட்டு கடலில் தாக்கிக் கொண்டனர்இதனை தொடர்ந்து கடலூர் தேவனாம்பட்டி னத்தில் இருந்து நூற்றுக் கணக்கான மீனவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் சோனாங்குப்பம் மீனவ கிராமத்திற்கு கடல் வழியாக சென்றனர்.அப்போது சோனாங் குப்பம் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதன் என்பவர் தேவனாம்பட்டி னம் மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட சென்றார். இதில் ஆக்ரோஷமாக வந்த தேவனாம்பட்டினம் சேர்ந்த மீனவர்கள் பட்டப் பகலில் பஞ்சநாதனை பயங்கர ஆயுதங்களை கொண்டு குத்தியதில் பஞ்சநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 மீனவர்கள் காயமடைந்தனர்.இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கு கடலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்ட தினகரன் என்பவர் வழக்கு விசாரணையில் இருந்தபோது இறந்து விட்டார். இதனை தொடர்ந்து இன்று நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்து தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் கடலூர் நீதிமன்ற வளாகம், தேவனாம்பட்டினம், சோனாங் குப்பம் மற்றும் கடற்கரை பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.மேலும் எந்தவித அசம்பாவிதம் ஏற் படாமல் இருக்க ஏராளமான போலீசார் ஆங்காங்கே ரோந்து பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்இது மட்டுமின்றி அந்த பகுதிகளில் காரணமின்றி பொதுமக்கள் கூடாத வகையில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து இன்று காலை நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு வந்ததுஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுபா அன்புமணி வருகிற மார்ச் 4-ந் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.
- காலையில் மருத்துவமனைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு பணம் ரூ.100 வாங்கி கொண்டு சென்றார்,
- தாகர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது மகன் செல்வக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர்
கடலூர்:
சிதம்பரம் பழைய புவனகிரி ரோடு தொழிலாளர் குடியிருப்பில் வசிப்பவர் சுதாகர் (வயது 42) . இவர் தட்டுவண்டி தொழிலாளி . சம்பவத்தன்று காலையில் மருத்துவமனைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு பணம் ரூ.100 வாங்கி கொண்டு சென்றார். பின்னர் பிற்பகல் 3 மணி அளவில் பெரிய காஜியார் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சுதாகர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது மகன் செல்வக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த அவரது மகன் சிதம்பரம் போலீசில் புகார் செய்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் செல்வக்குமார் தனது தந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து உள்ளார்.
- தனது மனைவியை உறவினர்கள் வீடுகளிலும், பல பகுதிகளிலும் தேடியும் காணவில்லை
கடலூர்:
சிதம்பரம் அருகே தியாகவள்ளி அருகே திருச்சோபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமாதேவி (வயது 46) இவரது கணவர் கணேசன். ரமாதேவி சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து உள்ளார். இந்நிலையில் கடந்த 25ந் தேதி வீட்டிலிருந்த காணமல் போன தனது மனைவியை உறவினர்கள் வீடுகளிலும், பல பகுதிகளிலும் தேடியும் காணவில்லை என்பதால் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். கணேசன் கொடுத்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கடலூர்:
மாற்றுதிறனாளி சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட கிராமத்தை சேர்ந்த மாற்று திறனாளி சிறுமி வீட்டில் தனியாக இருந்த போதுஅதே பகுதியை சேர்ந்த கரும்பு வெட்டும் கூலிதொழிலாளி காத்தமுத்து(35) சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது அவரை தள்ளிவிட்டு சிறுமிதப்பி ஓடி விட்டார்
இது குறித்து மகளிர் போலீஸ நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து கரும்பு வெட்டும்தொழிலாளி காத்த முத்துவைதேடி வந்தனர்.கடந்த ஓராண்டு காலமாக தலை மறைவாக இருந்த காத்தமுத்து நேற்று புதுப்பேட்டை பஸ் நிறுத்தம்அருகில்நின்று கொண்டிருந்தபோது அவரை அதிரடியாக கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- இந்த குரங்குகள் வீடுகளில் உள்ளே புகுந்தும், பொது மக்களை விரட்டியும், கடித்தும் வருகின்றன.
- ஒரு குரங்கு இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் மயங்கிய நிலையில் கிடந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூரில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன.இந்த குரங்குகள் அவ்வப்போது வீடுகளில் உள்ளே புகுந்தும், பொது மக்களை விரட்டியும், கடித்தும் வருகின்றன. நடை பாதையில் பொதுமக்கள் வாங்கிச் செல்லும் தின்பண்டங்களை விரட்டி பிடித்து பறித்து செல்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்இந்நிலையில் ஒரு குரங்கு இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் மயங்கிய நிலையில் கிடந்தது. இதை அறிந்த சமூக ஆர்வலர் ஹில்சன் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். உடனே வேப்பூர் கால்நடை டாக்டர் வசந்த் மற்றும் விருத்தாசலம் வனச்சரகத்தின் வனவர் பன்னீர்செல்வம் மற்றும் வனக்காப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் விரைந்து வந்து அந்த குரங்கிற்கு சிகிச்சை அளித்தனர்.
பின்னர் கால்நடை மருத்துவர் கூறும் போது, குரங்கு விஷம் கலந்த உணவை சாப்பிட்டு உள்ளதாக தெரிவித்தார். இதை அடுத்து மீண்டும் அந்த குரங்கை வனத்துறையினர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று மேலும் மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் குரங்கிற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக முயற்சி செய்த சமூக ஆர்வலர் ஹில்சனுக்கு அப்பகுதியினர் பாராட்டு தெரிவித்தனர்.
- மோட்டார் சைக்கிளில் விருத்தாசலம் ெரயில் நிலையம் வந்தார்.
- தனது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு அன்பரசன் அதிர்ச்சி அடைந்தார்.
கடலூர்
விருத்தாசலத்தை அடுத்த எம்.பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன். இவர் தனது நண்பரை ெரயிலில் வழி அனுப்பவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் விருத்தாசலம் ெரயில் நிலையம் வந்தார்ெயில் நிலையம் எதிரே இருந்த கடையின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, ெரயில் நிலையம் உள்ளே சென்றார். திரும்பி வந்து பார்க்கும் போது தனது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு அன்பரசன் அதிர்ச்சி அடைந்தார்இது குறித்து விருத்தாசலம் போலீசில் அன்பரசன் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்று கொண்ட போலீசார் சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் காணாமல் போன இருசக்கர வாகனத்தை தேடி வருகின்றனர்.
- உடலில் பல இடங்களில் காயங்களுடன் இருந்துள்ளார். வீட்டில் கேட்டபோது வண்டியில் இருந்து தவறி விழுந்து விட்டதாக கூறியுள்ளார்.
- சிறிது நேரம் கழித்து பாட்டி அவரை எழுப்பும்போது சண்முகம் இறந்த நிலையில் இருந்துள்ளார்.
கடலூர்:
சிதம்பரம் கோவிந்தசாமி தெரு காரியபெருமாள் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகி என்கிற சண்முகம். இவர் கோவில் சிலை செய்யும் நபர். நேற்று முன்தினம் வெளியில் சென்றவர் நள்ளிரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது உடலில் பல இடங்களில் காயங்களுடன் இருந்துள்ளார். வீட்டில் கேட்டபோது வண்டியில் இருந்து தவறி விழுந்து விட்டதாக கூறியுள்ளார். மறுநாள் காலை மருத்துவ மனைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் பணம் வாங்கிக்கொண்டு தனது பாட்டி வீட்டிற்கு சென்று தூங்கியுள்ளார். சிறிது நேரம் கழித்து பாட்டி அவரை எழுப்பும்போது சண்முகம் இறந்த நிலையில் இருந்துள்ளார். அவரது தந்தை முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.மர்மமான முறையில் இறந்த சண்முகம் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் அவரது பெயர் ரவுடி பட்டியலில் இடம் பெற்றிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
- சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வந்த மோட்டார் திடீரென்று பழுதானதால் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரக்கூடிய கழிவுநீர் முழுவதும் அந்தபகுதியில்உள்ள வீடுகளை சூழ்ந்தது,
- அதிகாரியிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை
கடலூர்:
கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளில் வீடுகள் வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்களில் இருந்து பாதாள சாக்கடை மூலம் கழிவுநீர் வெளியேற்றப்பட்டு ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் மூலம் கழிவு நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.கடலூர் தேவனாம்பட்டினம் கேகே நகர் பகுதிகளில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகின்றது. இதில் அந்த சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வரக்கூடிய பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு செய்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வந்தது.கடந்த சில தினங்களாக சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வந்த மோட்டார் திடீரென்று பழுதானதால் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரக்கூடிய கழிவுநீர் முழுவதும் சுத்திகரித்து வெளியேற்ற முடியாமல் தற்போது கழிவுநீர் முழுவதும் அந்த பகுதிகளில் உள்ள வீடுகளை சூழ்ந்து உளளது.தற்போது வீடுகளை சுற்றியும் கழிவு நீர் முழுவதும் குளம் போல் தேங்கி கடும் துர்நாற்றம் வீசி வருகின்றது. இது மட்டும் இன்றி தற்போது கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இது சம்பந்தமாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லைஇதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு மக்களுக்கு மர்ம காய்ச்சல், வாந்தி மயக்கம் ,வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தாக்கக்கூடிய அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்எனவே பொதுமக்களின் அடிப்படை அத்தியாவசிய தேவையான சுகாதாரத்தை அதிகாரிகள் ஏற்படுத்தி நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
- வழக்கம் போல் தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் கல்லூரிக்கு சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
- கல்லூரி மாணவியையும், வாலிபரையும் வலைவீசி தேடி வருகின்றனர்
கடலூர்:
கடலூர் வண்டி ப்பாளையம் பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்.சி படித்து வரும் மாணவி நேற்று காலை வழக்கம் போல் தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் கல்லூரிக்கு சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு வரவில்லைஅதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கல்லூரி மாணவியை எங்கும் தேடியும் கிடைக்கவில்லை. மேற்கொண்டு மாணவி எங்கு சென்றார் என விசாரித்த போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கல்லூரி மாணவி யை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறதுஇது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தி செல்லப்பட்ட கல்லூரி மாணவியையும், வாலிபரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- பரத நாட்டியம் விடிய, விடிய நடக்கிறது.
- 19-ந்தேதி அதிஉன்னத அதிகாரநந்தி கோபுர தரிசனம் நடக்கிறது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 11 மணிக்கு அறுபத்து மூவர் அபிஷேகம், மாலை 4.30 மணி அளவில் சனி மகா பிரதோஷம், இரவு 8.30 மணிக்கு முதல் காலம், இரவு 11.30 மணிக்கு 2-ம் காலம், லிங்கோத்பவர் அபிஷேகம், அதிகாலை 2 மணிக்கு 3-ம் கால பூஜை நடக்கிறது.
முன்னதாக உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், தேவாரம்- திருவாசகம் இசைப்பாடல்கள், வாய்ப்பாட்டு, மாணவ-மாணவிகளின் பரத நாட்டியம் விடிய, விடிய நடக்கிறது. 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 4 மணிக்கு 4-ம் காலம், 5.30 மணிக்கு அதிஉன்னத அதிகாரநந்தி கோபுர தரிசனம் நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் சந்திரன், செயல் அலுவலா் சிவக்குமாா் மற்றும் பலா் செய்துள்ளனா்.
- வீராணம் ஏரியில் இருந்து வெள்ளியங்கால் ஓடை வழியாக கடலுக்கு வீணாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சிஅடைந்தனர்
- இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44,856 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அதோடு சென்னை மாநகரின் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக உள்ளதுஇந்த ஏரிக்கு பருவமழை பெய்யும் நேரங்களிலும், மேட்டூர் அணை தண்ணீர் மூலமும் நீர் வரத்து இருக்கும். கடந்த ஆண்டு பருவ மழை அதிகரித்ததால் வீராணம் ஏரி 6 முறை நிரம்பி வழிந்தது.தற்ேபாதும் ஏரி நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கி றது.
சுமார் ஒரு வாரகா லமாக 47.50 அடியாக நீடித்தது. இந்த நிலையில் வீராணம் ஏரியில் இருந்து வெள்ளியங்கால் ஓடை வழியாக கடலுக்கு வீணாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்இது குறித்து விவசாயிகள் கூறுகையில், வீராணம் ஏரி நிரம்பினால் அருகில் உள்ள கிராமங்களில் நீர்மட்டம் கணிசமாக உயரும். ஆனால், தற்ேபாது அதிகாரிகள் ஏரியில் உள்ள தண்ணீரை வீணாக கடலுக்கு திறந்து விடுகின்றனர். இதனால் ஏரியில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.இன்று காலை 8 மணி நிலவரப்படி வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46.95 அடியாக உள்ளது. ஏரிக்கு 334 கனஅடி நீர் வருகிறது. சென்னை மாநகர் குடிநீருக்காக 65 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.
- மகேஷ்வரி வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் மகேஷ்வரியை மருத்துவமனையில் சேர்த்தனர்
- அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வீரசோழகன் கிராமத்தை சேர்ந்தவர் வேலவன். அவரது மனைவி மகேஷ்வரி (வயது 35). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளது. நேற்று மகேஷ்வரி வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் மகேஷ்வரியை தூக்கிக்கொண்டு சிதம்பரம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






