சிதம்பரத்தில் பிரபல ரவுடி திடீர் மரணம்.

உடலில் பல இடங்களில் காயங்களுடன் இருந்துள்ளார். வீட்டில் கேட்டபோது வண்டியில் இருந்து தவறி விழுந்து விட்டதாக கூறியுள்ளார். சிறிது நேரம் கழித்து பாட்டி அவரை எழுப்பும்போது சண்முகம் இறந்த நிலையில் இருந்துள்ளார்.
சிதம்பரத்தில் பிரபல ரவுடி திடீர் மரணம்.
Published on

கடலூர்:

சிதம்பரம் கோவிந்தசாமி தெரு காரியபெருமாள் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகி என்கிற சண்முகம். இவர் கோவில் சிலை செய்யும் நபர். நேற்று முன்தினம் வெளியில் சென்றவர் நள்ளிரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது உடலில் பல இடங்களில் காயங்களுடன் இருந்துள்ளார். வீட்டில் கேட்டபோது வண்டியில் இருந்து தவறி விழுந்து விட்டதாக கூறியுள்ளார். மறுநாள் காலை மருத்துவ மனைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் பணம் வாங்கிக்கொண்டு தனது பாட்டி வீட்டிற்கு சென்று தூங்கியுள்ளார். சிறிது நேரம் கழித்து பாட்டி அவரை எழுப்பும்போது சண்முகம் இறந்த நிலையில் இருந்துள்ளார். அவரது தந்தை முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.மர்மமான முறையில் இறந்த சண்முகம் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் அவரது பெயர் ரவுடி பட்டியலில் இடம் பெற்றிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com