என் மலர்
கடலூர்
- இவரது வீட்டு தோட்டத்தில் கட்டியிருந்த 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த பேர்பெரியான் குப்பத்தை சேர்ந்தவர் ஏழுமலை. விவசாயி.இவரது வீட்டு தோட்டத்தில் கட்டியிருந்த 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இது குறித்து முத்தாண்டி குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் அறிந்ததும் இரவு ரோந்து பணியில் இருந்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரைப் பாண்டியன், முத்தாண்டிகுப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், எஸ்.எஸ்.ஐ. கலியமூர்த்தி ஆகியோர் ஆடு திருடர்கள் தேடுதல் வேட்டையை தீவிரப் படுத்தினர்க.டலூர் வாரசந்தையில் வடலூர் போலீசார் ஆடுகள் விற்க முயன்ற 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து முத்தாண்டிக் குப்பம் போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்தனர்
விசாரணையில் பேர்பெரியான் குப்பம் அசோக்குமார் (வயது 22), கருக்கை பிரதாப் (17), கீழ்காங்கேயன்குப்பம் ஹரிஷ் (17) என்பது தெரிய வந்தது. இவர்கள் 3 பேரும் பேர்பெரியான் குப்பத்தை சேர்ந்தவர் ஏழுமலை வீட்டில் 2 ஆடுகளை திருடி சென்று வடலூர் சந்தையில் விற்க முயன்றது தெரிய வந்தது.இதனை தொடர்ந்து 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், 2 ஆடுகள் ஆகிவற்றை பறி முதல் செய்தனர்.
- மின்கம்பத்தில் இன்று அதிகாலை கார் ஒன்று மோதி பலத்த சத்தத்துடன் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகே சாலை ஓரத்தில் இருந்த உயரழுத்த மின்கம்பத்தில் இன்று அதிகாலை கார் ஒன்று மோதி பலத்த சத்தத்துடன் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த பயங்கர விபத்தில் மின்கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்தது. ஆனால் அதிகாலை நேரம் என்பதால் மக்கள் இல்லாததால் பெரும் உயிர் இழப்பு தவிர்க்கப்பட்டது. இதனைதொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் திரண்டு கார் கண்ணாடிகளை உடைத்து உடனடியாக காரில் இருந்த 5-க்கும் மேற்பட்டவர்களை மீட்டு வெளியில் கொண்டு வந்தனர். பின்னர் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இத்தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கடலூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற போது மின் கம்பம் மின் கம்பியில் சிக்கி தொங்கிக் கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக அரசு பஸ் ஒன்று செல்வதற்கு முயன்ற போது திடீரென்று மின் கம்பி மீண்டும் அறுந்து பஸ் மீது மின்கம்பம் பலத்த சத்தத்துடன் விழுந்தது. அப்போது அங்கிருந்து பொதுமக்கள் மற்றும் பஸ்ஸில் இருந்த பயணிகள் அலறினார்கள்.
அப்போது மின்சாரத்துறை செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் மேற்பார்வையில் உதவி மின் பொறியாளர் அருள் மற்றும் மின் துறை ஊழியர்கள் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் உடனடியாக பஸ் மீது விழுந்த மின் கம்பத்தை அப்புறப்படுத்தினார்கள். இதில் அரசு பஸ்சின் கண்ணாடி உடைந்து நொறு ங்கியது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து அரசு பஸ் டிரைவரை கடும் எச்சரிக்கை செய்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் மஞ்சக்குப்பம் பகுதி மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வந்தனர்.
மேலும் மின்சார துறை அதிகாரிகள் சுமார் ஒரு மணி நேரமாக பணிகளை மேற்கொண்டு ஒரு சில பகுதிகளுக்கு உடனடியாக மின்சாரம் வழங்கி நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் ஒரு சில பகுதிகள் மின்சாரம் இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் காரில் வந்தவர்கள் திருத்தணியை சேர்ந்தவர்கள் என்பதும், திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலுக்கு செல்வதற்காக சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது தெரியவந்துள்ளது. காரை டிரைவர் கோபி ஓட்டி வந்ததும் அதில் வந்ததிருத்தணியை சேர்ந்த அம்சா உள்ளிட்ட 5 பேர் காயம் அடைந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த அம்சாவைமேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நடந்த விபத்து சம்பவத்தால் கடலூர்-புதுச்சேரி சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலை ஓர மின் கம்பத்தில் கார் மோதி விபத்து நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:
கடலூர் மாநகராட்சியில் வரி பாக்கி மற்றும் வாடகை பாக்கி வசூல் செய்ய மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலின் பேரில் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.வரி கட்டாத கடைகளுக்கு முன்பு குப்பைத் தொட்டிகள் வைத்தும், கடைகளுக்கு சீல் வைத்தும் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் தற்போது வரி மற்றும் வாடகை பாக்கி கணிசமாக வசூலாகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.கடலூர் லாரன்ஸ் ரோட்டில் வள்ளியம்மை பஜார் உள்ளது. இந்த பஜாரில் 16 கடைகளுக்கு வரி செலுத்தவில்லை. இதனால் மாநகராட்சி அதிகாரிகள் குப்பைத்தொட்டிகளை பஜாரின் வாசலில் வைத்து கடைகளுக்கு சீல் வைக்க முயன்றனர்.
இதனை தொடர்ந்து அங்கிருந்த கடை உரிமையாளர்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.இந்நிலையில் இன்று காலை மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் உத்தரவின் பேரில் வள்ளியம்மை பஜாரில் உள்ள 16 கடைகளுக்கு நேரில் சென்ற அதிகாரிகள், எந்தெந்த கடைகளுக்கு எவ்வளவு வரி பாக்கி என குறிப்பிட்டு அந்தந்த கடைகளில் இறுதி நோட்டீஸ் ஒட்டினர். இதில் மூன்று நாட்களுக்குள் வரி செலுத்தவில்லை என்றால் கடைகளில் உள்ள பொருட்கள் ஜப்தி செய்யப்படும் எழுதப்பட்டிருந்தது. இந்த சம்பவம் வர்த்தகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இவர் நேற்று மாலை தனது வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.
- கிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்து விட்டார்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை காலணி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் அரிகிருஷ்ணன் (வயது 67). கடலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர். மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர். இவர் நேற்று மாலை தனது வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.
மயங்கிய நிலையில் இருந்த இவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்து விட்டார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே இரும்பு பொருட்களை திருடி மினி வேனில் கொண்டு சென்ற டிரைவர் போலீஸ்காரரை பார்த்ததும் தப்பி ஓடி விட்டார்கடலூர் அருகே குள்ளஞ்சாவடி ராமநாதன் குப்பம் கூட்ரோடு பகுதியில் குள்ளஞ்சாவடி போலீஸ்காபெரியகுப்பம் தனியார் கம்பெனியிலிருந்து திருடப்பட்ட 2 டன் இரும்பு பொருட்கள் அதில் இருந்தது தெரிய வந்தது.அதனை தொடர்ந்து இரும்பு பொருட்கள் மற்றும் மினி வேனை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த சில தினங்களாக எண்ணூர் தனசேகரன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக சிறைத்துறை அலுவலர்களிடம் தொடர்ந்து கூறி வந்ததாக தெரிகிறது.
- எண்ணூர் தனசேகரன் அங்கிருந்த சிறை துறை போலீசாரிடம் தான் அதிகளவில் ரத்த அழுத்த மாத்திரை மற்றும் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளேன் என தெரிவித்தார்.
கடலூர்:
கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது.
இங்கு சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய சிறை சாலை ஜெயிலர் மணிகண்டன் சிறை வளாகத்தில் ஆய்வு செய்தார். அப்போது எண்ணூர் தனசேகரன் அறையில் இருந்து செல்போன் மற்றும் சார்ஜர் ஆகியவற்றை பறிமுதல் செய்தார். இதனால் கைதிகளுக்கு வெளிதொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து எண்ணூர் தனசேகரன் தூண்டுதலின் பேரில் சிலர் சிறை வார்டன் மணிகண்டன் வீட்டில் இல்லாத சமயத்தில் அவரது குடும்பத்தை தீ வைத்து எரித்து கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் எண்ணூர் தனசேகரன் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக எண்ணூர் தனசேகரன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக சிறைத்துறை அலுவலர்களிடம் தொடர்ந்து கூறி வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் எண்ணூர் தனசேகரன் அங்கிருந்த சிறை துறை போலீசாரிடம் தான் அதிகளவில் ரத்த அழுத்த மாத்திரை மற்றும் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளேன் என தெரிவித்தார்.
இதையடுத்து சிறைத் துறை அலுவலர்கள் தனசேகரனை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
எண்ணூர் தனசேகரன் தற்கொலைக்கு முயன்றது குறித்து வேலூர் சிறை துறை டி.ஐ.ஜி. விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் சிறைச்சாலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கடலூரில் இருந்து புதுப்பாளையம் செல்வ தற்காக அரசு பஸ்சில் ஏறினார்.
- ஒரு பெண் நந்தினி வைத்திருந்த கைப்பையில் இருந்த மணிப்பரிசை எடுத்த போது அதிர்ச்சி அடைந்தார்.
கடலூர்:
கடலூர் கூத்தப்பாக் கத்தை சேர்ந்தவர் நந்தினி (வயது 29). இவர் தொண்ட மாநத்தம் தபால் துறை அலுவலகத்தில் பணி புரிந்து வருகின்றார். சம்பவத் தன்று கடலூரில் இருந்து புதுப்பாளையம் செல்வ தற்காக அரசு பஸ்சில் ஏறினார். அப்போது அங்கு இருந்த ஒரு பெண் நந்தினி வைத்திருந்த கைப்பையில் இருந்த மணிப்பரிசை எடுத்த போது அதிர்ச்சி அடைந்தார். அப்போது நந்தினி சத்தம் போட்டதால் அங்கிருந்த பொதுமக்கள் அந்த பெண்ணை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்திய போது கடலூர் மஞ்சக்குப்பம் அங்கா ளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தேன்மொழி (27) என்பது தெரிய வந்தது. இது குறித்து திருப்பாதிரிபுலியூர் போலீீசார் வழக்கு பதிவு செய்து தேன்மொழியை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் கலந்து கொண்டு பேசினார்.
- சமூக விரோதிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள நிறைவேற்றப்பட்டன.
கடலூர்:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடலூர் தெற்கு மாவட்ட நிர்வாகி கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பால.அறவாழி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் முல்லைமாறன், ராஜேஷ், அன்பரசன், சுபாஷ், காட்டு ராஜா, ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் சமூக விரோதிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள நிறைவேற்றப்பட்டன.
- மணிகண்டன் (வயது 27). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கருணாகரன் மகன் அசோக் (23) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததுள்ளது.
- கத்தி மற்றும் நாட்டு துப்பாக்கியால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர்
கடலூர்:
நெய்வேலி 21-வது வட்டம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் மணிகண்டன் (வயது 27). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கருணாகரன் மகன் அசோக் (23) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததுள்ளது.
இந்நிலையில் சம்பவ த்தன்று மணிகண்டன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அசோக் தனது நண்பர்களுடன் சேர்ந்து மணிகண்டனை சரமாரியாக தாக்கி ஆபாசமாக திட்டி உள்ளனர்.
மேலும் கத்தி மற்றும் நாட்டு துப்பாக்கியால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர். இதுகுறித்து மணிகண்டன் நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அசோக். அரவிந்தன் (23). சுந்தரச் செல்வன் (23). முருகவேல் மகன் கணேஷ்குமார் (28) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- மாணவர்கள், பஸ் படிகட்டில் தொங்கியபடி ள்ளிக்கு சென்று வருவதாக கூறப்படுகிறது
- இதில் இரண்டு கிராம மாணவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் உருவாகி வந்தது.
கடலூர்:
குறிஞ்சிப்பாடி அரசுப் பள்ளியில் நத்தமேடு, குமுடிமுளை கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் தினமும் பஸ்சில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்.
சேர்ந்த மாணவர்கள், பஸ் படிகட்டில் தொங்கியபடி பள்ளிக்கு சென்று வருவதாக கூறப்படுகிறது. இதில் இரண்டு கிராம மாணவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் உருவாகி வந்தது.அதன்படி நேற்று முன்தினம் மாலை பள்ளி முடித்து மாணவர்கள் வீடு திரும்பினர். அப்போது அரசு பஸ்சின் படிகட்டில் தொங்கியபடி செல்வதில் மாணவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதுஇதில் நத்தமேடு மாணவர்கள், குமுடிமுளை மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து குமுடிமுளை மாணவர்கள் மருதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் 2 பேர் மாணவர்களாவர்கள். அவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், 3 பேரை சிறையில் அடைத்தனர்.
- இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
- அப்போது அவரை தள்ளிவிட்டு சிறுமிதப்பிஓடியுள்ளார்.
கடலூர்:
பண்ருட்டி முத்தாண்டிக்குப்பம் போலீஸ் எல்லைக்குட்பட்ட காட்டுக் கூடலுரை சேர்ந்தவர் சோழன். தொழிலாளி.
இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது ஆசை வார்த்தை கூறி பாலியல் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது அவரை தள்ளிவிட்டு சிறுமிதப்பிஓடியுள்ளார். இது குறித்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து சோழனை தேடி வந்தனர். கடந்த 2 மாதகாலமாக தலை மறைவாக இருந்த சோழன் பஸ் நிறுத்தம்அருகில்நின்று கொண்டிருந்தபோது அவரை அதிரடியாக கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
கடலூர்:
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மின்வாரியத்தில் 2018 ல் தொழிற்சங்கங்களுடன் போடப்பட்ட ஒப்பந்தத் தின்படி 1998 முதல் இன்று வரை பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்திட வேண்டும். காலியாக உள்ள கள உதவியாளர் பணி யிடங்களில் ஒப்பந்த ஊழியர்களை நியமித்திட வேண்டும். ஒப்பந்த ஊழி யர்களுக்கு அடையாள அட்டை மற்றும் கருணைத் தொகை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (16-ந் தேதி) கடலூர் சாவடியில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதுஅதன்படி மாநில துணைப் பொதுச் செயலாளர் பழனிவேல் தலைமையில் சி.ஐ.டி.யூ. மாநிலத் துணைத் தலைவர் கருப்பையன் மற்றும் நிர்வாகிகள் கடலூர் செம்மண்டலம் பகுதியில் திரண்டனர். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி சப்-இன்ஸ்பெக்டர் கதிர வன் மற்றும் ஏராள மான போலீசார் குவிக்கப்பட்ட னர் பின்னர் போலீசார் கடலூர் சாவடி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் என தெரிவித்துள்ளீர்கள்? ஏன் கடலூர் செம்மண்டலம் பகுதியில் நிர்வாகிகள் திரண்டு உள்ளீர்கள்? என கேட்டனர். அப்போது ஏராளமான நிர்வாகிகள் வரஉள்ளனர். இதன் காரணமாக அனைவரும் ஒருங்கிணைந்து கடலூர் செம்மண்ட லத்தில் இருந்து செயற்பொறியாளர் அலுவ லகம் வரை ஊர்வலமாக சென்று மறியல் போராட் டத்தில் ஈடுபட உள்ளோம் என தெரிவித்தனர்.
அப்போது போலீசார் ஊர்வலத்திற்கு அனுமதி கிடையாது. உங்கள் போராட்டத்தை நீங்கள் அறிவித்த இடத்தில் சென்று செய்து கொள்ளலாம் என தெரிவித்தனர். அப்போது எங்களது அடிப்படை கோரிக்கை களை வலியு றுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். ஆகை யால் நாங்கள் இங்கி ருந்து ஊர்வலமாக தான் செல்வோம் என தெரி வித்தனர். இதன் காரண மாக போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களுக்கும் கடும் வாக்கு வாதம் நடந்து வந்த நிலையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் எங்கள் கோரிக்கைகளை வலி யுறுத்தி அந்த பகுதியில் சென்று நாங்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடு கிறோம் என தெரிவித்த னர். ஆனால் போலீசார் செம்மண்டலம் பகுதியில் திரண்ட 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை கைது செய்தனர். மேலும் ஏற்கனவே அறிவித்தது போல் மறியல் போராட்டம் வழக்கம் போல் நடை பெறும். அங்கு எங்கள் கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என நிர்வாகிகள் தெரிவித்தை தொடர்ந்து போலீசார் அங்கிருந்து கலைந்து சென்றனர். இத னால் செயற்பொறியாளர் அலுவலகம் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி யில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.






