என் மலர்
கடலூர்
- இவ்வழியாக சென்று வருவதோடு பாதசாரிகளும் சாலை ஓரத்தில் நடந்து சென்று வருகின்றனர்.
- தரம் நாளடைவில் பாதிப்பு ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளது.
கடலூர்:
சென்னையில் இருந்து புதுச்சேரி கடலூர் வழியாக நாகப்பட்டினத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதன் காரணமாக மிக முக்கிய வழித்தடங்களாக இருப்பதால் கடலூர் நகரின் வழியாக 24 மணி நேரமும் வாகனங்கள் போக்குவரத்து இருந்து வருகின்றன. இதில் மிக முக்கியமாக கருதக்கூடிய பாலமாக கடலூர் அண்ணா பாலம் இருந்து வருகின்றன. இந்த பாலம் கெடிலம் ஆறு குறுக்கே இருந்து வருகின்றது. மேலும் கடலூர் நகரின் முக்கிய இணைப்பு பாலமாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடலூர் மக்களின் மிக முக்கிய அத்தியாவசிய பாலமாக இருந்து வருவதால் அனைத்து வாகனங்களும் இவ்வழியாக சென்று வருவதோடு பாதசாரிகளும் சாலை ஓரத்தில் நடந்து சென்று வருகின்றனர். இந்த நிலையில் பாலத்தின் நடுவே தற்போது குண்டு குழியுமாக இருப்பதோடு பாலத்தில் உள்ள இரும்பு கம்பிகள் பெயர்ந்து மேலே வந்துள்ளது. இவ்வழியாக வாகனங்கள் அதிகளவில் சென்று வருவதால் பாலத்தின் தரம் நாளடைவில் பாதிப்பு ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளது.
மேலும் பாலத்தில் அதிகளவில் அதிர்வுகள் ஏற்பட்டு வருவதால் நாளுக்கு நாள் சாலையில் பள்ளம் அதிகரித்து வருவதோடு வாகனங்கள் சாலை ஓரத்தில் செல்லும்போது பாதசாரிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. சில நேரங்களில் பாதசாரிகள் மீது வாகனங்கள் மோதி விபத்தும் ஏற்பட்டு வருவதையும் காண முடிகிறது .இந்த நிலையில் கனரக வாகனங்கள் செல்லும் சமயத்தில் அதிக அதிர்வலைகள் ஏற்படும் நேரத்தில் அவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மற்றும் மக்களுக்கு அதிர்ச்சி ஏற்படக்கூடிய நிலையும் உருவாகி உள்ளது. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மிக முக்கியமாக கருதக்கூடிய அண்ணா பாலத்தை உரிய முறையில் ஆய்வு செய்து பாலத்தின் தரமும் சாலையில் ஏற்பட்டுள்ள குண்டும் குழியுமானதை சரி செய்து உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் சாலையின் மேலே உள்ள இரும்பு கம்புகளை சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- மேயர் சுந்தரி ராஜா உத்தரவின் பேரில் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் மேற்பார்வையில் பணிகள் நடைபெற்று வருகிறது.
- கடும் துர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளில் துப்புரவு ஊழியர்கள் தினந்தோறும் குப்பைகளை அகற்றி மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து கொண்டு சென்று வருகின்றனர். கடலூர் மாநகராட்சியில் தற்போது குப்பை கிடங்கு இல்லாததால் 3இடங்களில் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து உடனுக்குடன் குப்பைகளை அகற்றும் நடவடிக்கையில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா உத்தரவின் பேரில் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் மேற்பார்வையில் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் கடலூர் மாநகராட்சி பகுதியில் குப்பை கிடங்கு இல்லாததால் ஆங்காங்கே குப்பைகள் உடனுக்குடன் அகற்ற முடியாத நிலையில் துப்புரவு ஊழியர்கள் இருந்து வருகின்றனர்.
இதன் காரணமாக கடலூர் மாநகராட்சி பகுதியில் உடனுக்குடன் குப்பைகளை அகற்ற முடியாத காரணத்தினால் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசி வருவதோடு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. இதில் கடலூர் மஞ்சக்குப்பம் சொரக்கல்பட்டு பகுதியில் குப்பை தொட்டிகள் முழுவதும் கழிவுகள் மற்றும் குப்பைகள் நிரம்பி சாலையில் சிதறி இருக்கின்றது இதனை நாய், பன்றிகள் கிளறி செல்வதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். ஆகையால் அதிகாரிகள் சுகாதாரத்திற்கு தனி கவனம் செலுத்தி பொதுமக்களின் அடிப்படை பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
- தொடர்ச்சியாக 24 மணிநேரமும் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
- இசைப்பாடல்கள், வாய்ப்பாட்டு ஆகியன நடைபெற்றது.
கடலூர்:
திருவதிகை வீரட்டா னேசுவரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இதை யொட்டி மூலவர், அம்பாள் மற்றும் பிரகார லிங்க திருமேனிக்கு 108 மூலிகை திரவியங்களால் 4 கால மகா அபிஷேகம் நடந்தது. சரக்கொன்றை நாதருக்கு சப்தநதி, பஞ்சகங்கை புண்ணிய தீர்த்தங்களால் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை தொடர்ச்சியாக 24 மணிநேரமும் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
திருநாவுக்கரசு திரு தொண்டு அடியார்கள் கூட்டம் சார்பில் இரவு முழு வதும் சொற்பொழிவு, பரத நாட்டியம், தேவாரம், திருவாசகம், இசைப்பா டல்கள், வாய்ப்பாட்டு ஆகியன நடைபெற்றது.இன்று அதிகாலை 5.30 மணிக்கு அதி உன்னத அதிகாரநந்தி கோபுர தரிசனம் நடந்தது.விழா வுக்கான ஏற்பாடு களை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், ஆய்வாளர் ஸ்ரீதேவி, செயல் அலுவலர் மகாதேவி, சிவாச்சாரியார்கள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
- காலை 6 மணி முதல் தொடங்கப்பட்ட தேர்வில் ஏராளமான வீரர்கள் ஆர்வ முடன் கலந்து கொண்டனர்.
- 14 வயது முதல் 24 வயதிற் குட்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.
கடலூர்:
தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் சங்கம் சார்பில், வேகப்பந்து வீச்சாளர் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் சிறப்பு பயிற்சிக் கான வீரர்கள் தேர்வு கடலூர் அண்ணா விளை யாட்டு மைதானத்தில் நடை பெற்றது. இதில் நேற்று சுழற் பந்து வீரர்களுக்கான தேர்வு நடைபெற்றது. இன்று காலை வேகப்பந்து வீரர்களுக்கான தேர்வு நடை பெற்று வருகிறது. கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் காலை 6 மணி முதல் தொடங்கப்பட்ட தேர்வில் ஏராளமான வீரர்கள் ஆர்வ முடன் கலந்து கொண்டனர். தேர்வு இன்று மாலை 6 மணி வரை நடக்கிறது.
இந்த போட்டியில் 14 வயது முதல் 24 வயதிற் குட்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். தேர்வில் பங்கேற்கும் வீரர்கள் வெள்ளை நிற உடை அணிந்து வந்தனர். தமிழ் நாடு கிரிக்கெட் அசோசி யேஷன் சங்க செயலாளர் பழனி தலைமையில் கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் பாஸ்கரன் செயலாளர் கூத்தரசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த தேர்வில் கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
- 30 வயது பெண் தனது வீட்டில் தோட்டத்தில் உள்ள பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது குரு என்பவர் மறைந்து நின்று பார்த்ததாக கூறப்படுகிறது.
- மனைவி இரண்டு பேரும் இளம்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் அடுத்த நெல்லிக்குப்பம் சேர்ந்த 30 வயது பெண் தனது வீட்டில் தோட்டத்தில் உள்ள பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது குரு என்பவர் மறைந்து நின்று பார்த்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் குருவை தட்டி கேட்டார்.
அப்போது இருவருக்கும் வாக்குவதம் ஏற்பட்டது. இதில் குரு மற்றும் அவரது மனைவி இரண்டு பேரும் இளம்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து குருவை அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவத்தில் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- வீட்டில் இருந்து பள்ளிக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீட்டிற்கு வரவில்லை.
- திடீரென்று இளம் பெண் காணாமல் சென்றது தெரிய வந்துள்ளது
கடலூர்:
கடலூர்முதுநகர் சேர்ந்த 23 வயது பெண் தனியார் பள்ளியில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். சம்பத்தன்று தனது வீட்டில் இருந்து பள்ளிக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீட்டிற்கு வரவில்லை.இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இளம்பெண்ணை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் காணாமல் போன இளம் பெண்ணுக்கும், வாலிபர் ஒருவருக்கும் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டதாகவும், இதன் மூலம் 2 பேரும் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசி வந்த நிலையில் திடீரென்று இளம் பெண் காணாமல் சென்றது தெரிய வந்துள்ளது. இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.
- 1 ஆம் தேதி முதல்வரின் பிறந்த நாள் வருகிறது. ஆகையினால் இங்கு எழுத வேண்டாம் என ஆட்சேபணை தெரிவித்தனர்.
கடலூர்:
பா.ம.க. நிறுவனர் மரு.ராமதாஸ் வரும் 21-ம் தேதி சென்னையில் துவங்கி, 28-ம் தேதி மதுரையில் நிறைவு செய்யும் வகையில் தமிழைத் தேடி எனும் விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை நடத்த உள்ளார். அரசியல் சார்பில்லாமல், பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் நடத்தும் இந்த நிகழ்ச்சிக்காக கடலுார் வடக்கு மாவட்டம் பா.ம.க. சார்பில், மாவட்ட செயலாளர் ஜெகன் பல்வேறு இடங்களில் துண்டு பிரசுரங்களை வழங்கியும், சுவர் விளம்பரம் எழுதும் பணியையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், நேற்று, சென்னை கும்பகோணம் சாலையில் உள்ள வீராணம் நீரேற்றும் மையத்தின் சுவரில் விளம்பரம் எழுதுவதற்கான தீவிர பணியில் பா.ம.க.வினர் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த தி.மு.க.வினர் சிலர், வரும் 1 ஆம் தேதி முதல்வரின் பிறந்த நாள் வருகிறது. ஆகையினால் இங்கு எழுத வேண்டாம் என ஆட்சேபணை தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த நெய்வேலி சரக டி.எஸ்.பி. ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது உள்ளிட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பா.ம.க. வடக்கு
- இவரது வீட்டு தோட்டத்தில் கட்டியிருந்த 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த பேர்பெரியான் குப்பத்தை சேர்ந்தவர் ஏழுமலை. விவசாயி.இவரது வீட்டு தோட்டத்தில் கட்டியிருந்த 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இது குறித்து முத்தாண்டி குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் அறிந்ததும் இரவு ரோந்து பணியில் இருந்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரைப் பாண்டியன், முத்தாண்டிகுப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், எஸ்.எஸ்.ஐ. கலியமூர்த்தி ஆகியோர் ஆடு திருடர்கள் தேடுதல் வேட்டையை தீவிரப் படுத்தினர்க.டலூர் வாரசந்தையில் வடலூர் போலீசார் ஆடுகள் விற்க முயன்ற 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து முத்தாண்டிக் குப்பம் போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்தனர்
விசாரணையில் பேர்பெரியான் குப்பம் அசோக்குமார் (வயது 22), கருக்கை பிரதாப் (17), கீழ்காங்கேயன்குப்பம் ஹரிஷ் (17) என்பது தெரிய வந்தது. இவர்கள் 3 பேரும் பேர்பெரியான் குப்பத்தை சேர்ந்தவர் ஏழுமலை வீட்டில் 2 ஆடுகளை திருடி சென்று வடலூர் சந்தையில் விற்க முயன்றது தெரிய வந்தது.இதனை தொடர்ந்து 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், 2 ஆடுகள் ஆகிவற்றை பறி முதல் செய்தனர்.
- மின்கம்பத்தில் இன்று அதிகாலை கார் ஒன்று மோதி பலத்த சத்தத்துடன் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகே சாலை ஓரத்தில் இருந்த உயரழுத்த மின்கம்பத்தில் இன்று அதிகாலை கார் ஒன்று மோதி பலத்த சத்தத்துடன் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த பயங்கர விபத்தில் மின்கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்தது. ஆனால் அதிகாலை நேரம் என்பதால் மக்கள் இல்லாததால் பெரும் உயிர் இழப்பு தவிர்க்கப்பட்டது. இதனைதொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் திரண்டு கார் கண்ணாடிகளை உடைத்து உடனடியாக காரில் இருந்த 5-க்கும் மேற்பட்டவர்களை மீட்டு வெளியில் கொண்டு வந்தனர். பின்னர் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இத்தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கடலூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற போது மின் கம்பம் மின் கம்பியில் சிக்கி தொங்கிக் கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக அரசு பஸ் ஒன்று செல்வதற்கு முயன்ற போது திடீரென்று மின் கம்பி மீண்டும் அறுந்து பஸ் மீது மின்கம்பம் பலத்த சத்தத்துடன் விழுந்தது. அப்போது அங்கிருந்து பொதுமக்கள் மற்றும் பஸ்ஸில் இருந்த பயணிகள் அலறினார்கள்.
அப்போது மின்சாரத்துறை செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் மேற்பார்வையில் உதவி மின் பொறியாளர் அருள் மற்றும் மின் துறை ஊழியர்கள் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் உடனடியாக பஸ் மீது விழுந்த மின் கம்பத்தை அப்புறப்படுத்தினார்கள். இதில் அரசு பஸ்சின் கண்ணாடி உடைந்து நொறு ங்கியது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து அரசு பஸ் டிரைவரை கடும் எச்சரிக்கை செய்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் மஞ்சக்குப்பம் பகுதி மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வந்தனர்.
மேலும் மின்சார துறை அதிகாரிகள் சுமார் ஒரு மணி நேரமாக பணிகளை மேற்கொண்டு ஒரு சில பகுதிகளுக்கு உடனடியாக மின்சாரம் வழங்கி நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் ஒரு சில பகுதிகள் மின்சாரம் இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் காரில் வந்தவர்கள் திருத்தணியை சேர்ந்தவர்கள் என்பதும், திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலுக்கு செல்வதற்காக சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது தெரியவந்துள்ளது. காரை டிரைவர் கோபி ஓட்டி வந்ததும் அதில் வந்ததிருத்தணியை சேர்ந்த அம்சா உள்ளிட்ட 5 பேர் காயம் அடைந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த அம்சாவைமேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நடந்த விபத்து சம்பவத்தால் கடலூர்-புதுச்சேரி சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலை ஓர மின் கம்பத்தில் கார் மோதி விபத்து நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:
கடலூர் மாநகராட்சியில் வரி பாக்கி மற்றும் வாடகை பாக்கி வசூல் செய்ய மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலின் பேரில் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.வரி கட்டாத கடைகளுக்கு முன்பு குப்பைத் தொட்டிகள் வைத்தும், கடைகளுக்கு சீல் வைத்தும் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் தற்போது வரி மற்றும் வாடகை பாக்கி கணிசமாக வசூலாகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.கடலூர் லாரன்ஸ் ரோட்டில் வள்ளியம்மை பஜார் உள்ளது. இந்த பஜாரில் 16 கடைகளுக்கு வரி செலுத்தவில்லை. இதனால் மாநகராட்சி அதிகாரிகள் குப்பைத்தொட்டிகளை பஜாரின் வாசலில் வைத்து கடைகளுக்கு சீல் வைக்க முயன்றனர்.
இதனை தொடர்ந்து அங்கிருந்த கடை உரிமையாளர்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.இந்நிலையில் இன்று காலை மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் உத்தரவின் பேரில் வள்ளியம்மை பஜாரில் உள்ள 16 கடைகளுக்கு நேரில் சென்ற அதிகாரிகள், எந்தெந்த கடைகளுக்கு எவ்வளவு வரி பாக்கி என குறிப்பிட்டு அந்தந்த கடைகளில் இறுதி நோட்டீஸ் ஒட்டினர். இதில் மூன்று நாட்களுக்குள் வரி செலுத்தவில்லை என்றால் கடைகளில் உள்ள பொருட்கள் ஜப்தி செய்யப்படும் எழுதப்பட்டிருந்தது. இந்த சம்பவம் வர்த்தகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இவர் நேற்று மாலை தனது வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.
- கிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்து விட்டார்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை காலணி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் அரிகிருஷ்ணன் (வயது 67). கடலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர். மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர். இவர் நேற்று மாலை தனது வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.
மயங்கிய நிலையில் இருந்த இவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்து விட்டார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே இரும்பு பொருட்களை திருடி மினி வேனில் கொண்டு சென்ற டிரைவர் போலீஸ்காரரை பார்த்ததும் தப்பி ஓடி விட்டார்கடலூர் அருகே குள்ளஞ்சாவடி ராமநாதன் குப்பம் கூட்ரோடு பகுதியில் குள்ளஞ்சாவடி போலீஸ்காபெரியகுப்பம் தனியார் கம்பெனியிலிருந்து திருடப்பட்ட 2 டன் இரும்பு பொருட்கள் அதில் இருந்தது தெரிய வந்தது.அதனை தொடர்ந்து இரும்பு பொருட்கள் மற்றும் மினி வேனை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






