நெல்லிக்குப்பத்தில் இளம்பெண்ணை தாக்கிய கணவன், மனைவி மீது வழக்கு

30 வயது பெண் தனது வீட்டில் தோட்டத்தில் உள்ள பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது குரு என்பவர் மறைந்து நின்று பார்த்ததாக கூறப்படுகிறது.மனைவி இரண்டு பேரும் இளம்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
நெல்லிக்குப்பத்தில்  இளம்பெண்ணை தாக்கிய கணவன், மனைவி மீது வழக்கு
Published on

கடலூர்:

கடலூர் அடுத்த நெல்லிக்குப்பம் சேர்ந்த 30 வயது பெண் தனது வீட்டில் தோட்டத்தில் உள்ள பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது குரு என்பவர் மறைந்து நின்று பார்த்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் குருவை தட்டி கேட்டார்.

அப்போது இருவருக்கும் வாக்குவதம் ஏற்பட்டது. இதில் குரு மற்றும் அவரது மனைவி இரண்டு பேரும் இளம்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து குருவை அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவத்தில் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com