என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பந்து வீச்சாளர் தேர்வு"

    • காலை 6 மணி முதல் தொடங்கப்பட்ட தேர்வில் ஏராளமான வீரர்கள் ஆர்வ முடன் கலந்து கொண்டனர்.
    • 14 வயது முதல் 24 வயதிற் குட்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் சங்கம் சார்பில், வேகப்பந்து வீச்சாளர் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் சிறப்பு பயிற்சிக் கான வீரர்கள் தேர்வு கடலூர் அண்ணா விளை யாட்டு மைதானத்தில் நடை பெற்றது. இதில் நேற்று சுழற் பந்து வீரர்களுக்கான தேர்வு நடைபெற்றது. இன்று காலை வேகப்பந்து வீரர்களுக்கான தேர்வு நடை பெற்று வருகிறது. கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் காலை 6 மணி முதல் தொடங்கப்பட்ட தேர்வில் ஏராளமான வீரர்கள் ஆர்வ முடன் கலந்து கொண்டனர். தேர்வு இன்று மாலை 6 மணி வரை நடக்கிறது.

    இந்த போட்டியில் 14 வயது முதல் 24 வயதிற் குட்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். தேர்வில் பங்கேற்கும் வீரர்கள் வெள்ளை நிற உடை அணிந்து வந்தனர். தமிழ் நாடு கிரிக்கெட் அசோசி யேஷன் சங்க செயலாளர் பழனி தலைமையில் கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் பாஸ்கரன் செயலாளர் கூத்தரசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த தேர்வில் கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

    ×