search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "case against husband"

    • லோன் கொடுத்தவர்கள் அந்த பணத்தை கட்ட ச்சொல்லி அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளனர்.
    • மேலும் பணத்தை லெட்சுமணனிடமும் கேட்டதால் கணவன் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி முந்தல் காலனியைச் சேர்ந்தவர் லெட்சுமணன் (வயது 35). இவருக்கும் சிவகாமி (27) என்பவருக்கும் 13 ஆண்டு களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு வர்ஷன் (7), நேத்ரா (3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். லெட்சுமணன் சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

    சிவகாமி மகளிர் சுய உதவிக்குழுவில் கடன் வாங்கி கடனை அடைக்க முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் லோன் கொடுத்தவர்கள் அந்த பணத்தை கட்ட ச்சொல்லி அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளனர்.

    மேலும் பணத்தை லெட்சுமணனிடமும் கேட்டு ள்ளனர். இதனால் கணவன் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. யாரைக் கேட்டு லோன் வாங்கினாய்? அந்த பணத்தை கட்ட முடியாதா? என கேட்டு சிவகாமியை கத்தியால் இடுப்பு, தொடை, முழங்கை ஆகிய இடங்களில் சரமாரியாக குத்தினார். பலத்த காயமடைந்த சிவகாமி தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து போடி டவுன் போலீஸ் இன்ஸ்பெ க்டர் புவனேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • 30 வயது பெண் தனது வீட்டில் தோட்டத்தில் உள்ள பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது குரு என்பவர் மறைந்து நின்று பார்த்ததாக கூறப்படுகிறது.
    • மனைவி இரண்டு பேரும் இளம்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த நெல்லிக்குப்பம் சேர்ந்த 30 வயது பெண் தனது வீட்டில் தோட்டத்தில் உள்ள பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது குரு என்பவர் மறைந்து நின்று பார்த்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் குருவை தட்டி கேட்டார்.

    அப்போது இருவருக்கும் வாக்குவதம் ஏற்பட்டது. இதில் குரு மற்றும் அவரது மனைவி இரண்டு பேரும் இளம்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து குருவை அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவத்தில் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    ஆந்திர இளம்பெண்ணை விபசார கும்பலிடம் விற்பனை செய்தது தொடர்பாக கணவர் உள்பட 3 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பல்லி அடுத்த பாப்பிரெட்டி காசிபல்லியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண்.

    இவருக்கும மதனப்பல்லி ரெயில் நிலையம் அருகேயுள்ள நல்லகுட்டல பல்லியை சேர்ந்த மல்லிகார்ஜுன் என்பவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

    அவர்களுக்கு வம்சி என மகன் உள்ளார். மல்லாகார்ஜுனாவுக்கும் இளம்பெண்ணுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று இளம்பெண் தன் தாய் வீட்டிற்கு வந்து விட்டார்.

    பின்னர் மதனபல்லியை சேர்ந்த நல்லபூரி எல்லம்மா என்பவரின் மகன் ரெட்டியப்பா என்பவருக்கு இளம்பெண்ணை 2-வதாக திருமணம் செய்தனர்.

    அப்போது ரெட்டியப்பாவின் நண்பர் நரசிம்மலு, அவரது மனைவி அருணா ரெட்டியப்பாவிடம் மும்பையில் உனது மனைவிக்கு நல்ல சம்பளத்தில் வேலை உள்ளது. எங்களுடன் அனுப்பிவை என கேட்டுள்ளார்.ரெட்டியப்பா மனைவியை அவர்களுடன் அனுப்பி வைத்துள்ளார்.

    கடந்த 2017 ஜூலை 24-ந் தேதி மும்பையில் உள்ள ராணி என்பவரிடம் இளம்பெண்ணை விற்று உள்ளனர். கடந்த 15 மாதங்களாக விபசார விடுதியில் தங்கியிருந்து இளம்பெண் அங்கிருந்து தப்பி வந்து மதனப்பல்லி டி.எஸ்.பி. சிவானந்தரெட்டியிடம் புகார் அளித்தார்.

    அதில் தனது கணவருக்கு தெரிந்தே அவரது நண்பருடன் மும்பைக்கு அனுப்பி உள்ளார். எனவே எனது கணவர் ரெட்டியப்பா, அவரது நண்பர் நரசிம்மலு, அவரது மனைவி அருணா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியிருந்தார்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் மும்பைக்கு சென்றனர். #tamilnews
    ×