என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லிக்குப்பம் அருகே கரும்பு ஏற்றி வந்து கவிழ்ந்த லாரி.
நெல்லிக்குப்பம் அருகே கரும்பு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
- லாரியில் கரும்பு ஏள்றிக் கொண்டு வந்த போது சாலையின் ஓரத்தில் வாகனத்தை நிறுத்துவதற்கு டிரைவர் சென்று கொண்டிருந்தார்.
- இதனை பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சடைந்து ஏராளமானோர் அங்கு திரண்டனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த நெல்லிக்குப்பத்தில் தனியார் சர்க்கரை ஆலை உள்ளது. தற்போது சர்க்கரை அலையில் கரும்பு அரவை நடைபெற்று வருவதால் நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினந்தோறும் டிராக்டர்கள் மற்றும் பல்வேறு வாகனங்கள் மூலம் கரும்புகள் ஏற்றி வந்து அரவை நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்று காலை லாரியில் கரும்பு ஏள்றிக் கொண்டு வந்த போது சாலையின் ஓரத்தில் வாகனத்தை நிறுத்துவதற்கு டிரைவர் சென்று கொண்டிருந்தார். அப்போது மணல் பகுதியான சாலையில் திடீரென லாரி கவிழ்ந்தது.
அப்போது சாலையின் ஓரத்தில் இருந்த வீட்டில் சுவர் பகுதியில் கரும்பு கட்டுகள் சரிந்தன. இதன் காரணமாக வீட்டின் அருகாமையில் இருந்த தகர சீட்டுகள் நசுங்கி பாதிப்படைந்தன. இதனை பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சடைந்து ஏராளமானோர் அங்கு திரண்டனர். மேலும், அந்த பகுதியை சேர்ந்த கவுன்சிலர்கள் பூபாலன் ராணி மற்றும் பலர் ஆலை நிர்வாகத்திடம் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுவதால் இதற்கு தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.






