என் மலர்tooltip icon

    கடலூர்

    • சுந்தரம் (வயது 56) . இவர் கடந்த 7-ந் தேதி அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை கண்ட மனைவி கோபத்தில் திட்டினார்.
    • இதனால் மன வருத்தத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை மதுவில் கலந்து குடித்துமயக்கநிலையில் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்

    கடலூர்:

    சிதம்பரம் அருகே வாசப்புத்தூர் கிராமத்தில் வசித்து வந்தவர் சுந்தரம் (வயது 56) . இவர் கடந்த 7-ந் தேதி அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை கண்ட மனைவி கோபத்தில் திட்டினார். இதனால் மன வருத்தத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை மதுவில் கலந்து குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உடனடியாக மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதனையடுத்து இவரது மகன் குணசேகரன் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    • கல்லூரி மாணவ- மாணவிகள்பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • உதவி பேராசிரியர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தார்.

    கடலூர்:

    தமிழ் ஆட்சி மொழி சட்டவார விழாவை ஒரு வாரம் கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி முதல் நாளான இன்று கடலூர் டவுன் ஹாலில் இருந்து கல்லூரி மாணவ- மாணவிகள்பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அன்பரசி, பெரியார் கலை கல்லூரி முதல்வர் ஜோதி வெங்கடேஸ்வரன், தமிழ் துறை உதவி பேராசிரியர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேரணியில் பெரியார் அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் கடலூர் அரசு தொழில் பயிற்சி மாணவர்கள் கலந்து கொண்டு, கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். இந்த பேரணி கடலூர் டவுன்ஹாலில் இருந்து தொடங்கி அரசு தொழில் பயிற்சி நிலையம் வரை சென்று முடிவடைந்தது. இதில் அரசு தொழில் பயிற்சி கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் வெங்கடாஜலபதி மற்றும் ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடலூர் வழியாக சென்று வருவதால் எந்நேரமும் போக்குவரத்து மிகுந்த மாநகரமாக இருந்து வருகின்றது.
    • சாலைகளில் மாடுகள் எந்தவித கட்டுப்பாட்டுகள் இன்றி சுற்றி திரிந்து வருகின்றன.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டத்தின் தலைநகராக கடலூர் இருந்து வருகின்றது.  மேலும் கடலூர் மாநகரில் பிரசித்தி பெற்ற கோவில்கள், கடலூர் சிப்காட் பகுதியில் பெரிய தொழிற்சாலைகள் மற்றும் அரசு தலைமை அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இது மட்டும் இன்றி சென்னையில் இருந்து நாகப்பட்டினம் செல்லக்கூடிய அனைத்து வாகனமும் கடலூர் வழியாக சென்று வருவது குறிப்பிடத்தக்கதாகும். இதன் காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடலூர் வழியாக சென்று வருவதால் எந்நேரமும் போக்குவரத்து மிகுந்த மாநகரமாக இருந்து வருகின்றது.

    மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடலூர் பஸ் நிலையத்திற்கும் வருகை தந்து அங்கிருந்து மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்கள் மற்றும் முக்கிய நகரப் பகுதிக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், முதுநகர், பஸ் நிலையம் ,செம்மண்டலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மாடுகள் எந்தவித கட்டுப்பாட்டுகள் இன்றி சுற்றி திரிந்து வருகின்றன. இதன் காரணமாக கடலூர் முக்கிய சாலைகளிலும், பஸ் நிலையத்திலும் அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இது மட்டும் இன்றி எந்தவித கட்டுப்பாடும் இன்றி சாலையில் சுற்றி திரியும் மாடுகள் திடீரென்று நடந்து செல்பவர்கள் மீதும் வாகனங்களில் செல்பவர்கள் மீதும் முட்டுவதால் உயிர்பலி ஏற்படும் அபாயமும் நிலவி வருகின்றது. மேலும் சிறுவர், சிறுமிகள் அழைத்துவரும் பெற்றோர்கள் மாடுகளை பார்த்து பீதி அடைந்து செல்வதையும் காண முடிகிறது. சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் சாலை ஓரங்களில் உள்ள உணவுப் பொருட்களை உட்கொள்வதால் வியாபாரிகளுக்கும் கடும் நஷ்டம் ஏற்பட்டு வருகின்றது இதில் மிக முக்கியமாக சாலையில் செல்பவர்களை அடிக்கடி முட்டுவதும் , முட்டுவது போல் நெருங்கி செல்வதும் அனைத்து தரப்பு மக்களையும் பெரும் அச்சத்தில் ஆழ்த்தி வருகின்றது ஆனால் சுற்றி திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தங்கள் மாடுகளை வெளியில் சுற்றி திரிய வைத்து பின்னர் இரவு நேரங்களில் பாதுகாப்பாக தங்கள் மாடுகளை அழைத்து செல்வதையும் காணமுடிகிறது.

    இது சம்பந்தமாக கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, அனுமதி இன்றி சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் மற்றும் கால்நடைகளை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தும் எந்தவித அச்சமும் இன்றி கால்நடை உரிமையாளர்கள் பொதுமக்களை அச்சுறித்திவரும் மாடுகளை சாலைகளில் சுற்றி திரிய வைக்கின்றனர். ஆகையால் கடலூர் மாநகராட்சி அதிகாரிகள் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை உடனடியாக பறிமுதல் செய்து அதிகளவில் அபராத தொகை வசூல் செய்து சுற்றி தெரியும் மாடுகளை கட்டுப்படுத்த நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • தமிழ்ச்செல்வன் கேரளாவில் கூலித் தொழிலாளியாக பணி செய்து வருகிறார்.
    • தாயார் இன்பவள்ளி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

    கடலூர்:

    சிதம்பரத்தை அடுத்த குமராட்சி கோப்பாடியில் வசித்து வந்தவர் இன்பவள்ளி (வயது 38). இவர் சத்துணவு கூடத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (45) என்பவருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தமிழ்ச்செல்வன் கேரளாவில் கூலித் தொழிலாளியாக பணி செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி கோயம்புத்தூரில் வசிக்கிறார். இளைய மகள் இலக்கியா தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். மகன் 10-ம் வகுப்பு முடித்து விட்டு கம்பி பிட்டர் வேலை செய்கிறார்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்ச்செல்வன் கிராமத்திற்கு வந்தார். அது முதல் இங்கேயே தங்கியுள்ளார். இதில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. குறிப்பாக இன்பவள்ளியின் நடத்தையில் தமிழ்ச்செல்வனுக்கு சந்தேகம் இருந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில் நர்சிங் கல்லூரிக்கு சென்ற இலக்கியா, கல்லூரி முடித்து நேற்று மாலை வீடு திரும்பினார். அப்போது அவரது தாயார் இன்பவள்ளி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இலக்கியா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குமராட்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீசார் கொலை செய்யப்பட்ட இன்பவள்ளியின் உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக புகாரின் பேரில் தமிழ்ச்செல்வனை போலீசார் கைது செய்து விசாரித்தனர். போலீசாரின் விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

    நான் கேரளாவில் பணி செய்து வந்தேன். பொங்கலை முன்னிட்டு வீட்டிற்கு வந்தேன். அதிலிருந்து எனக்கு வயிறு வலி ஏற்பட்டது. எனது மனைவி இன்பவள்ளியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல கூறினேன். வேலை இருக்கிறது என்று வெளியில் சென்று விடுவார். இதையடுத்து நானே சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தேன். தினமும் காலையில் வேலைக்கு செல்லும் எனது மனைவி, மாலையில் வீட்டிற்கு வருவார். உடனே வேலை இருக்கிறது என்று கூறிவிட்டு வெளியே சென்று விடுவார். இரவு 10 மணிக்கு மேல் வீட்டிற்கு வருவார். நான் ஏதாவது கேட்டால் என்னிடம் சண்டையிடுவாள்.

    சத்துணவு கூடத்தை பொருத்தவரையில் மாணவர்களுக்கு சமையல் செய்து முடித்து விட்டு மதியமே வீட்டிற்கு வந்து விடலாம். ஆனால், இன்பவள்ளி வீட்டிற்கு வருவதே இல்லை. இது சம்பந்தமாக எங்களுக்குள் அடிக்கடி சண்டை வரும். இந்நிலையில் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மாத்திரை வாங்கிக் கொண்டு நேற்று மதியம் வீட்டிற்கு வந்தேன். அப்போது வீட்டில் இருந்த இன்பவள்ளி, என்னை பார்த்தவுடன் வீட்டை விட்டு வெளியே சென்றார். அவரை தடுத்த நான் எங்கு செல்கிறாய் என்று கேட்டேன். வேலை இருக்கிறது. வெளியே செல்கிறேன் என்று கூறினார். வெளியே சென்றால் கத்தியால் வெட்டி விடுவேன் என்று நான் மிரட்டினேன். அதனை பொருட்படுத்தாமல் வீட்டை விட்டு வெளியே செல்ல இன்பவள்ளி முயற்சித்தார். இதனால் ஆத்திரமடைந்த நான் கத்தியால் இன்பவள்ளியின் கழுத்தை அறுத்து கொலை செய்தேன். இவ்வாறு தமிழ்ச்செல்வன் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.

    • கடந்த சில தினங்களாக கடலூர் மாவட்டத்தில் பிறந்த குழந்தைகள் காணாமல் போனது.
    • குறிப்பாக வடலூர் சுற்றுவட்டார பகுதியில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த குழந்தைகள் மாயமானார்கள்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், வடலூர் பகுதியைச் சேர்ந்தவர் மெகருநிஷா (வயது 60). இவர் சித்த மருத்துவர். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வடலூர் பஸ் நிலையம் அருகில் சித்த மருத்துவமனை வைத்து பொது மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். பெண் மருத்துவர் என்பதால் இவரிடம் ஏழை, எளிய பெண்கள் சிகிச்சைக்காக வந்து செல்வர்.

    அவ்வாறு வரும் பெண்களின் வறுமையை பணமாக்க நினைத்த இந்த மருத்துவர், அவர்களின் குழந்தைகளை குறைந்த விலைக்கு வாங்குவார். குழந்தை பாக்கியம் இல்லாமல் உள்ள வசதி படைத்தவர்களிடம் குழந்தையை அதிக விலைக்கு விற்று விடுவார். இது தொடர்பாக இந்த மருத்துவர் மீது வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில தினங்களாக கடலூர் மாவட்டத்தில் பிறந்த குழந்தைகள் காணாமல் போனது. குறிப்பாக வடலூர் சுற்றுவட்டார பகுதியில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த குழந்தைகள் மாயமானார்கள். இது தொடர்பாக 4-க்கும் மேற்பட்ட புகார்கள் வடலூர், புவனகிரி போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.

    கடலூர் மாவட்டத்திற்கு புதிய போலீஸ் சூப்பிரண்டாக பதவியேற்ற ராஜாராமன், இது தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையிலான போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குழந்தைகளை வாங்கி விற்ற சித்த மருத்துவர் மெகருநீஷாவினை கடந்த ஒரு வாரமாக போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது சித்த மருத்துவர் குழந்தைகளை வாங்கி விற்றது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையிலான போலீசார் சித்த மருத்துவர் மெகரு நீஷாவை கைது செய்து, அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் தாழங்குடா முதல் தேவனாம்பட்டினம் வரை கடற்கரை ஓரமாக பாதுகாப்பு கருதி நடப்பட்டிருந்த சவுக்கு மரங்கள் கடல் அலை சீற்றம் காரணமாக அடித்து சென்றது,.
    • தொடர்ந்து வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்படுவதால் சீல்வர் பீச்சிற்கு வரும் பொதுமக்களை கடலோரம் அனுமதிக்கவில்லை

    கடலூர்:

    சில மாதங்களாக தொடர்ச்சியாக பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் அடிக்கடி கடல் சீற்றம், திடீர் மழை போன்றவை நிகழ்கிறது. இதனால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அடிக்கடி அறிவிப்பு வெளியாகிறது. கடல் அலை முன்னோக்கி அதிக அளவில் வந்து செல்வதால் மீனவர்கள் பாதுகாப்பான இடங்களில் படகுகளை நிறுத்தி செல்கின்றனர்

    மேலும், கடலூர் தாழங்குடா முதல் தேவனாம்பட்டினம் வரை கடற்கரை ஓரமாக பாதுகாப்பு கருதி நடப்பட்டிருந்த சவுக்கு மரங்கள் கடல் அலை சீற்றம் காரணமாக அடித்து செல்கிறது.இந்நிலையில் கடலில் அலைகள் வழக்கத்தை விட சீற்றம் அதிகமாக இன்று காலை முதல் காணப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக தற்போது கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்படுவதால் சீல்வர் பீச்சிற்கு வரும் பொதுமக்களை கடலோரம் அனுமதிக்கவில்லை. மேலும், போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியில் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்ட காரணத்தினால் பரபரப்பாக காணப்பட்டது.

    • இன்று காலை கோவில் குருக்கள் வேதமூர்த்தி கோவிலுக்கு வந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது.
    • உண்டியலில் இருந்து 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் திருடப்பட்டதாக தெரிகிறது.

    கடலூர்:

    கோவில் பூட்டை உடைத்து ரூ. 10 ஆயிரம் திருடப்பட்டுள்ளது.கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே ஆனைக்குப்பம் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று வழக்கம்போல் பூஜைகள் முடித்து இரும்பு கேட்டை பூட்டி சென்றனர்.இதனை தொடர்ந்து இன்று காலை கோவில் குருக்கள் வேதமூர்த்தி கோவிலுக்கு வந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. இதில் கோவிலில் இரும்பு கேட்டின் பூட்டு உடைந்து திறந்திருந்தது பின்னர் கோவிலுக்குள் சென்று பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு திறந்திருந்தது. இதனைத் தொடர்ந்து கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திருட்டு நடந்த கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் மர்ம நபர்கள் கோவில் வளாகத்தில் இருந்த கேமராக்களை சேதம் செய்து சென்றதும் தெரியவந்தது.பின்னர் கைரேகை நிபுணர்களுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ைகரேகை நிபுணர்கள் அங்குள்ள தடயங்களை சேகரித்தனர்.

    உண்டியலில் இருந்து 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் திருடப்பட்டதாக தெரிகிறது. கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோவில்கள் மற்றும் கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 24 மணி நேரமும் போலீசார் பணியில் இருந்து வருகிறார்கள்மேலும் ஆணைக்குப்பம் முத்துமாரியம்மன் கோவில் பகுதிகளை சுற்றி போலீசார் வீடுகள் இருந்து வருவதால் எந்நேரமும் போலீசார் இவ்வழியாக சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பணம் திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதி களில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடை பெற்று வருவதால் பொது மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். எனவே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடு பட்டு திருட்டு சம்ப வத்தை உடனடியாக தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • சிதம்பரம் பள்ளிப்படை சேர்ந்த மூதாட்டி சின்ன பொண்ணு மற்றும் அவருடன் வந்த நபர் தங்கள் மனுக்களை கொடுக்கும் போது திடீரென்று கத்தி கூச்சலிட்டனர்.
    • இன்ஸ்பெக்டர் துர்கா மற்றும் போலீசார் உடனடியாக அந்த நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் இன்று காலை மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் இன்று காலை மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர். இந்த நிலையில் இன்று காலை கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்து வந்த நிலையில் சிதம்பரம் பள்ளிப்படை சேர்ந்த மூதாட்டி சின்ன பொண்ணு மற்றும் அவருடன் வந்த நபர் தங்கள் மனுக்களை கொடுக்கும் போது திடீரென்று கத்தி கூச்சலிட்டனர்.கடந்த 5 ஆண்டுகளாக பட்டா வேண்டி மனு அளித்தும் இது நாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பாக கடலூர் கலெக்டர் அலுவலகம், சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து மனு அளித்தும் வருவாய்த்துறை அதிகாரிகள் அலட்சியமாக இருந்து வருவதால் மனவேதனையில் இருந்து வருகின்றோம்.

    இதற்கான நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்துவோம் என தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் துர்கா மற்றும் போலீசார் உடனடியாக அந்த நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுவாக அளித்து உள்ளீர்கள். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள் என கூறி அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக ணப்பட்டது.பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர். இந்த நிலையில் இன்று காலை கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்து வந்த நிலையில் சிதம்பரம் பள்ளிப்படை சேர்ந்த மூதாட்டி சின்ன பொண்ணு மற்றும் அவருடன் வந்த நபர் தங்கள் மனுக்களை கொடுக்கும் போது திடீரென்று கத்தி கூச்சலிட்டனர்.கடந்த 5 ஆண்டுகளாக பட்டா வேண்டி மனு அளித்தும் இது நாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    இது தொடர்பாக கடலூர் கலெக்டர் அலுவலகம், சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து மனு அளித்தும் வருவாய்த்துறை அதிகாரிகள் அலட்சியமாக இருந்து வருவதால் மனவேதனையில் இருந்து வருகின்றோம்.

    இதற்கான நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்துவோம் என தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் துர்கா மற்றும் போலீசார் உடனடியாக அந்த நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுவாக அளித்து உள்ளீர்கள். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள் என கூறி அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார்.இதனை கண்ட அவரது மனைவி, ஏன் இது போல் குடித்துவிட்டு வருகிறாய்? என்று கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்து கேபிள் வயரால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கடலூர்:

    மேல்புவனகிரியை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 62). சிதம்பரத்தில் கறிக்கடை வைத்திருந்தார். நேற்று மாலை இவர், கறி கடையை மூடி விட்டு குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார்.இதனை கண்ட அவரது மனைவி, ஏன் இது போல் குடித்துவிட்டு வருகிறாய்? என்று கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த ராமமூர்த்தி அவரது வீட்டின் மேல் மாடியில் உள்ள ரூமிற்கு சென்றார். வெகு நேரம் ஆகியும் அவர் கீழே வரவில்லை.

    சந்தேகமடைந்த ராமமூர்த்தியின் மனைவி மேலே சென்று பார்த்தபோது ரூமில் கேபிள் வயரால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.அக்கம் பக்கம் உள்ளவர்களின் உதவியுடன் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இதையடுத்து இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.அங்கு திரண்ட உறவினர்கள், ராமமூர்த்தியின் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறினர். இதையடுத்து ராமமூர்த்தியின் உடலை பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கணபதி (வயது 50). இவர் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில்பராமரிப்பு துப்புரவாளராகப் பணியாற்றி வந்தார்.
    • இவர் வழியில், வேகத்தடையில் நிலைத்தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார்,சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்,

    கடலூர்:

    நெய்வேலியில் வட்டம் 13-ல் வசித்து வருபவர் கணபதி (வயது 50). இவர் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்திற்கு சொந்தமான நீச்சல் குளத்தில் ஒப்பந்த அடிப்படையில் பராமரிப்பு துப்புரவாளராகப் பணியாற்றி வந்தார்.இந்நிலையில் தனது மோட்டார் சைக்கிளில் குறவன்குப்பத்திற்கு நேற்று புறப்பட்டுச் சென்றார். வேலுடையான்பட்டு கோயில் அருகே சென்றபோது வேகத்தடையில் நிலைத்தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார்.

    உடனடியாக அருகில் உள்ள பொதுமக்கள் அவரை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கணபதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து அவரது மனைவி செல்வி கொடுத்த புகாரின் பேரில் நெய்வேலி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பரணிஸ்ரீ (வயது 20). இவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. தமிழ் 3-ம் ஆண்டு படித்து வருகின்றார்.
    • கல்லூரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை.மாணவியின் தாய் கமலா போலீ!ஸ்நிலையத்தில் புகார் கொடுத்தார்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஆண்டிப்பாளை யத்தை சேர்ந்தவர் பாரதி. இவரது மகள் பரணிஸ்ரீ (வயது 20). இவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. தமிழ் 3-ம் ஆண்டு படித்து வருகின்றார். இவர் கடந்த 14-ந்தேதி கல்லூரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை   

    இவரை பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காததால் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் மாணவியின் தாய் கமலா புகார் கொடுத்தார். இதில் அங்குசெட்டி பாளையத்தை சேர்ந்த பரணிதரன் என்பவர் ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்றதாக கூறியுள்ளார்.இது குறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்த காணாமல் போன கல்லூரி மாணவி பரணிஸ்ரீ யை தேடி வருகின்றனர்.

    • லாரியில் கரும்பு ஏள்றிக் கொண்டு வந்த போது சாலையின் ஓரத்தில் வாகனத்தை நிறுத்துவதற்கு டிரைவர் சென்று கொண்டிருந்தார்.
    • இதனை பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சடைந்து ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த நெல்லிக்குப்பத்தில் தனியார் சர்க்கரை ஆலை உள்ளது. தற்போது சர்க்கரை அலையில் கரும்பு அரவை நடைபெற்று வருவதால் நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினந்தோறும் டிராக்டர்கள் மற்றும் பல்வேறு வாகனங்கள் மூலம் கரும்புகள் ஏற்றி வந்து அரவை நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்று காலை லாரியில் கரும்பு ஏள்றிக் கொண்டு வந்த போது சாலையின் ஓரத்தில் வாகனத்தை நிறுத்துவதற்கு டிரைவர் சென்று கொண்டிருந்தார். அப்போது மணல் பகுதியான சாலையில் திடீரென லாரி கவிழ்ந்தது.

    அப்போது சாலையின் ஓரத்தில் இருந்த வீட்டில் சுவர் பகுதியில் கரும்பு கட்டுகள் சரிந்தன. இதன் காரணமாக வீட்டின் அருகாமையில் இருந்த தகர சீட்டுகள் நசுங்கி பாதிப்படைந்தன. இதனை பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சடைந்து ஏராளமானோர் அங்கு திரண்டனர். மேலும், அந்த பகுதியை சேர்ந்த கவுன்சிலர்கள் பூபாலன் ராணி மற்றும் பலர் ஆலை நிர்வாகத்திடம் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுவதால் இதற்கு தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    ×