என் மலர்
கடலூர்
- சுதா( 30) அங்கன்வாடி ஊழியர். இவர் ஊருக்கு செல்ல அரசு பஸ்சில் ஏறி,டிக்கெட் எடுக்க கைப்பையை தேடிய போது அது காணாமல் போனது தெரிய வந்தது.போலீசில் புகார் கொடுத்தார். .
- போலீசார் கண்டறிந்து சுதாவை வரவழைத்து அவரிடம் ஒப்படைத்தனர்.
கடலூர்:
திட்டக்குடி அடுத்துள்ள தொழுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூமாலை.இவரது மனைவி சுதா( 30) அங்கன்வாடி ஊழியர் .இவர் நேற்று முன்தினம் மாலை திட்டக்குடிக்கு சொந்த வேலை காரணமாக வந்தார். மீண்டும் ஊருக்கு செல்ல அரசு பஸ்சில் ஏறினார். டிக்கெட் எடுக்க கைப்பையை தேடிய போது அது காணாமல் போனது தெரிய வந்தது. அந்த பையில் ரூ. 1500 பணம், 2 செல்போன்கள் ஏ.டி.எம்.கார்டு, ஆதார் கார்டு, வீட்டு சாவி உள்ளிட்ட பொருட்கள் இருந்தது சுதா தனது கைப்பை காணாமல் போனது குறித்து போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் திட்டக்குடி சப்- இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் தலைமையில் போலீசார் தீவிரமாக விசாரணை கொண்டனர். அப்ேபாது காணாமல் போன ைகப்பை கோழியூர் பகுதியில் கிடந்ததை போலீசார் கண்டறிந்து சுதாவை வரவழைத்து அவரிடம் ஒப்படைத்தனர்.
- நெய்வேலி அடுத்த வள்ளலார் நகரில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்து காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
கடலூர்:
நெய்வேலி அடுத்த வள்ளலார் நகரில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வடக்குத்து வள்ளலார் நகரில் உள்ள வீட்டில் போலீசார் அதிரடி சோதனை செய்தனர். அப்பொழுது அந்த வீட்டில் 4 பேர் விபச்சாரம் செய்வது தெரியவந்தது.போலீசார் விசாரணையில் நெய்வேலி டவுன்ஷிப், வட்டம் 18, சென்னை வீதி ராஜா மனைவி பிரியதர்ஷினி (வயது 34) என்பவர் பெண்களை வைத்து விபச்சாரம் செய்தது தெரியவந்தது.மேலும் அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்ட நாகப்பட்டினம் கூத்தூர் பகுதியைச் சேர்ந்த நிரோஷா (33). பாண்டிச்சேரி அம்மு (29). சித்ரா (30) ஆகியோரை போலீசார் கைது செய்து காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
பெண்களை வைத்து விபச்சாரம் செய்த பிரியதர்ஷினியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். குடியிருப்பு பகுதியில் விபச்சாரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
- கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த ஒருவரை போலீசார் பிடித்து காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
- பெங்களூருவை சேர்ந்த ஒரு நபரும், கோயம்புத்தூரை சேர்ந்த ஒரு நபரும் தனது சொந்த ஊருக்கு சென்றது தெரியவந்தது.
கடலூர்:
விக்கிரவாண்டி அடுத்த குண்டலப்புலியூரில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமம் உரிய அனுமதியின்றி இயங்கி வந்தது. அங்கு தங்கியிருந்த பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக ஆசிரமத்தை நிர்வாகித்து வந்த ஜூபின் பேபி உள்பட 9 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அங்கிருந்து மீட்கப்பட்ட 143 பேரை பல்வேறு ஆசிரமங்களுக்கு அனுப்பி வைத்தனர். அந்த வகையில் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தவர்களில் 13 பேர் கடலூர் வன்னியர் பாளையத்தில் அரசு அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் மனநல காப்பகத்திலும், 10 பேர் ஆல்பேட்டையில் உள்ள மனநல காப்பகத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வன்னியர் பாளையத்தில் உள்ள காப்பகத்தில் இருந்து 4 பேர் பின்பக்க கதவை உடைத்து தப்பிவிட்டனர். இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை தேடி வந்தனர்.
இதில் அன்றைய தினமே கடலூர் திருப்பாதி ரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த ஒருவரை போலீசார் பிடித்து காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் 3 பேரை போலீசார் தேடிவந்தனர்.
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு கரிக்கால் பாரிசங்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி சப்-இன்ஸ்பெக்டர்கள் தவச்செல்வம், சங்கரலிங்கம் மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
தப்பிச் சென்ற 3 பேரும் பஸ் அல்லது ரெயில் மூலம் தப்பித்து சென்று இருக்கலாம் என போலீசார் அவர்கள் புகைப்படம் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் சொந்த ஊரில் உள்ள உறவினர்கள் மற்றும் அதன் அருகாமையில் உள்ள போலீஸ் நிலையத்தில் தப்பித்து போனவர்கள் வந்தால் தகவல்கள் தெரிவிக்க வேண்டுமென அறிவுறுத்தினர்.
இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த ஒரு நபரும், கோயம்புத்தூரை சேர்ந்த ஒரு நபரும் தனது சொந்த ஊருக்கு சென்றது தெரியவந்தது. அவர்களை கடலூருக்கு அழைத்துவர அவர்களது உறவினர்களிடம் கடலூர் போலீசார் கூறியுள்ளனர். மேலும் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- வேலூரை அடுத்த வாணியம்பாடி கருணை இல்லத்தில், எனது சகோதரர் இறந்து விட்டதாக ஒரு சிலர் கூறுகின்றனர்.
- ஆசிரமத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண் சில மருந்துகளை உட்கொண்டதால் மயங்கி விழுந்தார்.
கடலூர்:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு உறுப்பினராக இருப்பவர் ஜி.கிருஷ்ணமூர்த்தி. இவர் கடலூர் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது.
எனது மூத்த சகோதர் ஜெயக்குமார் (வயது 60) என்பவரை கடலூரில் உள்ள இக்னைட் சாரிட்ட பிள் டிரஸ்டில் 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் அனுமதித்தேன். அங்கு தங்கியிருந்த எனது சகோதரரை விக்கிரவாண்டியை அடுத்த குண்டலப்புலியூரில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு மாற்றியுள்ளதாக சாரிட்ட பிள் ஊழியர்கள் என்னிடம் தெரிவித்தனர். மேலும், இயற்கை சூழலுடன் அங்கு இருக்கலாம், வசதிகள் மிகச் சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.
இதனை அடுத்து குண்டலப்புலியூர் ஆசிரமத்தில் இருந்த ஜாபருல்லா என்பவரை காணவில்லை என்ற புகார் மீது விசாரணை நடத்தப்பட்டதை நான் அறிந்தேன். உடனடியாக அன்பு ஜோதி ஆசிரமத்தை தொடர்பு கொண்டு எனது சகோதரரின் நிலை குறித்து விசாரித்தேன்.
உங்களது சகோதரரை வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள சரணாலயம் அறக்கட்டளை நடத்தும் கருணை இல்லத்திற்கு மாற்றிவிட்டதாக கூறினார்கள். ஆனால் அங்கும் எனது சகோதரர் இல்லை. எனவே, எனது சகோதரர் இப்போது எங்கே இருக்கிறார். அவர் உயிருடன் இருக்கிறாரா? என்பது போன்ற கேள்விகள் எனக்குள் எழுந்தன.
வேலூரை அடுத்த வாணியம்பாடி கருணை இல்லத்தில், எனது சகோதரர் இறந்து விட்டதாக ஒரு சிலர் கூறுகின்றனர். ஆனால், அங்கிருந்து எனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே, இது தொடர்பாக விசாரணை நடத்தி எனது சகோதரர் ஜெயக்குமாரின் நிலை குறித்து எனக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.
இது குறித்து கிருஷ்ண மூர்த்தி கூறும் போது:-
கடலூரில் உள்ள ஆசிர மத்தின் தற்போதைய மற்றும் முன்னாள் கைதிகளை மேற்கோள் காட்டி, அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு மாற்றப்பட்டனர். சிலர் சித்ரவதை செய்யப்பட்டு அவர்களின் மன உறுதியை பாதிக்கும் மருந்துகள் கொடுக்கப்பட்டன. ஆசிரமத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண் சில மருந்துகளை உட்கொண்டதால் மயங்கி விழுந்தார். 3 நாட்களுக்குப் பிறகு சுயநினைவு திரும்பிய அவர் அங்கிருந்து தப்பிவிட்டார். ஆசிரம அதிகாரிகளிடம் எனது தொடர்பு விவரங்கள் உள்ளன. எனது சகோதரர் ஏதாவது நோயால் இறந்திருந்தால், அவர் இறந்ததை என்னிடம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் எந்த தகவலும் இல்லை என்றார்.
- கடலூர், பாண்டி, சென்னை ரயில் பாதை திட்டத்திற்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது./
- இதனை தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கடலூர்
கடலூரின் நீர் ஆதாரமாய் விளங்கும் கொண்டங்கி ஏரியை மாசு படாமல் பாதுகாக்க வேண்டும். கடலூர் மாநகராட்சி புதிய பஸ் நிலையம் எம். புதூரில் அமையும் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். கடலூர், பாண்டி, சென்னை ரயில் பாதை திட்டத்திற்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் இளங்கோவன், கிருஷ்ணமூர்த்தி, ரமணி, நடராஜன், புருஷோத்தமன் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. உதவி பொதுச் செயலாளர் தேவநாதன் நன்றி கூறினார்.
- நெல் மூட்டைகள் ஏன் விலை போகவில்லை என நெல்கொள்முதல் நிலைய எழுத்தர் அப்துல் ரகுமானிடம் (45) முகுந்தன் கேட்டுள்ளார்.
- அவர் ஒரு மூட்டைக்கு ரூ.55 வீதம் மொத்தம் ரூ.25 ஆயிரம் கேட்டுள்ளார். அவர் ஒரு மூட்டைக்கு ரூ.55 வீதம் மொத்தம் ரூ.25 ஆயிரம் கேட்டுள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த சி. சாத்தமங்கலம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தாங்கள் விளைவித்த நெல் உள்ளிட்ட தானியங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.தற்போது நெல் அறுவடை என்பதால், நெல் கொள்முதல் நிலையத்திற்கு ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லினை மூட்டை மூட்டையாக கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் பூதங்குடியைச் சேர்ந்த முகுந்தன் (வயது 40). இளம் விவசாயி. இவர்களது குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தில் 450 மூட்டை நெல் விளைந்தது. இதனை கடந்த 2 தினங்களுக்கு முன்னர் சி. சாத்தமங்கலம் நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்தார்.இதனை அங்குள்ள தலைமை லோடு மேன் தியாகராஜன் (55), மற்றும் ஊழியர்கள் இறக்கி வைத்தனர். அங்கு வந்த நெல் வியாபாரிகள் இந்த 450 மூட்டையை தவிர மீதமுள்ள நெல் மூட்டைகளை வாங்கிச் சென்றனர்எனது நெல் மூட்டைகள் ஏன் விலை போகவில்லை என நெல்கொள்முதல் நிலைய எழுத்தர் அப்துல் ரகுமானிடம் (45) முகுந்தன் கேட்டுள்ளார். இதற்கு அவர் தலைமை லோடு மேனை பார்க்குமாறு கூறியுள்ளார்.இதனைத் தொடர்ந்து தலைமை லோடு மேனை முகுந்தன் சந்தித்தார். அவர் ஒரு மூட்டைக்கு ரூ.55 வீதம் மொத்தம் ரூ.25 ஆயிரம் கேட்டுள்ளார்.பணத்தை ஏற்பாடு செய்ய ஒரு நாள் அவகாசம் கேட்ட விவசாயி முகுந்தன், நேராக கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு தேவநாதனிடம் விஷயத்தை கூறினார்.இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டுகளை முகுந்தனிடம் அளித்தனர்.
அதனை எடுத்துக் கொண்டு சி. சாத்தமங்கலம் நெல் கொள்முதல் நிலையத்திற்கு இன்று காலை முகுந்தன் சென்றார்.அப்போது அங்கிருந்த ஊழியர்கள் தலைமை லோடு மேனும், எழுத்தரும் அறைக்குள் பேசிக் கொண்டுள்ளனர். அங்கு செல்லுங்கள் என்று கூறினர். இதையடுத்து முகுந்தன் அறைக்குள் சென்றார்.மாறு வேடத்தில் முகுந்தனை பின் தொடர்ந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு மறைந்திருந்தனர். அப்போது முகுந்தன் தான் கொண்டு சென்ற ரூ.25 ஆயிரம் பணத்தை எழுத்தர் அப்துல் ரகுமானிடம் வழங்கினார். பணத்தை தலைமை லோடு மேன் தியாகராஜனிடம் வழங்குமாறு எழுத்தர் கூறினார்.இதையடுத்து முகுந்தன் தான் கொண்டு சென்ற ரூ.25 ஆயிரத்தை தலைமை லோடு மேன் தியாகராஜனிடம் வழங்கினார்பணத்தை வாங்கிய தியாகராஜன் அதனை எண்ணத் தொடங்கினார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் எழுத்தர் அப்துல் ரகுமான், தலைமை லோடு மேன் தியாகராஜன் ஆகிய 2 பேரை கையும், களவுமாக கைது செய்தனர்விவசாயியிடம் லஞ்சம் கேட்டு வாங்கிய சம்பவத்தில் 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டுகளை முகுந்தனிடம் அளித்தனர்.
- விவசாயியிடம் லஞ்சம் கேட்டு வாங்கிய சம்பவத்தில் 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேத்தியாத்தோப்பு:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த சி. சாத்தமங்கலம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தாங்கள் விளைவித்த நெல் உள்ளிட்ட தானியங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.
தற்போது நெல் அறுவடை என்பதால், நெல் கொள்முதல் நிலையத்திற்கு ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லினை மூட்டை மூட்டையாக கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பூதங்குடியைச் சேர்ந்த முகுந்தன் (வயது 40). இளம் விவசாயி. இவர்களது குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தில் 450 மூட்டை நெல் விளைந்தது. இதனை கடந்த 2 தினங்களுக்கு முன்னர் சி. சாத்தமங்கலம் நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்தார்.
இதனை அங்குள்ள தலைமை லோடு மேன் தியாகராஜன் (55) மற்றும் ஊழியர்கள் இறக்கி வைத்தனர். அங்கு வந்த நெல் வியாபாரிகள் இந்த 450 மூட்டையை தவிர மீதமுள்ள நெல் மூட்டைகளை வாங்கிச் சென்றனர்.
எனது நெல் மூட்டைகள் ஏன் விலை போகவில்லை என நெல்கொள்முதல் நிலைய எழுத்தர் அப்துல் ரகுமானிடம் (45) முகுந்தன் கேட்டுள்ளார். இதற்கு அவர் தலைமை லோடு மேனை பார்க்குமாறு கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தலைமை லோடு மேனை முகுந்தன் சந்தித்தார். அவர் ஒரு மூட்டைக்கு ரூ.55 வீதம் மொத்தம் ரூ.25 ஆயிரம் கேட்டுள்ளார்.
பணத்தை ஏற்பாடு செய்ய ஒரு நாள் அவகாசம் கேட்ட விவசாயி முகுந்தன், நேராக கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு தேவநாதனிடம் விஷயத்தை கூறினார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டுகளை முகுந்தனிடம் அளித்தனர். அதனை எடுத்துக் கொண்டு சி. சாத்தமங்கலம் நெல் கொள்முதல் நிலையத்திற்கு இன்று காலை முகுந்தன் சென்றார்.
அப்போது அங்கிருந்த ஊழியர்கள் தலைமை லோடு மேனும், எழுத்தரும் அறைக்குள் பேசிக் கொண்டுள்ளனர். அங்கு செல்லுங்கள் என்று கூறினர். இதையடுத்து முகுந்தன் அறைக்குள் சென்றார்.
மாறு வேடத்தில் முகுந்தனை பின் தொடர்ந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு மறைந்திருந்தனர். அப்போது முகுந்தன் தான் கொண்டு சென்ற ரூ.25 ஆயிரம் பணத்தை எழுத்தர் அப்துல் ரகுமானிடம் வழங்கினார். பணத்தை தலைமை லோடு மேன் தியாகராஜனிடம் வழங்குமாறு எழுத்தர் கூறினார்.
இதையடுத்து முகுந்தன் தான் கொண்டு சென்ற ரூ.25 ஆயிரத்தை தலைமை லோடு மேன் தியாகராஜனிடம் வழங்கினார்.
பணத்தை வாங்கிய தியாகராஜன் அதனை எண்ணத் தொடங்கினார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் எழுத்தர் அப்துல் ரகுமான், தலைமை லோடு மேன் தியாகராஜன் ஆகிய 2 பேரை கையும், களவுமாக கைது செய்தனர்.
விவசாயியிடம் லஞ்சம் கேட்டு வாங்கிய சம்பவத்தில் 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மணல் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரி ஒன்று திடீரென்று லாரி பழுது ஏற்பட்டு சாலையில் நின்றது.
- கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சிக்னல் அருகே சுமார் ஒரு மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கடலூர்:
வெளி மாவட்டங்களில் இருந்து சிதம்பரம், நாகப்பட்டினம் செல்ல க்கூடிய பெரும்பாலான வாகனங்கள் கடலூர் வழியாக சென்று வருகின்றது.இந்த நிலையில் கனரக வாகனங்கள் முழுவதும் கடலூர் ஜவான் பவன் சாலை வழியாக திருப்பாதிரிப்புலியூர், முதுநகர் , விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன.இன்று காலை எம்சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரி ஒன்று கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சிக்னல் அருகில் ஜவான் பவன் சாலை வழியாக செல்வதற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று லாரி பழுது ஏற்பட்டு சாலையில் நின்றது. இதனால் பின்னால் வந்த அனைத்து வாகனங்களும் ஒன்றின் பின் ஒன்று அணிவகுத்து நிற்க தொடங்கியது. இதனை தொடர்ந்து அனைத்து வாகனங்களும் அதிக ஒலி எழுப்பி கொண்டிருந்தன.ஆனால் பழுதடைந்த லாரியை உடனடியாக சரி செய்ய முடியவில்லை.
இதன் காரணமாக மிக முக்கிய சாலையாக கருதக்கூடிய திருப்பாதிரிப்புலியூர் சாலை முழுவதும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேலும் திருப்பாதிரிப்புலியூர் சிக்னல் பகுதி என்பதால் கூடுதலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காலை நேரம் என்பதால் பள்ளிக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்ததோடு வெளியூருக்கு செல்லும் பொதுமக்களும் பஸ்களில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருந்தனர். இதனை தொடர்ந்து அவசர அவசரமாக மெக்கானிக்கை வரவழைத்து வாகனத்தில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டு லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதன் காரணமாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சிக்னல் அருகே சுமார் ஒரு மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் போக்குவரத்து நெரிசலை போக்குவரத்து போலீசார் சரி செய்தும் வந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- தென்பெண்னை ஆற்றின் கரையோரமாக இருந்த முட்புதர் அருகில் துர்நாற்றம் வீசியது.அங்கே, அடையாளம் தெரியாத ஆண் பிணம் அழுகிய நிலையில் இருந்தது.
- நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த நிலையில் இருந்த ஆண் உடலை மீட்டனர்,
கடலூர்:
நெல்லிக்குப்பம் அடுத்த முள்ளிகிராம்பட்டு கஸ்டம்ஸ் சாலை பகுதியில் தென் பெண்ணையாறு உள்ளது. ஆற்றின் கரையோரமாக இருந்த முட்புதர் அருகில் துர்நாற்றம் வீசியது. அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்த போது அடையாளம் தெரியாத ஆண் பிணம் அழுகிய நிலையில் இருந்தது.
இத்தகவலறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த நிலையில் இருந்த ஆண் உடலை மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? கொலை செய்யப்பட்டு ஆற்றில் கரையோரம் தூக்கி வீசப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
- வடலூரில் குழந்தை கடத்தி விற்பனை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- குழந்தை விற்பனையில் தொடர்புடைய அரசியல் பிரமுகரை நெருங்கி விட்டதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.
வடலூர்:
கடலூர் மாவட்டம் வடலூரில் குறைந்த விலைக்கு குழந்தைகளை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக வடலூரை சேர்ந்த சித்த மருத்துவர் மெகருன்னிசா, சுடர் விழி, சீர்காழி சட்ட நாதபுரம் ஆனந்தன், புவனகிரி கீரப்பாளையம் கஜேந்திரன் மனைவி ஷீலா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 2 மாத ஆண் குழந்தை மீட்கப்பட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் ஏழை பெற்றோரிடம் இருந்து ஆண் குழந்தையை குறைந்த விலைக்கு வாங்கி குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் பெற்று விற்பனை செய்தது தெரியவந்தது.
இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவிட்டார். இதன் பேரில் சிதம்பரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தனிப்படை போலீசார் புவனகிரி, வடலூர் பகுதிகளில் குழந்தைகள் கடத்தல் மற்றும் விற்பனை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் காணாமல் போன குழந்தைகள் குறித்தும் விவரம் சேகரித்து வருகின்றனர்.
கைதான சித்த மருத்துவர் மெகருன்னிசா தான் 3 குழந்தைகளை விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளார். எனவே வடலூரில் பிடிபட்ட குழந்தை விற்பனை கும்பலுக்கு தமிழகத்தில் பிற குழந்தை கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் வடலூர் நறிக்குறவர் காலனியை சேர்ந்த ஆனந்த் மற்றும் கடலூர் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் வசிக்கும் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த நந்தினி ஆகியோரை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர்.
குழந்தை விற்பனையில் தொடர்புடைய அரசியல் பிரமுகரை நெருங்கி விட்டதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.
- நடராஜர் கோயிலுக்கு வருகை தந்த கவர்னருக்கு சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் கும்ப மரியாதை அளித்தனர்.
- கவர்னர் வருகையையொட்டி கடலூர், சிதம்பரம் பகுதியில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் :
மகா சிவராத்திரியையொட்டி சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் நாட்டியாஞ்சலி விழா சிதம்பரத்தில் நடைபெற்று வந்தது. நேற்று நடைபெற்ற இறுதி விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.
இந்நிலையில் இன்று காலை சிதம்பரம் நடராஜர் கோயிலில் குடும்பத்துடன் கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்தார். அவருடன் மனைவி லட்சுமி ரவி மற்றும் உறவினரும் சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக நடராஜர் கோயிலுக்கு வருகை தந்த கவர்னருக்கு சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் கும்ப மரியாதை அளித்தனர்.
கவர்னர் வருகையையொட்டி கடலூர், சிதம்பரம் பகுதியில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
- இந்தியாவில் தற்போது பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது.
சிதம்பரம் :
மகா சிவராத்திரியையொட்டி சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் நாட்டியாஞ்சலி விழா சிதம்பரத்தில் நடைபெற்று வந்தது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. விழாவில் பங்கேற்ற தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
உங்கள் அனைவருக்கும் தெரியும் தில்லை நடராஜர், ஆதிகடவுளும், முதன்மையான கடவுளும் ஆவார். நமது திருநாட்டின் சனாதன தர்மம் தோன்றி, பல வித உணர்வுகளை தோற்றுவித்துள்ளது. பஞ்ச பூதங்களும், தமிழகத்தில் சிறப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக தமிழகம் ஆன்மிக தலைநகரமாக விளங்குகிறது. புவிஈர்ப்பு விசையின் மைய தலமாக சிதம்பரமும், அதில் உள்ள தமிழ்நாடும் விளங்குகிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ரிஷிகளும், முனிவர்களும், மக்கள் எவ்வாறு ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வேண்டும். பன்முக தன்மையை எவ்வாறு புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
ஒரு மரத்தில் லட்சக்கணக்கான இலைகள், கனிகள் இருக்கும். ஆனால் இரண்டு இலைகளோ, இரண்டு கனிகளோ ஒரே மாதிரி அமைவதில்லை. அதேபோன்று தான் பொதுமக்களாகிய நாமும் பல்வேறு உணர்வுகளும், கட்டமைப்பு இருந்தாலும் ஒரே தேசத்தில் இருக்கிறோம் என்கிற உணர்வை முன்னோர்கள் நமக்கு ஊட்டி சென்றுள்ளனர்.
இந்தியாவில் தற்போது பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. உலக அளவில் கொரோனாவுக்கு பிறகு பொருளாதார மந்த நிலை நிலவும் போது, இந்தியா மட்டும் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. நாம் இன்று, இந்தியாவில் அனைத்து பகுதிகளையும் ஒரு சேர பார்க்கும் பிரதமரை பெற்றுள்ளோம். பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. நமது பிரதமர் என்ன சொல்ல வருகிறார் என்பதை மற்ற நாடுகள் கூர்ந்து கவனிக்கின்றன.
நம் நாடு இன்று உலகிற்கே வழிகாட்டியாக உள்ளது. நாம் ஆங்கிலத்திற்கு பல காலமாக அடிமையாக இருக்கிறோம். இதை மாற்ற வேண்டும். நமது சங்க இலக்கியங்களான திருக்குறள், திருமுறை, திவ்ய பிரபந்தம் ஞானத்தை கொண்டது. நமது குழந்தைகளை அதை படிக்க வேண்டும்.
இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
அதைத்தொடர்ந்து கவர்னர் ரவி, மனைவி லட்சுமி ரவியுடன் அமர்ந்து பரத நாட்டியத்தை கண்டு ரசித்தார். தொடர்ந்து, நாட்டிய கலைஞர்களுக்கு நினைவு பரிசு மற்றும் பதக்கங்களை அவர் வழங்கினார்.






