என் மலர்
கடலூர்
- அறிவழகன் இவரது மனைவி பவித்ரா (30) இவர்களுக்கு ஒரு பெண், ஆண் குழந்தை உள்ளது.
- கணவர் அறிவழகன் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து கணவர் அறிவழகனை போலீசார் கைது செய்தனர்
கடலூர்:
கடலூர் அருகே திருமாணிக்குழியை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 34).இவரது மனைவி பவித்ரா (30) இவர்களுக்கு ஒரு பெண், ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் அறிவழகன் மற்றும் பவித்ரா ஆகியோர் கடந்த சில மாதத்திற்கு முன்பு கடலூர் கே.என்.பேட்டையில் இரும்பு கடை நடத்தி வந்தனர். அப்போது அறிவழகனுக்கு ரீசார்ஜ் செய்யும் கடையில் பணிபுரிந்து வந்த ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த பவித்ரா அதிர்ச்சியடைந்து தனது கணவன் அறிவழகனிடம் கேட்டார். அப்போது அறிவழகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பவித்ராவை அடித்து வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து பவித்ரா கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கணவர் அறிவழகன் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து கணவர் அறிவழகனை போலீசார் கைது செய்தனர்.
- அங்கு அவருக்கு சொந்தமான கறவை மாடுகள் உள்ளன.
- உடலை கைப்பற்றி திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கல்லூர் மேற்குத் தெருவில் வசித்து வருபவர் ராஜ பெருமாள் (வயது 70). இவர் தனது மனைவியுடன் ஆவட்டி கூட்ரோட்டில் வசித்து வருகிறார். இவர் தினந்தோறும் காலையில் சொந்த ஊரான கல்லூர் செல்வார். அங்கு அவருக்கு சொந்தமான கறவை மாடுகள் உள்ளன. பால் கறந்து விற்பது வழக்கம். அதேபோல் இன்று காலை பால் கறக்க தனது மனைவியுடன் கூட்ரோட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அந்த நேரத்தில் மனைவியை சாலை ஓரம் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்கி வருமாறு கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் சாலையை கடந்தார்.
அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சிமெண்ட் ஏற்றி சென்ற லாரி ராஜபெருமாள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜபெருமாள் துடிதுடித்து பரிதாமபாக உயிரிழந்தார். கண் எதிரே லாரி மோதி கணவர் உயிரிழந்ததால் மனைவி கதறி அழுத காட்சி அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு வந்த ராமநத்தம் போலீசார் உடலை கைப்பற்றி திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பண்ருட்டி அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
- தனது வீட்டு பிரிட்ஜில் உள்ள மீனை எடுத்து வரச்சொல்லி சிறுமியிடம் கூறி உள்ளார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 10 வயதுசிறுமி இவர்அதேபகுதியி ல்உள்ளதொடக்க பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 22-ந் தேதி வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த சிறுமியின் பக்கத்து வீட்டில் உள்ள ஒருவர் தனது வீட்டு பிரிட்ஜில் உள்ள மீனை எடுத்து வரச்சொல்லி சிறுமியிடம் கூறி உள்ளார். வீட்டுக்குள் மீன் எடுக்கச் சென்ற சிறுமியை 17 வயது சிறுவன், பின் தொடர்ந்து சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார் உடனே சிறுமி சத்தம் போட்டார்.இந்த சத்தம் கேட்டு சிறுமியின் தாய் அங்கு ஓடி வந்தார். அவரை பார்த்ததும் சிறுவன் தப்பி ஒடி விட்டான்.
இது குறித்து பண்ருட்டி மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் வள்ளி போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சிறுவனை கைது செய்தார். பின்னர் சிறுவர் சீர் திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.
- சம்பவத்தன்று கல்லூரி முடித்து அரசு பஸ்ஸில் தனது ஊருக்கு சென்று கொண்டிருந்த போது பஸ்ஸில் கூட்டமாக இருந்ததால் படிக்கட்டில் நின்று கொண்டு சென்றார்.
- திடீரென்று அங்கு வந்த 3 வாலிபர்கள் விஷ்ணுவை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் அடுத்த குறிஞ்சிப்பாடி ஆடூர் அகரம் சேர்ந்தவர் விஷ்ணு (வயது 20). கடலூர் அரசு பெரியார் கலை கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரி முடித்து அரசு பஸ்ஸில் தனது ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பஸ்ஸில் கூட்டமாக இருந்ததால் படிக்கட்டில் நின்று கொண்டு விஷ்ணு சென்றார். அப்போது 3 வாலிபர்கள் பஸ்க்குள் விஷ்ணு செல்ல வேண்டும் என கூறி திட்டியதாக தெரிகிறது.
இதன் காரணமாக விஷ்ணு பஸ்ஸிலிருந்து இறங்கி வேறு பஸ்ஸில் செல்வதற்கு குறிஞ்சிப்பாடி - புவனகிரி சாலை காமராஜர் சிலை அருகே நடந்து சென்றார். அப்போது திடீரென்று அங்கு வந்த 3 வாலிபர்கள் விஷ்ணுவை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இதில் காயமடைந்த விஷ்ணு குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார், பொட்டவெளி சேர்ந்த கிஷோர், வாஞ்சிநாதன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- வெங்கட்( வயது 58).நேற்று இரவு வழக்கம் போல்கடையைப் பூட்டிவிட்டு இன்று காலை திறப்பதற்கு சென்று பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது
- பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தது,.
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் சுதர்சனம் தெருவை சேர்ந்தவர் வெங்கட்( வயது 58)இவருக்கு அதே தெருவில் மளிகை கடை உள்ளது. நேற்று இரவு வழக்கம் போல் பூட்டிவிட்டு இன்று காலை திறப்பதற்கு சென்று பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது. கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தது.மேலும் கடையில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இத்தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர் . இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் ஏட்டு பார்வதி இவரது கணவர் சரவணன் ஆகியோர் நேற்று காலையில் வீட்டில் இருந்து வேலைக்கு சென்று விட்டு மதியம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு பூட்டை உடைத்து 7 லட்சம் மதிப்பிலான 18 பவுன் நகைகள் திருடி சென்றது தெரியவந்தது.
மக்களுக்கு பிரச்சினை என்றால் போலீசாரிடம் சென்று புகார் அளித்து நடவடிக்கை மேற்கொள்வோம் ஆனால் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கோவில்கள், கடைகள் மற்றும் வீட்டில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ள நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு இருந்த நிலையில், போலீசார் வீட்டிலே பூட்டை உடைத்து நகை திருடிய சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியதோடு அவர்களுக்கு சவால் விடும் அளவில் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்இந்தத் தொடர் திருட்டு சம்பவம் ,போலீசார் வீட்டிலே திருடிய சம்பவம் மீண்டும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இது மட்டும் இன்றி சில நாட்களுக்கு முன்பு மாவட்ட போலீஸ் அலுவலகம் அருகே 24 மணி நேரமும் உயர் அதிகாரிகள் முதல் போலீசார் வரை சென்று வரும் சாலையில் உள்ள கோவிலில் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த ரூ. 10 ஆயிரம் திருடிய சம்பவம் குறிப்பிடத்தக்கதாகும். ஆகையால் போலீசார் ஏற்கனவே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தனிப்படையை அமைத்து தீவிரமாக கவனம் செலுத்தி கைது செய்வதோடு வருங்காலங்களில் தொடர் திருட்டு சம்பவத்தை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
- வாலிபர் ஒருவர் முதியோர் உதவித்தொகைக்கான, பணம் வாங்கி தருவதாக கூறி நகை அணிந்து இருந்தால் உதவித்தொகை கிடைக்காது என்று கூறி நூதன முறையில் மூதாட்டியை ஏமாற்றி சென்றுவிட்டார்,
- .சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று ஒப்ப டைத்தனர்.
கடலூர்:
வடலூர் அருகே தென்குத்து புதுநகர் காலனி அம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த கோவிந்தன் மனைவி விருத்தாம்பாள் (70) கோவிந்தன் இறந்து விட்டார்.மூதாட்டி விருதாம்பாள் வீட்டில் தனியாக இருந்த போதுவாலிபர் ஒருவர் வந்தார். அவர் முதியோர் உதவித்தொகைக்கான, பணம் வாங்கி தருவதாக கூறி நகை அணிந்து இருந்தால் உதவித்தொகை கிடைக்காது என்று கூறி அவர் அணிந்திருந்த ஒரு ஜோடி தங்க மூக்குத்தியை கழட்டி கொடுங்கள் என ஒரு வெள்ளை பேப்பரில் மடித்து கொடுக்கின்றேன்.
அதை பத்திரமாக வைத்து கொள்ளுங்கள் என வாங்கியுள்ளார். அந்த வாலிபர் நகையை பாக்கெட்டில் வைத்து கொண்டு அந்த பேப்பரில் 2சிறிய கற்களை வைத்து மடித்துக் கொடுத்துவிட்டு அதிகாரிகளை அழைத்து வருகின்றேன் என்று தான் வந்த இருசக்கர வாகனத்தில் சென்று விட்டார்.அவர் சென்ற பிறகு மூதாட்டி வீட்டின் உள்ளே சென்று பேப்பரை பிரித்து பார்த்துள்ளார். அதில் நகைகளுக்கு பதில் கற்கள் இருப்பதை கண்டதும் அதிர்ச்சி அடைந்து உடனடி யாக திருடன் திருடன் என கூச்சலிட்டார்.சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று ஒப்ப டைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசார ணையில் அவர் ஸ்ரீமுஷ்ணம் அருகே முடிகண்ட நல்லூர் வடக்கு தெரு சாமிதுரை மகன் சரத்குமார்( 27 )என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த னர். இச்சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:
பண்ருட்டி அருகே உள்ள வீரப்பெருமாநல்லூர் புதுக்காலனியை சேர்ந்தவர் சங்கர் மகன் சந்துரு (வயது 20). இவர் கடந்த 22.10.2019 அன்று மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக திருநாவலூர் சென்று கொண்டிருந்தார்.அப்போது பின்னால் வந்த விழுப்புரம் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சந்துரு, சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே விபத்தில் உயிரிழந்த சந்துருவின் தந்தை மற்றும் சகோதரர் நஷ்டஈடு கேட்டு, கடலூர் மூத்த வக்கீல் சிவமணி, வக்கீல்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் மூலம் கடலூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் தொடுத்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, விழுப்புரம் போக்குவரத்து கழகம் சந்துரு குடும்பத்திற்கு நஷ்டஈடாக ரூ.10 லட்சத்து 15 ஆயிரத்து 680 வழங்க வேண்டும் என கடந்த 24.2.2021 அன்று உத்தரவிட்டார். இருப்பினும் நஷ்டஈடு தொகை வழங்காததால், நீதிமன்றத்தில் நிறைவேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை கடந்த 20.12.2022 அன்று விசாரித்த கடலூர் கூடுதல் மாவட்ட நீதிபதி சுபா அன்புமணி, சந்துரு குடும்பத்திற்கு வட்டியுடன் ரூ.11 லட்சத்து 77 ஆயிரத்து 740 நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் விழுப்புரம் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பஸ்சை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டார். இருப்பினும் நஷ்டஈடு வழங்காததால், நேற்று காலை கடலூர் பஸ் நிலையத்திற்கு வந்த விழுப்புரம் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அரசு பஸ்சை, கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
- சுதா( 30) அங்கன்வாடி ஊழியர். இவர் ஊருக்கு செல்ல அரசு பஸ்சில் ஏறி,டிக்கெட் எடுக்க கைப்பையை தேடிய போது அது காணாமல் போனது தெரிய வந்தது.போலீசில் புகார் கொடுத்தார். .
- போலீசார் கண்டறிந்து சுதாவை வரவழைத்து அவரிடம் ஒப்படைத்தனர்.
கடலூர்:
திட்டக்குடி அடுத்துள்ள தொழுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூமாலை.இவரது மனைவி சுதா( 30) அங்கன்வாடி ஊழியர் .இவர் நேற்று முன்தினம் மாலை திட்டக்குடிக்கு சொந்த வேலை காரணமாக வந்தார். மீண்டும் ஊருக்கு செல்ல அரசு பஸ்சில் ஏறினார். டிக்கெட் எடுக்க கைப்பையை தேடிய போது அது காணாமல் போனது தெரிய வந்தது. அந்த பையில் ரூ. 1500 பணம், 2 செல்போன்கள் ஏ.டி.எம்.கார்டு, ஆதார் கார்டு, வீட்டு சாவி உள்ளிட்ட பொருட்கள் இருந்தது சுதா தனது கைப்பை காணாமல் போனது குறித்து போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் திட்டக்குடி சப்- இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் தலைமையில் போலீசார் தீவிரமாக விசாரணை கொண்டனர். அப்ேபாது காணாமல் போன ைகப்பை கோழியூர் பகுதியில் கிடந்ததை போலீசார் கண்டறிந்து சுதாவை வரவழைத்து அவரிடம் ஒப்படைத்தனர்.
- நெய்வேலி அடுத்த வள்ளலார் நகரில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்து காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
கடலூர்:
நெய்வேலி அடுத்த வள்ளலார் நகரில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வடக்குத்து வள்ளலார் நகரில் உள்ள வீட்டில் போலீசார் அதிரடி சோதனை செய்தனர். அப்பொழுது அந்த வீட்டில் 4 பேர் விபச்சாரம் செய்வது தெரியவந்தது.போலீசார் விசாரணையில் நெய்வேலி டவுன்ஷிப், வட்டம் 18, சென்னை வீதி ராஜா மனைவி பிரியதர்ஷினி (வயது 34) என்பவர் பெண்களை வைத்து விபச்சாரம் செய்தது தெரியவந்தது.மேலும் அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்ட நாகப்பட்டினம் கூத்தூர் பகுதியைச் சேர்ந்த நிரோஷா (33). பாண்டிச்சேரி அம்மு (29). சித்ரா (30) ஆகியோரை போலீசார் கைது செய்து காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
பெண்களை வைத்து விபச்சாரம் செய்த பிரியதர்ஷினியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். குடியிருப்பு பகுதியில் விபச்சாரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
- கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த ஒருவரை போலீசார் பிடித்து காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
- பெங்களூருவை சேர்ந்த ஒரு நபரும், கோயம்புத்தூரை சேர்ந்த ஒரு நபரும் தனது சொந்த ஊருக்கு சென்றது தெரியவந்தது.
கடலூர்:
விக்கிரவாண்டி அடுத்த குண்டலப்புலியூரில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமம் உரிய அனுமதியின்றி இயங்கி வந்தது. அங்கு தங்கியிருந்த பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக ஆசிரமத்தை நிர்வாகித்து வந்த ஜூபின் பேபி உள்பட 9 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அங்கிருந்து மீட்கப்பட்ட 143 பேரை பல்வேறு ஆசிரமங்களுக்கு அனுப்பி வைத்தனர். அந்த வகையில் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தவர்களில் 13 பேர் கடலூர் வன்னியர் பாளையத்தில் அரசு அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் மனநல காப்பகத்திலும், 10 பேர் ஆல்பேட்டையில் உள்ள மனநல காப்பகத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வன்னியர் பாளையத்தில் உள்ள காப்பகத்தில் இருந்து 4 பேர் பின்பக்க கதவை உடைத்து தப்பிவிட்டனர். இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை தேடி வந்தனர்.
இதில் அன்றைய தினமே கடலூர் திருப்பாதி ரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த ஒருவரை போலீசார் பிடித்து காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் 3 பேரை போலீசார் தேடிவந்தனர்.
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு கரிக்கால் பாரிசங்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி சப்-இன்ஸ்பெக்டர்கள் தவச்செல்வம், சங்கரலிங்கம் மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
தப்பிச் சென்ற 3 பேரும் பஸ் அல்லது ரெயில் மூலம் தப்பித்து சென்று இருக்கலாம் என போலீசார் அவர்கள் புகைப்படம் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் சொந்த ஊரில் உள்ள உறவினர்கள் மற்றும் அதன் அருகாமையில் உள்ள போலீஸ் நிலையத்தில் தப்பித்து போனவர்கள் வந்தால் தகவல்கள் தெரிவிக்க வேண்டுமென அறிவுறுத்தினர்.
இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த ஒரு நபரும், கோயம்புத்தூரை சேர்ந்த ஒரு நபரும் தனது சொந்த ஊருக்கு சென்றது தெரியவந்தது. அவர்களை கடலூருக்கு அழைத்துவர அவர்களது உறவினர்களிடம் கடலூர் போலீசார் கூறியுள்ளனர். மேலும் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- வேலூரை அடுத்த வாணியம்பாடி கருணை இல்லத்தில், எனது சகோதரர் இறந்து விட்டதாக ஒரு சிலர் கூறுகின்றனர்.
- ஆசிரமத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண் சில மருந்துகளை உட்கொண்டதால் மயங்கி விழுந்தார்.
கடலூர்:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு உறுப்பினராக இருப்பவர் ஜி.கிருஷ்ணமூர்த்தி. இவர் கடலூர் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது.
எனது மூத்த சகோதர் ஜெயக்குமார் (வயது 60) என்பவரை கடலூரில் உள்ள இக்னைட் சாரிட்ட பிள் டிரஸ்டில் 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் அனுமதித்தேன். அங்கு தங்கியிருந்த எனது சகோதரரை விக்கிரவாண்டியை அடுத்த குண்டலப்புலியூரில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு மாற்றியுள்ளதாக சாரிட்ட பிள் ஊழியர்கள் என்னிடம் தெரிவித்தனர். மேலும், இயற்கை சூழலுடன் அங்கு இருக்கலாம், வசதிகள் மிகச் சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.
இதனை அடுத்து குண்டலப்புலியூர் ஆசிரமத்தில் இருந்த ஜாபருல்லா என்பவரை காணவில்லை என்ற புகார் மீது விசாரணை நடத்தப்பட்டதை நான் அறிந்தேன். உடனடியாக அன்பு ஜோதி ஆசிரமத்தை தொடர்பு கொண்டு எனது சகோதரரின் நிலை குறித்து விசாரித்தேன்.
உங்களது சகோதரரை வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள சரணாலயம் அறக்கட்டளை நடத்தும் கருணை இல்லத்திற்கு மாற்றிவிட்டதாக கூறினார்கள். ஆனால் அங்கும் எனது சகோதரர் இல்லை. எனவே, எனது சகோதரர் இப்போது எங்கே இருக்கிறார். அவர் உயிருடன் இருக்கிறாரா? என்பது போன்ற கேள்விகள் எனக்குள் எழுந்தன.
வேலூரை அடுத்த வாணியம்பாடி கருணை இல்லத்தில், எனது சகோதரர் இறந்து விட்டதாக ஒரு சிலர் கூறுகின்றனர். ஆனால், அங்கிருந்து எனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே, இது தொடர்பாக விசாரணை நடத்தி எனது சகோதரர் ஜெயக்குமாரின் நிலை குறித்து எனக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.
இது குறித்து கிருஷ்ண மூர்த்தி கூறும் போது:-
கடலூரில் உள்ள ஆசிர மத்தின் தற்போதைய மற்றும் முன்னாள் கைதிகளை மேற்கோள் காட்டி, அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு மாற்றப்பட்டனர். சிலர் சித்ரவதை செய்யப்பட்டு அவர்களின் மன உறுதியை பாதிக்கும் மருந்துகள் கொடுக்கப்பட்டன. ஆசிரமத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண் சில மருந்துகளை உட்கொண்டதால் மயங்கி விழுந்தார். 3 நாட்களுக்குப் பிறகு சுயநினைவு திரும்பிய அவர் அங்கிருந்து தப்பிவிட்டார். ஆசிரம அதிகாரிகளிடம் எனது தொடர்பு விவரங்கள் உள்ளன. எனது சகோதரர் ஏதாவது நோயால் இறந்திருந்தால், அவர் இறந்ததை என்னிடம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் எந்த தகவலும் இல்லை என்றார்.
- கடலூர், பாண்டி, சென்னை ரயில் பாதை திட்டத்திற்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது./
- இதனை தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கடலூர்
கடலூரின் நீர் ஆதாரமாய் விளங்கும் கொண்டங்கி ஏரியை மாசு படாமல் பாதுகாக்க வேண்டும். கடலூர் மாநகராட்சி புதிய பஸ் நிலையம் எம். புதூரில் அமையும் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். கடலூர், பாண்டி, சென்னை ரயில் பாதை திட்டத்திற்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் இளங்கோவன், கிருஷ்ணமூர்த்தி, ரமணி, நடராஜன், புருஷோத்தமன் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. உதவி பொதுச் செயலாளர் தேவநாதன் நன்றி கூறினார்.






