என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய அதிவிரைவு படை"

    • அணிவகுப்பு நடத்தியதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் பெரும் பரபரப்பாக காண முடிந்தது.
    • 4-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்து தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு இன்று காலை மத்திய அதிவிரைவு படை துணை கமாண்டர் விஜயன் தலைமையில் உதவி கமாண்டர் வெங்கட்ராமன் மேற்பார்வையில் 85 அதி விரைவு படை வீரர்கள் வந்தனர். கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கரை நேரில் சந்தித்தனர். கடலூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட எந்தெந்த பகுதியில் தொடர் கலவரம் மற்றும் கொலை அதிகரித்து வருகின்றது. என்னென்ன காரணங்களால் தொடர் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது என்பதனை கேட்டறிந்தனர்.

    அப்போது கடலூர் சோனாங்குப்பம் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதன் என்பவரை கடந்த 2018-ம் ஆண்டு தேவனாம்பட்டினத்தை சேர்ந்த ஒரு கும்பல் முன் விரோதம் காரணமாக கொலை செய்தது. இது தொடர்பாக வருகிற 4-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்து தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா, சோனாங்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் பதற்றம் நீடிப்பதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பன் குளம் மற்றும் கம்மியம்பேட்டை பகுதியில் பிரபல ரவுடி வீரா கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் கொலைகள் நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக இந்த பகுதியில் அவ்வப்போது தொடர்ந்து பதட்டம் நீடித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து மத்திய அதிவிரைவு படையினர் அதிரடியாக இன்று காலை கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியில் கொடி அணிவகுப்பு நடத்தினர். அப்போது தேவனாம்பட்டின முக்கிய சாலைகளில் மத்திய அதிவிரைவு படையினர் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பாக சென்றனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் இதனை அச்சத்துடன் பார்வையிட்டனர். மத்திய அதிவிரைவு படை திடீரென்று இந்த அணிவகுப்பு நடத்தியதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் பெரும் பரபரப்பாக காண முடிந்தது. இது மட்டும் இன்றி வருங்காலங்களில் மேற்கண்ட பிரச்சனைக்குரிய பகுதிகளில் ஏதேனும் கலவரம் மற்றும் கொலைகள் அதிகரித்தால் அதிரடியாக மத்திய அதிவிரைவு படை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இதனை கட்டுப்படுத்தும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்காக இந்த ஆய்வு மேற்கொண்டு உள்ளனர்.

    மேலும், இவர்களிடம் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட துப்பாக்கிகள், ஆயுதங்கள் மற்றும் கலவரங்களை கட்டுப்படுத்தும் கருவிகள் போன்றவகள் உள்ளது. இதனால் உடனடியாக கலவரம் மற்றும் பிரச்சனைகளை தடுப்பதற்கு ஏதுவாக அமையும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் பதட்டமான பகுதிகளில் முழுவதும் மத்திய அதிவிரைவு படை கொடி அணிவகுப்பு நடத்த உள்ளனர். அணிவகுப்பின் போது போலீஸ் துணை சூப்பிரண்டு கரிக்கால் பாரிசங்கர், இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார் உடன் இருந்தனர். அதிவிரைவுப்படை வீரர்களின் அணிவகுப்பால் குற்றவாளிகளும் கலவரக்காரர்களும் பீதியடைந்துள்ளனர்.

    ×