நெய்வேலியில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்தவர் கைது

நெய்வேலி அடுத்த வள்ளலார் நகரில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்து காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
நெய்வேலியில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்தவர் கைது
Published on

கடலூர்:

நெய்வேலி அடுத்த வள்ளலார் நகரில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வடக்குத்து வள்ளலார் நகரில் உள்ள வீட்டில் போலீசார் அதிரடி சோதனை செய்தனர். அப்பொழுது அந்த வீட்டில் 4 பேர் விபச்சாரம் செய்வது தெரியவந்தது.போலீசார் விசாரணையில் நெய்வேலி டவுன்ஷிப், வட்டம் 18, சென்னை வீதி ராஜா மனைவி பிரியதர்ஷினி (வயது 34) என்பவர் பெண்களை வைத்து விபச்சாரம் செய்தது தெரியவந்தது.மேலும் அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்ட நாகப்பட்டினம் கூத்தூர் பகுதியைச் சேர்ந்த நிரோஷா (33). பாண்டிச்சேரி அம்மு (29). சித்ரா (30) ஆகியோரை போலீசார் கைது செய்து காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

பெண்களை வைத்து விபச்சாரம் செய்த பிரியதர்ஷினியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். குடியிருப்பு பகுதியில் விபச்சாரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

X

Maalai Malar
www.maalaimalar.com