என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சேத்தியாத்தோப்பு அருகே பரபரப்பு: விவசாயிடம் லஞ்சம் வாங்கிய நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் கைது
  X

  சேத்தியாத்தோப்பு அருகே பரபரப்பு: விவசாயிடம் லஞ்சம் வாங்கிய நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நெல் மூட்டைகள் ஏன் விலை போகவில்லை என நெல்கொள்முதல் நிலைய எழுத்தர் அப்துல் ரகுமானிடம் (45) முகுந்தன் கேட்டுள்ளார்.
  • அவர் ஒரு மூட்டைக்கு ரூ.55 வீதம் மொத்தம் ரூ.25 ஆயிரம் கேட்டுள்ளார். அவர் ஒரு மூட்டைக்கு ரூ.55 வீதம் மொத்தம் ரூ.25 ஆயிரம் கேட்டுள்ளார்.

  கடலூர்:

  கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த சி. சாத்தமங்கலம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தாங்கள் விளைவித்த நெல் உள்ளிட்ட தானியங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.தற்போது நெல் அறுவடை என்பதால், நெல் கொள்முதல் நிலையத்திற்கு ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லினை மூட்டை மூட்டையாக கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் பூதங்குடியைச் சேர்ந்த முகுந்தன் (வயது 40). இளம் விவசாயி. இவர்களது குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தில் 450 மூட்டை நெல் விளைந்தது. இதனை கடந்த 2 தினங்களுக்கு முன்னர் சி. சாத்தமங்கலம் நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்தார்.இதனை அங்குள்ள தலைமை லோடு மேன் தியாகராஜன் (55), மற்றும் ஊழியர்கள் இறக்கி வைத்தனர். அங்கு வந்த நெல் வியாபாரிகள் இந்த 450 மூட்டையை தவிர மீதமுள்ள நெல் மூட்டைகளை வாங்கிச் சென்றனர்எனது நெல் மூட்டைகள் ஏன் விலை போகவில்லை என நெல்கொள்முதல் நிலைய எழுத்தர் அப்துல் ரகுமானிடம் (45) முகுந்தன் கேட்டுள்ளார். இதற்கு அவர் தலைமை லோடு மேனை பார்க்குமாறு கூறியுள்ளார்.இதனைத் தொடர்ந்து தலைமை லோடு மேனை முகுந்தன் சந்தித்தார். அவர் ஒரு மூட்டைக்கு ரூ.55 வீதம் மொத்தம் ரூ.25 ஆயிரம் கேட்டுள்ளார்.பணத்தை ஏற்பாடு செய்ய ஒரு நாள் அவகாசம் கேட்ட விவசாயி முகுந்தன், நேராக கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு தேவநாதனிடம் விஷயத்தை கூறினார்.இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டுகளை முகுந்தனிடம் அளித்தனர்.

  அதனை எடுத்துக் கொண்டு சி. சாத்தமங்கலம் நெல் கொள்முதல் நிலையத்திற்கு இன்று காலை முகுந்தன் சென்றார்.அப்போது அங்கிருந்த ஊழியர்கள் தலைமை லோடு மேனும், எழுத்தரும் அறைக்குள் பேசிக் கொண்டுள்ளனர். அங்கு செல்லுங்கள் என்று கூறினர். இதையடுத்து முகுந்தன் அறைக்குள் சென்றார்.மாறு வேடத்தில் முகுந்தனை பின் தொடர்ந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு மறைந்திருந்தனர். அப்போது முகுந்தன் தான் கொண்டு சென்ற ரூ.25 ஆயிரம் பணத்தை எழுத்தர் அப்துல் ரகுமானிடம் வழங்கினார். பணத்தை தலைமை லோடு மேன் தியாகராஜனிடம் வழங்குமாறு எழுத்தர் கூறினார்.இதையடுத்து முகுந்தன் தான் கொண்டு சென்ற ரூ.25 ஆயிரத்தை தலைமை லோடு மேன் தியாகராஜனிடம் வழங்கினார்பணத்தை வாங்கிய தியாகராஜன் அதனை எண்ணத் தொடங்கினார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் எழுத்தர் அப்துல் ரகுமான், தலைமை லோடு மேன் தியாகராஜன் ஆகிய 2 பேரை கையும், களவுமாக கைது செய்தனர்விவசாயியிடம் லஞ்சம் கேட்டு வாங்கிய சம்பவத்தில் 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  Next Story
  ×