என் மலர்
நீங்கள் தேடியது "miserable death"
- மணிபாலன் (வயது 38). வெல்டிங் தொழிலாளியான இவர் ஓசூரில் வேலை பார்த்து வந்தார்.
- ஓசூரில் இருந்து சேலம் வந்தவர் புதிய பஸ் நிலையத்தில் ஏற்காடு பஸ் நிறுத்தம் பகுதியில் என்று அதிகாலை இறந்து கிடந்தார்.
சேலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பழைய எடக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மணிபாலன் (வயது 38). வெல்டிங் தொழிலாளியான இவர் ஓசூரில் வேலை பார்த்து வந்தார்.இந்த நிலையில் ஊருக்கு செல்வ தற்காக ஓசூரில் இருந்து சேலம் வந்தவர் புதிய பஸ் நிலையத்தில் ஏற்காடு பஸ் நிறுத்தம் பகுதியில் என்று அதிகாலை இறந்து கிடந்தார்.
இதுகுறித்த தகவலின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் மணிபாலன் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் மணிபாலன் மனைவி மணிமேகலைக்கு தகவல் தெரிவித்துள்ளனர.
போலீசார் முதற்கட்ட விசாரணையில் மணிபால னுக்கு நீரழிவு நோய் இருந்து வந்துள்ளதும் அதற்கு மாத்திரை எடுத்துக் கொண்டதும் தெரிய வந்தது.ஏற்காடு பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது மயங்கி விழுந்தவர் அப்படியே இறந்து விட்டதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
- குழந்தை கவினேஷ் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த சுடு தண்ணீரில் தவறி விழுந்தார்.
- சிகிச்சைக்காக சென்ற குழந்தை கவினேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்,
கடலூர்:
கடலூர் அடுத்த ஈச்சங்காடு சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 30). இவருக்கு 2 வயதில் கவினேஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது.சம்பவத்தன்று குழந்தை கவினேஷ் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த சுடு தண்ணீரில் தவறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த குழந்தை கவினேஷ் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் குழந்தையை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை கவினேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகு பொதுமக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
- பிரதீப் (வயது 37). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
- சாலையில் குறுக்கே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது பிரதீப் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், சக்தி நகரை சேர்ந்தவர் அன்பழ கன். இவரது மகன் பிரதீப் (வயது 37). இவர் தனியார் நிறுவ னத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.
இவரும், இவரது நண்பர் சசிகுமார் (37) ஆகிய இருவரும் கடந்த 22-ந் தேதி பரமத்திவேலூரில் இருந்து நாமக்கல்லுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் பைபாஸ் சாலையில் கீரம்பூர் 4 ரோடு பகுதியில் சென்ற போது, சாலையில் குறுக்கே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது பிரதீப் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பிரதீப், மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்த வர்கள் அவரை காப்பாற்றி சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பிரதீப் உயிரி ழந்தார். இதனிடையே காய மடைந்த சசிகுமார் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாமக்கல்லில் இருந்து பெங்களூரு நோக்கி கார் ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது.
- அத்தனூர் அம்மன் கோவில் அருகே சென்றபோது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
ராசிபுரம்:
நாமக்கல்லில் இருந்து பெங்களூரு நோக்கி கார் ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. இந்த காரில் ஒரு பெண் உள்பட 4 பேர் பயணம் செய்துள்ளனர். காரை ராமு என்பவர் ஓட்டி சென்றதாக தெரிகிறது.
சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அத்தனூர் அம்மன் கோவில் அருகே சென்றபோது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோ ரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணம் செய்த 55 வயது மதிக்கத்தக்க பெண் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். காரை ஓட்டிச் சென்ற ராமு உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் கர்நாடகாவை சேர்ந்தவர்களா? அல்லது தமிழகத்தைச் சேர்ந்த வர்களா என்று தெரிய வில்லை. விபத்தில் இறந்த பெண் உடல் பிரேத பரி சோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி யில் வைக்கப்பட்டுள்ளது.
காயம் அடைந்தவர்கள் மயக்க நிலையில் இருந்ததால் அவர்களைப் பற்றிய விவரங்களை உடனடியாக தெரிந்து கொள்ள முடி யவில்லை. அவர்களும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்ற னர். வெண்ணந்தூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.






