மயங்கி விழுந்த வெல்டிங் தொழிலாளி பரிதாப சாவு

மணிபாலன் (வயது 38). வெல்டிங் தொழிலாளியான இவர் ஓசூரில் வேலை பார்த்து வந்தார். ஓசூரில் இருந்து சேலம் வந்தவர் புதிய பஸ் நிலையத்தில் ஏற்காடு பஸ் நிறுத்தம் பகுதியில் என்று அதிகாலை இறந்து கிடந்தார்.
மயங்கி விழுந்த வெல்டிங் தொழிலாளி பரிதாப சாவு
Published on

சேலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பழைய எடக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மணிபாலன் (வயது 38). வெல்டிங் தொழிலாளியான இவர் ஓசூரில் வேலை பார்த்து வந்தார்.இந்த நிலையில் ஊருக்கு செல்வ தற்காக ஓசூரில் இருந்து சேலம் வந்தவர் புதிய பஸ் நிலையத்தில் ஏற்காடு பஸ் நிறுத்தம் பகுதியில் என்று அதிகாலை இறந்து கிடந்தார்.

இதுகுறித்த தகவலின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் மணிபாலன் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் மணிபாலன் மனைவி மணிமேகலைக்கு தகவல் தெரிவித்துள்ளனர.

போலீசார் முதற்கட்ட விசாரணையில் மணிபால னுக்கு நீரழிவு நோய் இருந்து வந்துள்ளதும் அதற்கு மாத்திரை எடுத்துக் கொண்டதும் தெரிய வந்தது.ஏற்காடு பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது மயங்கி விழுந்தவர் அப்படியே இறந்து விட்டதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com