வடலூரில்5 கிராம் தங்க நகை, 100 கிராம் வெள்ளி திருட்டு

வீட்டை பூட்டி விட்டு ஆரணியில் உள்ள உறவினர் திருமணத்திற்கு சென்றுள்ளார்கள். வீட்டின் வலது பக்க ஜன்னல் உடைந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
வடலூரில்5 கிராம் தங்க நகை, 100 கிராம் வெள்ளி திருட்டு
Published on

கடலூர்:

வடலூர் மாருதி நகர் கோட்டக்கரை பகுதியை சேர்ந்த தேவநாதன் இவரது மனைவி சுமித்ரா (வயது 43). இவர்கள் கடந்த 9-ம்தேதி காலையில் வீட்டை பூட்டி விட்டு ஆரணியில் உள்ள உறவினர் திருமணத்திற்கு சென்றுள்ளார்கள். தொடர்ந்து திருமணம் முடிந்து நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு வீட்டிற்கு வந்தனர். வீட்டின் வலது பக்க ஜன்னல் உடைந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் வீட்டின் உள்ளே சென்று கதவை திறந்து பார்த்தபோது பீரோவில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 4 கிராம் கம்மல், 1 கிராம் மூக்குத்தி, 100 கிராம் வெள்ளி கொலுசு ஆகியவற்றை கொள்ளை யர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com