விருத்தாசலம் அருகே தந்தை மாயம் மகன் போலீசில் புகார்.

இவர் கடந்த 6-ந் தேதி விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு பயிர்களை விற்க வந்துள்ளார்.ஜெயராமன் 2 நாட்களாக வீடு திரும்பவில்லை.
விருத்தாசலம் அருகே தந்தை மாயம் மகன் போலீசில் புகார்.
Published on

கடலூர்:

ஸ்ரீமுஷ்ணம் அருகே அம்புஜவல்லி பேட்டை யைசேர்ந்தவர் ஜெயராமன்(வயது80) விவசாயி. இவர் கடந்த 6-ந் தேதி விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு பயிர்களை விற்க வந்துள்ளார். பிறகு மாலை தன்னுடன் இருந்த உறவினர் ஜெயச்சந்திரன் என்பவரிடம், தன்னுடைய வீட்டிற்கு பிறகு வருகிறேன் எனக்கூறி அவரை அனுப்பியுள்ளார். ஆனால் ஜெயராமன் 2 நாட்களாக வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மகன் செம்பையன் அவரை பல இடங்கில் தேடி உள்ளார்.ஆனால் எங்கும் ஜெயராமன் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த செம்பையன் போலீசில் புகார் அளித்துள்ளார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த விருத்தாசலம் போலீசார் காணாமல் போன ஜெயராமனை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com