என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டக்குடியில்  சாலையின் குறுக்கே பஸ்களை நிறுத்தி வாக்குவாதம்:: போக்குவரத்து பாதிப்பு
    X

    பஸ்கள் சாலையின் குறுக்கே நிறுத்தியிருக்கும் காட்சி.

    திட்டக்குடியில் சாலையின் குறுக்கே பஸ்களை நிறுத்தி வாக்குவாதம்:: போக்குவரத்து பாதிப்பு

    • இன்று காலை சாலையின் குறுக்கே 2 பஸ்களை நிறுத்தி அவர்களுக்கிடையே கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டது
    • ட்டக்குடியில் கடுமை யான போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் கடலூர், திருச்சி மாநில நெடுஞ்சாலையில் காலை பள்ளிக்கு செல்லும் வாகனங்கள், கனரக வாகனங்கள், பாதசாரிகள், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், சைக்கிளில் செல்வோர் என அதிக அளவில் இந்த சாலையை அன்றாடம் பயன்படுத்தும் முக்கிய மான சாலையாகும் இந்த சாலையில் இன்று காலை 2 தனியார் பஸ்கள் காலதாமதத்தால் ஏற்பட்ட பிரச்சினையில் இன்று காலை சாலையின் குறுக்கே 2 பஸ்களை நிறுத்தி அவர்களுக்கிடையே கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதில் கனரக வாகனங்கள், விவசாய டிராக்டர், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் என அதிக அளவில் அணிவகுத்து நின்றதால் திட்டக்குடியில் கடுமை யான போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதுபோன்று தனியார் பஸ்களின் டிரைவர்கள் மற்றும் நடத்துனர்கள் அன்றாடம் வாக்கு வாதத்தில் ஈடுபடுவதும், சில நேரங்க ளில் கைக லப்பாக மாறி மோதிக் கொள்வதும் நிகழ்கிறது. போலீசார் சம்பந்தப்பட்ட பஸ்களுக்கு உரிய அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தால் இது போன்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கலாம் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×