என் மலர்
கடலூர்
- கடலூர் மாநகராட்சி சார்பில் பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது.
- தற்போது கட்டணம் வசூலிக்க வரும் நபர்கள் பெரும்பாலானோர் வாலிபர்களாக உள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாநகரில் மஞ்சக்குப்பம், திருப்பாதி ரிப்புலியூர், முதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வணிக வளாகங்கள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தினந்தோறும் 100-க்கண க்கான வாகனங்கள் மூலமாக பல்வேறு பொரு ட்கள் கொண்டு வரப்பட்டு, கடைகளில் பொருட்களை ஏற்றி, இறக்கி வருகின்றனர் கடலூர் மாநகராட்சி சார்பில் பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது. தற்போது கட்டணம் வசூலிக்க வரும் நபர்கள் பெரும்பாலானோர் வாலிபர்களாக உள்ளனர். 4 மணி நேரமும் வாகனங்கள் மூலம் பொருட்கள் கொண்டுவரும் நிலையில் பணம் வசூலிக்கும் வாலிபர்கள் வாகன டிரைவர்களிடம் சீட்டு வழங்கி அதற்கான கட்டண தொகை வசூல் செய்கின்றனர். கட்டணம் வசூல் செய்யும் வாலிபர்கள் அடாவடியாக வாகன ஓட்டுனர் மற்றும் கடை உரிமையாளர்களிடம் பணம் வசூல் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக அடா வடியாக வசூல் செய்யும் வாலிபர்களிடம் ஏன்? இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுகிறீர்கள், பணம் கேட்டால் கண்டிப்பாக வழங்கப்படும். ஆனால் சில நேரங்களில் வேலை பளு காரணமாக சில நிமிடங்கள் காலதாமதமானால் இது போன்ற அடாவடியாக வசூல் செய்வதால் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என தெரிவித்துள்ளனர்.
ஆனால் அவர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் தொ டர்ந்து அடாவடிப்போக்கில் கட்டண வசூல் செய்வதால் நாளடைவில் பெரிய அளவிலான சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டு உள்ளது. இரு தரப்பினருக்குள் வாக்குவாதம் ஏற்படும் சமயத்தில் தகராறாக மாறி கடும் பாதிப்பை ஏற்படும் நிலையும் உருவாக்கி வருகின்றது. இது சம்பந்தமாக போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் தனி கவனம் செலுத்தி, கட்டணம் வசூல் செய்யும் நபர்களிடம் ஒழுங்கான முறையில் பணம் வசூல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என கடும் எச்சரிக்கை விடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வணிகர்களும் வாகன ஓட்டுனர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், இது போன்ற நடவடிக்கையில் தொடர்ந்து அதிகரித்தால் வணிகர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகப் பெரிய போராட்டத்தை கையில் எடுக்கும் நிலை ஏற்படாத வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- விருத்தாச்சலம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்தி மோட்டார் சைக்கிளில் வந்தவரை மடக்கி பிடித்து சோதனை மேற்கொண்டார்.
- அவர் 2 லாரி ட்யூப்களில் சுமார் 110 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்தி மற்றும் போலீசார் மதுகடத்தல் சம்பந்தமாக சிறுபாக்கம் ஒரங்கூரிலிருந்து ஓலக்கூர் செல்லும் பாதையில் மா.கொத்தனூரில் சோதனை நடத்தினர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்தவரை மடக்கி பிடித்து சோதனை மேற்கொண்டார். அவர் 2 லாரி ட்யூப்களில் சுமார் 110 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது. பின்னர் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில், ஒலங்கூர் சேர்ந்த சுதாகர் (வயது 39) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது விருத்தாச்சலம் மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் சிறுபாக்கம் போலீஸ் நிலையத்தில் 9 சாராய வழக்குகள் உள்ளன.
இவரின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் விதமாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இராஜாராம் பரிந்துரையின்பேரில் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.
- பண்ருட்டி அடுத்துள்ள கிராமம் ஒன்றில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயதான மாணவி. நேற்று வீட்டில் இருந்தவர் திடீர் என காணாமல் போனார்.
- மாணவியின் தந்தை முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்துள்ள கிராமம் ஒன்றில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயதான மாணவி. நேற்று வீட்டில் இருந்தவர் திடீர் என காணாமல் போனார். இவரை பெற்றோர்கள் பல இடங்களில் தேடி எங்கேயும் கிடைக்க வில்லை, மாணவியின் தந்தை முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார். அதேஊரை சேர்ந்த ஏற்கனவே திருமணமான 30 வயதுடைய வாலிபர் தனது மகளிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று விட்டதாக புகாரளித்தார்.
இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து காணாமல் போன 9-ம் வகுப்பு மாணவியை தேடி வருகின்றனர்
- தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே கேட்டின் அருகே நேற்று இரவு சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் அந்த வழியாக நடந்து சென்றார்.
- அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் அந்த நபர் மீது மோதியது.
கடலூர்:
வேப்பூர் அருகே சென்னையில் இருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே கேட்டின் அருகே நேற்று இரவு சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் அந்த வழியாக நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் அந்த நபர் மீது மோதியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த வேப்பூர் போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் இறந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. மேலும் இவர் மீது காரை மோதி விபத்துக்குள்ளாக்கிய காரை ஓட்டி வந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
- பிரபாகரன் (வயது 25). கொத்தனார் பணி செய்கிறார். இவர் இன்று காலை வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் சேத்தியாத்தோப்பிற்கு வேலைக்கு வந்தார்.
- சிலிண்டர் ஏற்றிக் கொண்டு வந்த லாரி ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
கடலூர்:
காட்டுமன்னார்கோவில் பகுதி கலியன்மலை கிராமத்தைச் சேர்ந்த சிகாமணி மகன் பிரபாகரன் (வயது 25). கொத்தனார் பணி செய்கிறார். இவர் இன்று காலை வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் சேத்தியாத்தோப்பிற்கு வேலைக்கு வந்தார். ப்போது காட்டுமன்னார்கோவிலுக்கு சிலிண்டர் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று எதிரில் வந்தது. இந்த லாரி சேத்தியாத்தோப்பு வாலைக்கொல்லை வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பிரபாகரன் துடிதுடித்து உயிரிழந்தார்.
விபத்துக்குள்ளான லாரி அதே சாலையில் ஒரத்தில் இருந்த தடுப்புக் கட்டையில் மோதி நின்றது. இது குறித்து ஒரத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- 2022-2023-ம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையில் கல்வி உதவி தொகை சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
- ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணவர்கள் வங்கி கணக்கு தொடங்கி கொள்ளலாம்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது -
2022-2023-ம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையில் கல்வி உதவி தொகை பெற ஏதுவாக, ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணவர்களுக்கு, அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம், பள்ளிகளிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
தற்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணவர்கள் அருகிலுள்ள அஞ்சலகம் மற்றும் தபால்காரருக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம், மாணவர்களின் ஆதார் மற்றும் தொலைபேசி எண்ணை மட்டும் பயன்படுத்தி விரல்ரேகை மூலம் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்கி கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.
- 2023-24 ஆம் ஆண்டிற்கு சீரிய திட்டமாக காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்கள், கால்வாய்கள் மற்றும் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் .
- இப்பணிகளை மேற்கொள்வதால் 78 ஆயிரத்து 451 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.
கடலூர்:
தமிழ்நாடு முதல்-அமைச்சர் வேளாண் பெருமக்கள் மேன்மையடையவும், உரிய நேரத்தில் விவசாய பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வேளாண்மை உற்பத்தியினை பெருக்கிடும் நோக்கத்திலும், 2023-24 ஆம் ஆண்டிற்கு சீரிய திட்டமாக காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்கள், கால்வாய்கள் மற்றும் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பினை தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தில் டெல்டா பகுதியில் 55 பணிகள், ரூ.100 கோடி மதிப்பீட்டில் 768.30 கிலோமீட்டர் நீளத்திற்கு தூர்வார ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை மேற்கொள்வதால் 78 ஆயிரத்து 451 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.
சிதம்பரம் அருகே பள்ளிப்படை கிராமத்திலிருந்து மீதிக்குடி வரையிலான பாசன நிலங்களுக்கு பாசனம் அளித்து வரும் மீதிக்குடி கிளை வாய்க்கால்களில் 1 முதல் 5 கிளை வாய்க்கால்கள் ரூ.20.30 லட்சம் மதிப்பீட்டில் 21.20 கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளையும், தொடர்ந்து கனகரப்பட்டு, குமாரமங்கலம் மற்றும் கடவாச்சேரி கிராமங்களில் 1,100 ஏக்கர் விலை நிலங்களுக்கு பாசன வசதி அளித்து வரும் குமாரமங்கலம் வாய்க்கால், நரிமுடுக்கு வடிகால், சாலியந்தோப்பு வடிகால் மற்றும் உசுப்பூர் வடிகால்களை தூர்வாரி பலப்படுத்தும் பணிகள் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் 15 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபெற்று வருவதையும், கவரப்பட்டு கிராம பகுதிகளில் 2,500 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளித்து வரும் கவரப்பட்டு வாய்க்கால் தொலைக்கல் 9 கிலோ மீட்டர் முதல் 18 கிலோ மீட்டர் வரையிலும் மற்றும் அதன் கிளை யு-டேம், டீ-டேம் இவைகளை ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் 9 கிலோ மீட்டர் தொலைவிற்கு தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது சிதம்பரம் சப்-கலெக்டர் சுவேதா சுமன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- பொது மக்களுடன் சேர்ந்து சசி கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்தனர்.
- இறந்த போன எனது மகன் பிரதீப் உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் முடசல் ஓடை சேர்ந்தவர் பிறை மாறன். இவரது மனைவி சசி. இன்று காலை கண்ணீர் மல்க தனது குடும்பத்தார், பொது மக்களுடன் சேர்ந்து சசி கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்தனர். அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் கடந்த 30 ஆண்டுகளாக முடசல் ஓடை மீனவ கிராமத்தில் வசித்து வருகின்றோம். எங்களின் மூத்த மகன் பிரதீப் (வயது 24). கடந்த 2021-ம் ஆண்டு துபாய் நாட்டிற்கு சென்றார். அங்கு சுற்றுலா படகில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் ஏப்ரல் 29-ந்தேதி பணியில் இருக்கும் போது கடல் நீரில் மூழ்கி இறந்து விட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அங்கு உள்ள வர்கள் இறந்த போன எனது மகன் பிரதீப் உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள தாக தெரிவித்தனர். பிரதீப் உடலை நேற்று 1-ந்தேதி கண்டெடுத்து உள்ளதாகவும் தகவல் அளித்தனர்.எனவே எங்கள் மகனின் உடலை விரைந்து மீட்டு தாயகம் கொண்டு வந்து சேர்க்க அரசின் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.
- சுகந்தியை பிரசவத்திற்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
- தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனிக்காமல் இரவு 8 மணி அளவில் பரிதாபமாக உயிர் இறந்தார்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த மணப்பாக்கம் பெருமாள்கோவில்தெருவை சேர்ந்தவர் மணிவேல் இவரது மனைவி சுகந்தி (35)., இவர்பிரசவத்திற்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது சிகிச்சை பலனிக்காமல் இரவு 8 மணி அளவில் பரிதாபமாக உயிர் இருந்தாள் இது குறித்து பண்ருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறனர்.
- மாவட்ட அளவிலான பயிற்சி கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
- தொடர்ந்து ஆலோசனை உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
கடலூர்:
பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர்கல்வி வழிகாட்டல் மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர்களுக்கான மாவட்ட அளவிலான பயிற்சி கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமர் கிருட்டிணன் தலைமை தாங்கினார். பொருளியல் துறை இணை பேராசிரியர் ராமகிருஷ்ணன், சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் குமார் அனைவரையும் வரவேற்றார். இதில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் சுந்தரேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை ஆற்றினார். தொடர்ந்து ஆலோசனை உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. முடிவில் என் எஸ் எஸ் உதவி பேராசிரியர் அருள்தாஸ் நன்றி கூறினார்.
- பாஜக பட்டியல் அணி மாநில பொருளாளர் சங்கர் படுகொலை செய்யப்பட்டவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய திமுக அரசை கண்டித்து கோரிக்கை கோஷம் எழுப்பினார்கள்.
கடலூர்:
பாஜக பட்டியல் அணி மாநில பொருளாளர் சங்கர் படுகொலை செய்யப்பட்டவை கண்டித்தும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய திமுக அரசை கண்டித்து கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் பெருமாள், விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆனந்தவேல் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ரங்கேஷ், ஊடகப்பிரிவு செந்தாமரைக் கண்ணன், மாநகராட்சி கவுன்சிலர் சக்திவேல் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை காற்றினார். இதில் நிர்வாகிகள் குணசேகரன் ராமமூர்த்தி பிரவீன் விஜய் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர் முன்னதாக தங்கள் கோரிக்கை கோஷம் எழுப்பினார்கள்.
- சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
- அரசு அனுமதி இல்லாமல் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
கடலூர்:
காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், முத்தாண்டிக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வல்லம் காலனி கிழக்கு தெரு பழனிவேல் (வயது 52) காட்டுக்கூடலூர் கலைஞர் தெருவை சேர்ந்த முருகவேல் (49), ஆகியோர் அரசு அனுமதி இல்லாமல் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான மது பாட்டில்களை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






