என் மலர்
உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல் : செங்கல் சூளை வியாபாரி பலி
- செங்கல் சூளை வியாபாரியான வீரபத்திரன் டிபன் வாங்க பண்ருட்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
- அப்போது வீரபத்திரன் பைக்குடன் அன்பரசன்(32), ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டது.
பண்ருட்டி:
பண்ருட்டி அடுத்த வரிஞ்சிப்பக்கம் காந்தி நகர் முருகன் கோவில் தெருவை சேர்ந்த வீரமுத்து மகன் வீரபத்திரன் (23), செங்கல் சூளை வியாபாரி.இவர் நேற்று இரவு 10 மணி அளவில் சூளையில் வேலைசெய்துகொண்டு இருந்த தொழிலாளிகளுக்கு டிபன் வாங்குவதற்காக பண்ருட்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார்.
பண்ருட்டி - அரசூர் ரோட்டில் மணிநகர் பஸ் நிறுத்தம் அருகில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த பண்ருட்டி ஆர்.எஸ்.மணி நகர் 4-வது தெருவை சேர்ந்த அன்பரசன்(32) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டது.
இந்த விபத்தில் வீரபத்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த அன்பரசன் கடலூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






