search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நடைபெறும் திட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்த கலெக்டர்
    X

    சின்னகுமட்டி ஊராட்சியில் வீட்டு கட்டுமான பணிகளை கலெக்டர் பாலசுப்ரமணியம் ஆய்வு செய்தார். அருகில் கூடுதல் கலெக்டர் மதுபாலன் உள்ளார்.

    ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நடைபெறும் திட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்த கலெக்டர்

    • பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.52 ஆயிரம் மதிப்பீட்டில் சமையல் கூடம் பழுதுநீக்கம் பணிநடைபெற்றுள்ளதை கலெக்டர் பாலசுப்ரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • இவ் ஆய்வின் போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) திட்ட இயக்குநர் மதுபாலன், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சின்னகுமட்டி ஊராட்சியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுமான பணிகள் நடைபெறுவதையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ்ரூ.1.31 லட்சம் மதிப்பீட்டில் முருங்கை நாற்றங்கால் பண்ணை அமைக்க ப்பட்டுள்ளதையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1.2 லட்சம் மதிப்பீட்டில் தனிநபர் உறிஞ்சி குழாய் அமைக்கப்பட்டுள்ளதையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3.32 லட்சம் மதிப்பீட்டில் மயானகுளம் தூர்வாரி வடிகால் அமைக்கும் பணி நடைபெறுவதையும், சின்னகுமட்டி, சில்லாங்குப்பம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில்; பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.52 ஆயிரம் மதிப்பீட்டில் சமையல் கூடம் பழுதுநீக்கம் பணி நடைபெற்றுள்ளதை கலெக்டர் பாலசுப்ரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, மஞ்சக்குழி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கொடிக்கால் நகர் பகுதியில் ரூ.5.24 லட்சம் மதிப்பீட்டில் சமையல்கூடம் கட்டுமான பணிகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் முருங்கை நாற்றங்கால் பண்ணை அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.

    கீழ்அனுவம்பட்டு ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கொடிக்கால் நகர் பகுதியில் ரூ.13.57 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் திட்டத்தின் கீழ்; ரூ.2 இலட்சம் மதிப்பீட்டில் முருங்கை நாற்றங்கால்; பண்ணை அமைக்கும் பணிகள் நடைபெறுவதையும், கீழ்அனுவம்பட்டு ஊராட்சி, அம்புபூட்டியபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.31.95 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதை தொடர்ந்து தில்லைவிடங்கன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.31.95 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுமான பணி மற்றும் 15-வது நிதி குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.52 ஆயிரம் மதிப்பீட்டில் சமையல் கூடம் பழுதுநீக்கம் பணிகள் ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இவ் ஆய்வின் போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) திட்ட இயக்குநர் மதுபாலன், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×