என் மலர்tooltip icon

    கடலூர்

    • கலெக்டர் அருண் தம்புராஜ் செய்திக்குறிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
    • மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது:- கடலூர் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகளில் அமைக்கப்பட்டுள்ள மனைப்பிரிவுகளை தமிழ் நிலம் இணையதள நில பதிவுரு ஆவணங்களில், மனைப்பிரிவுகளை, மனைப்பிரிவு உரிமை யாளர்கள் பெயரில் முன் மாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேற்குறிப்பிட்டுள்ள பணியிணை சிறப்பாக செயல்படுத்திட கடலூர் மாவட்டத்தில் உள்ள மனைப்பிரிவு உரிமை யாளர்கள் தங்கள் வசம் உள்ள மனைப்பிரிவு வரை படங்கள், தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் ஒவ்வொரு மனையினையும் உட்பிரிவு செய்வதற்கான உட்பிரிவு கட்டணம் ஒரு மனைக்கு கிராமபுறம்-ரூ.400, நகராட்சி - ரூ.500, மாநகராட்சி -ரூ. 600 வீதம் மனைப்பிரிவிலுள்ள அனைத்து மனைகளுக்கும் உட்பிரிவு கட்டணம் செலுத்திய ரசீது ஆகியவற்றுடன் வருகிற 13- ந்தேதி காலை 10 மணி முதல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப் படும் முகாமில் கலந்து கொண்டு ஆவணங்களை சமர்ப்பித்து தங்கள் பெயரில் மாற்றம் செய்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி சாவித்திரி தலைமை தாங்கினார்.
    • சிவில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

    கடலூர்:

    பண்ருட்டி சட்டப் பணிகள் ஆணைக்குழுசார்பில், பண்ருட்டி நீதிமன்றத்தில் லோக் அதாலத் நடத்தப்பட்டது. வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர், சார்பு நீதிபதி உமாமகேஸ்வரி வழிகாட்டுதலின்படி ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி சாவித்திரி தலைமை தாங்கினார். மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆர்த்தி, குற்றவியல் நடுவர் நீதிபதி மகேஷ் முன்னிலை வகித்தனர். வக்கீல்கள், நீதிமன்ற அலுவலர்கள் மற்றும் மனுதாரர்கள் பங்கேற்றனர்.

    இதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. 13 வாகன விபத்து வழக்கு, ஒரு சொத்து வழக்கு முடிக்கப்பட்டு ரூ24.40 லட்சத்திற்கு தீர்வு காணப்பட்டது.முகாம் ஏற்பாடுகளை இள நிலை நிர்வாக உதவியாளர் ஆனந்த ஜோதி செய்திருந்தார்.

    • இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக காதல் செய்து வந்தனர்.
    • பெற்றோரிடம் தான் 5 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சாத்துக்கூடலை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகள் பாக்கியலட்சுமி (வயது23). இவர் சென்னையில் உள்ள செல்போன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். விருத்தாசலம் அடுத்த பரவலூர் கிராமத்தில் வசித்து வரும் சரவணன் மகன் வினோத் குமார்(27). இவரும் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இருவரும் கடந்த 3 ஆண்டு களுக்கும் மேலாக காதல் செய்து வந்த நிலையில் வினோத்குமார், பாக்கிய லட்சுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பலமுறை தகாத உறவு வைத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் பாக்கியலட்சுமி கர்ப்பிணியானார். தற்போது 5மாத கர்ப்பிணியான பாக்கியலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்ளக் கூறி வினோத்குமாரிடம் வற்புறுத்தி உள்ளார். திரு மணம் செய்து கொள்வதை மறுத்த வினோத்குமார் கருவை கலைத்து விடு மாறு கூறியுள்ளார். பாக்கிய லட்சுமி அதனை மறுக்கவே தனது பெற்றோரிடம் தான் 5 மாத கர்ப்பமாக இருப்ப தாக கூறியுள்ளார். மேலும் காதலன் வினோத் குமார்தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து வருவதாகவும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாக்கியலட்சுமி பெற்றோர் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வினோத்குமார் மீது அளித்த புகாரின் அடிப்படையில் அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். விசார ணையில் வினோத்குமார், பாக்கியலட்சுமியை ஏமாற்றி உள்ளது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் வினோத்குமாரிடம் பாக்கியலட்சுமியை திரு மணம் செய்து கொள்ளு மாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனை ஏற்ற வினோத்குமார் மற்றும் அவரது பெற்றோர் உள்பட இருவீட்டார் சம்ம தத்துடன் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள வண்ணமுத்து மாரியம்மன் கோவிலில் இருவீட்டார் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

    • வெங்கடாசலம்செட்டியார் 1914-ம் ஆண்டு உயில் எழுதி வைத்தகட்டளை சொத்தாகும்.
    • ரூ.50 லட்சத்துக்கு அதிகம் பொருமான மரங்களைவெட்டி கடத்தி சென்றனர் .

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் அமைந்துள்ளது மிகவும் பிரசித்திபெற்ற வீரட்டா னேஸ்வரர் கோவில். இந்த கோவில் எதிரில்திலகவதி யார் நந்தவனம், திருநா வுக்கரசர் நந்தவனம் உள்ளது. திலகவதியார் நந்த வனம் திருவாடுதுறை ஆதீனம்பராமரிப்பில் உள்ளது திலகவதியார் நந்தவனத்தைபராமரித்து வரும் திருவாடுதுறை ஆதீனம் திருவதிகை விரட்டா னேஸ்வரர் கோவிலுக்கு செய்ய வேண்டிய கட்ட ளைகளை முறையாக நிறை வேற்றி வருகின்றனர். திருநாவுக்கரசர் நந்தவனம் பரங்கிப்பேட்டை வெங்கடாசலம் செட்டியார் 1914-ம் ஆண்டு உயில் எழுதி வைத்தகட்டளை சொத்தாகும். பரங்கிப்பேட்டை வெங்க டாசலம் செட்டியா ருக்கு வாரிசு இல்லாததால் அவரது தம்பி சிவனேசன் செட்டியார் குடும்பத்தினர் அந்த சொத்தை அனுபவித்து உயிலில்உள்ளவாறு கட்டளைகளை செய்து வந்தனர். தற்போது உள்ள 5-வது தலைமுறையினர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கட்டளையை நிறைவேற்றாமல் சுமார் 50 கோடி மதிப்புள்ள இந்த கட்டளை சொத்தைவேறு நபருக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

    40 ஆண்டு காலமாக கட்டளை பணிகளை செய்யாமல் இந்த கட்டளை சொத்தை விற்பதற்கு தற்போதுள்ள வாரிசுதாரர்களுக்கு உரிமை இல்லை எனக்கூறி கோவில் நிர்வாகம் சார்பில் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் இந்த சொத்தை நாங்கள்வாங்கிவிட்டோம் என்று கூறி ஒருகூட்டத்தினர் நந்தவனத்திற்குள் புகுந்து பொக்லைன் எந்திரம் மூலம் இங்குள்ள ரூ50 லட்சத்துக்கு அதிகம் பொருமான மரங்களைவெட்டி கடத்தி சென்றனர் . இதனை அறிந்த கோவில் நிர்வாகத்தினர், கிராம மக்கள்,சிவனடியார்கள், சிவதொண்டர்கள், இந்து மக்கள் கட்சியினர் அங்கு திரண்டனர்.இதனை கண்டித்து சாலை மறியலில் ஈடுபடுபோவதாக வதாக மிரட்டல் விடுத்தனர்.இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது கடலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இரண்டு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.அனுமதி இல்லாமல் பச்சை மரங்களை வெட்டி கடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் சொத்து கொள்ளை போவதை தடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததால் பொதுமக்கள், பக்தர்கள் கலைந்து சென்றனர் இதனால்பொதுமக்கள் நடத்த இருந்த சாலை மறியல் கைவிடப்பட்டது.

    • நீலவேணி நீண்ட நாட்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
    • வயிற்று வலியால் துடித்த நீலவேணி வீட்டில் இருந்த பூச்சிமருந்தை குடித்துள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சின்ன சேமக்கோட்டையை சேர்ந்தவர் வேலு செங்கல்சூலை வியாபாரி. இவரது மகள் நீலவேணி (வயது 24) எம்.எஸ்.சி பட்டதாரியான இவர் நீண்ட நாட்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.கடந்த 7ந் தேதி காலை 6 மணி அளவில் மீண்டும் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வயிற்று வலியால் துடித்த நீலவேணி வீட்டில் இருந்த பூச்சிமருந்தை குடித்துள்ளார். இதனால் மயங்கிய நிலையில் இருந்த அவரை பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .பின்னர், மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று அதிகாலை 5 மணி அளவில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது பற்றி தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மாவட்ட அளவிலான அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • கடைகளை உடனடியாக சீல் வைக்கப்பட்டு வர்த்தகம் நிறுத்தப்படும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உணவு பாதுகாப்பு துறை செயல்பாடுகள் குறித்து மாவட்ட அளவிலான அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி பேசியதாவது:

    தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, பான்மசாலா போன்ற பொருட்கள் புற்று நோயை உண்டாக்குவதால் அனைத்து கடைகளிலும் ஆய்வு செய்து புகையிலை பொருட்களை விற்பனை செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், கடைகளை உடனடியாக சீல் வைக்கப்பட்டு வர்த்தகம் நிறுத்தப்படும். உணவகங்களில் அதிகப்படியான செயற்கை நிறமிகள் கலக்கப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்வோர் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாம்பழம், அன்னாச்சி, பப்பாளி, வாழைப்பழம் மற்றும் சப்போட்டா போன்ற பழ வகைகளை செயற்கை முறையில் கால்சியம் கார்பைடு கற்களை கொண்டோ அல்லது செயற்கை வேதிப் பொருட்களை தெளித்தோ (எத்திப்பான், எத்திலின்) பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வோரின் கடையை சீல் வைத்து 3 மாத காலம் வரை வர்த்தகத்தை நிறுத்திவைக்க சட்ட நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • முஹம்மது பாஷா விருத்தாச்சலம் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
    • ஆட்டோ சாலையின் இடது புறத்தில் கவிழ்த்து விபத்து ஏற்பட்டது .

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த காசிம் பாஷா மகன் முஹம்மது பாஷா( வயது 24) ஆட்டோ டிரைவர். இவர் தனது ஆட்டோவில் விருத்தாசலத்தில் இருந்து கண்டப்பக்குறிச்சிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு, விருத்தாச்சலம் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். ஏ. சித்தூர் கிராமத்திலுள்ள மின்சார வாரிய அலுவலகம் அருகே சென்ற போது நிலை தடுமாறி ஆட்டோ சாலையின் இடது புறத்தில் கவிழ்த்து விபத்து ஏற்பட்டது .

    இதில் ஆட்டோவில் பயணம் செய்த கண்டபங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த தனலட்சுமி அவரது மகன் பிரவீன் ஆகிய இருவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள் ஆனால் ஆட்டோவை ஓட்டி சென்ற டிரைவர் முஹம்மது பாஷா உடல் , தலை,முகம் ஆகிய பகுதிகளில் பலத்த அடிபட்டவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே முஹம்மது பாஷா இறந்து விட்டதாக கூறினார்கள் . அதனை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் முஹம்மது பாஷா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதா ச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

    • செல்வதுரை ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
    • இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

    கடலூர்:

    நெய்வேலிஎன்.எல்.சி. இந்தியா நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இங்குள்ள முதலாவது சுரங்கத்தில் பவர் ஸ்டேஷனில் கல்லுக்குழி கிராமத்தை சேர்ந்த தண்டபாணி மகன் செல்வதுரை ( 37) ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார். வழக்கம்போல் பணிக்குச் சென்ற செல்வதுரைஅங்கு பணியாற்றிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அப்பகுதியில் மின் கசிவு ஏற்பட்டு தண்டபாணி மீது திடீரென்று தீ பரவியது. இதில் அவரது உடல் முழுவதும் தீ பரவியது. உடனடியாக அருகில் இருந்த சக தொழி லாளர்கள் செல்வதுரை யை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் என்.எல்.சி. பொது மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் செல்வதுரைக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் செல்வதுரை இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து டவுன் ஷிப் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெரும்பாலான நபர்கள் வீடு கட்டும் சமயத்தில் அரண்மனை, பங்களா அல்லது கப்பல் போல் பிரம்மாண்டமாக வீடு கட்ட வேண்டும் என வார்த்தைக்கு கூறி வந்ததை கேட்டிருப்போம்.
    • கடலூரில் நிஜமாகவே கப்பல் போல் தனது மனைவிக்காக பிரம்மாண்ட வீட்டினை கட்டிக் கொடுத்துள்ளார் சுபாஷ்.

    கடலூர்:

    கடலூரை சேர்ந்தவர் சுபாஷ் மரைன் என்ஜினீயர். இவர் கார்கோ ஷிப் எனப்படும் சரக்கு கப்பலில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வருவதோடு பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார்.

    இவரது மனைவி சுபஸ்ரீ கப்பல் போல் வீடு கட்ட வேண்டும் என ஆசையாக கூறி வந்த நிலையில், தானும் கப்பலில் பணிபுரிவதால் கப்பல் போன்று வீடு கட்ட முடிவு செய்தார்.

    இந்த நிலையில் கடலூர் வண்ணாரபாளையம் பகுதியில் 11,000 சதுர அடியில் ஒரு இடத்தினை வாங்கி அதில் 4 ஆயிரம் சதுர அடியில் கப்பல் போன்ற வடிவமைப்பில் வீட்டினை கட்டத் தொடங்கினார்.

    கடந்த 2 ஆண்டாக வீடு கட்டும் பணிகள் நடந்து வந்த நிலையில் தற்போது அந்த பணிகள் முடிவடைந்து புதுமனை புகுவிழா நடைபெற்றது.

    பிரம்மாண்ட கப்பல் போன்று தோற்றம் உள்ள இந்த வீட்டினை சுற்றி தண்ணீர் நிற்கும் விதமாக வழிவகை செய்துள்ளார். வீட்டிற்குள் சென்றவுடன் கப்பலில் இருப்பது போன்று படிக்கட்டுகள் அமைத்து அதன் வழியாக 6 அறைகளை கட்டி இந்த வீட்டினை பிரம்மாண்டப்படுத்தி உள்ளார்.

    மேலும் நீச்சல் குளம், வீட்டில் உடற்பயிற்சி கூடம் என தனித்தனியாக அறைகள் ஒதுக்கியும், நன்கு காற்றோட்டம் வீட்டிற்குள் வரும் விதமாகவும், கப்பல் கேப்டன் அமர்ந்து கப்பலை செலுத்தும் விதமாக இருப்பது போன்று ஒரு அறை அமைத்து அதன் வழியாக வெளியிடங்களையும் பார்ப்பதற்கான வழிவகைகளை செய்துள்ளார்.

    இது மட்டுமல்ல இரவு நேரங்களில் இந்த வீட்டினை பார்க்கும் போது ஒரு கப்பல் தண்ணீரில் செல்வது போன்று தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாகவும் மின்னொளிகள் அமைத்து கட்டியுள்ளார்.

    மேலும் இவரது குடும்பத்தின் அழைப்பான எஸ்.4 குடும்பம் உங்களை வரவேற்கிறது என அவர் பல்வேறு இடங்களிலும் பேனர்களை வைத்தார்.

    எஸ்.4 என்றால் என்ன? என்று கேட்கும் போது அது ஒரு குறியீடு என்றாலும் எங்கள் குடும்பத்தில் மனைவி, நான் மற்றும் 2 மகள்கள் என அனைவருக்கும் முதல் எழுத்து எஸ் என்ற எழுத்தில் ஆரம்பிப்பதால் எஸ்.4 குடும்பம் என எங்களை நாங்கள் அழைத்துக் கொள்கிறோம் என சுபாஷ் தெரிவித்தார்.

    சுபாஷ் மனைவி சுபஸ்ரீ கூறுகையில், எனக்கு திருமணமான உடன் என்னை கப்பலுக்கு அழைத்துச் செல்லுங்கள் என கூறியபோது, மலேசியா சென்று சாதாரண ஒரு கப்பலை காட்டினார். மேலும் எனது கணவர் பணிபுரியும் கப்பலுக்கு அழைத்துச் செல்ல வாய்ப்பு குறைவு எனக் கூறிய நிலையில் கப்பல் போன்று உனக்கு வீடு கட்டி தருகிறேன் என்று கூறினார். ஆனால் அது சாத்தியப்படுமா? என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது கப்பல் மாதிரியே வீடு கட்டி அதற்குள் எங்களை அழைத்து வந்து விட்டார் என மகிழ்ச்சி பொங்க கூறினார்.

    பெரும்பாலான நபர்கள் வீடு கட்டும் சமயத்தில் அரண்மனை, பங்களா அல்லது கப்பல் போல் பிரம்மாண்டமாக வீடு கட்ட வேண்டும் என வார்த்தைக்கு கூறி வந்ததை கேட்டிருப்போம். ஆனால் கடலூரில் நிஜமாகவே கப்பல் போல் தனது மனைவிக்காக பிரம்மாண்ட வீட்டினை கட்டிக் கொடுத்துள்ளார் சுபாஷ்.

    கடலூரில் இருந்து ஏராளமான மக்கள் அந்த வீட்டினை பகல் நேரங்களிலும் இரவு நேரங்களிலும் பார்த்து வியந்து வருகின்றனர்.

    • பண்ருட்டியில் சாராயம் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
    • மதகடிப்பட்டியில் இருந்து 48 சாராய பாக்கெட்டுகளை வாங்கி வந்ததாக கூறினார்.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் டி.எஸ்.பி.சபியுல்லா உத்தரவின் பேரில்தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் நேற்று தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டுஇருந்தனர். அப்போது பண்ருட்டி ரெயில் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமாககட்டைப்சாபையுடன் அமர்ந்திருந்தவரை பிடித்து விசாரித்தனர்.அவர் திருச்சிஅரியமங்கலம் வேலாயுதம் தெருவை சேர்ந்த மணிவண்ணன்(46) என தெரிய வந்தது. இவர் பாண்டிச்சேரி மதகடிப்பட்டியில் இருந்து 48 சாராய பாக்கெட்டுகளை வாங்கி வந்ததாக கூறினார். அவரை பிடித்து பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனைதொடர்ந்து அவரை கைது செய்துஅவரிடமிருந்து சாராய பாக்பகெட்டுகளை பறிமுதல் செய்து அவரைபண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதாக கூறி வீட்டிலிருந்து புறப்ப ட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை
    • வழக்குபதிவு செய்து காணாமல் போன கணேசனை தேடி வருகின்றார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் காட்டா ண்டி க்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 52). விவசாயி, இவர்கடந்த1-ந் தேதி காலை 8 மணிக்கு பண்ருட்டி ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதாக கூறி வீட்டிலிருந்து புறப்ப ட்டு சென்றவர் வீடு திரும்பவி ல்லை.பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து காடாம்புலியூர் போலீசில் கணேசன் மனைவி மல்லிகா புகார் கொடுத்தார். காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காணாமல் போன கணேசனை தேடி வருகி ன்றார்.

    • ராஜஸ்ரீ கடலூர் தனியார் கல்லூரியில் பி.ஏ.படித்து வருகிறார்.
    • அருள் என்பவர் தனது மகளிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக புகார் கொடுத்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே செம்மேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகள் ராஜஸ்ரீ (வயது 18) கடலூர் தனியார் கல்லூரியில் பி.ஏ.படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று 7-ம்தேதி பண்ருட்டியில் உள்ள டைப்ரைட்டிங் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜஸ்ரீயின் பெற்றோர் இவரை பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் ராஜஸ்ரீ கிடைக்க வில்லை. இதுகுறித்து ராஜஸ்ரீயின் தந்தை ராமமூர்த்தி காடாம்புலியூர் போலீசில் மணப்பாக்கத்தை சேர்ந்த அருள் என்பவர் தனது மகளிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக புகார் கொடு த்தார். புகாரின்பேரில் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் வழக்கு பதிவு செய்து அருளை தேடி வருகின்றனர்.

    ×