என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்.எல்.சி. ஊழியர்"

    • நெய்வேலி அருகே உள்ள ஊ.மங்கலத்தை சேர்ந்த வர் மணிவேல்
    • மணிவேலுக்கு உடல்நலம் பாதிக்கப் பட்டது

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள ஊ.மங்கலத்தை சேர்ந்த வர் மணிவேல் (வயது 42). இவர் என்.எல்.சி. முதலா வது சுரங்கத்தில் தொழி லாளியாக வேலைபார்த்து வந்தார்.கடந்த 2 நாட்களுக்கு முன்பு மணிவேலுக்கு உடல்நலம் பாதிக்கப் பட்டது. இதைத்தொடர்ந்து அவர் என்.எல்.சி. பொது மருத்துவ மணையில் அனு மதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்பு திருச்சி யில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மணிவேல் உயிரிழந்தார்.

    அவர் மாரடைப்பால் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மணிவேல் உடல் ஆம்புலன்ஸ் மூலம் ஊ.மங்கலத்துக்கு கொண்டு வரப்பட்டது. இறுதி சடங்கு நடைபெற இருந்த நிலையில் ஊ.மங்கலம் போலீசார் அங்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மணி வேலின் சாவு குறித்து யாரா வது தகவல் தெரிவித்தி ருக்கலாம் அதனால்தான் போலீசார் உடலை பிரேத பரிசோதகை்காக அனுப்பி வைத்தது தெரியவந்தது.

    • ராஜ்மோகன் என்.எல்.சி. சுரங்கத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
    • வீட்டிற்கு வந்த பொழுது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சடைந்தார்.

    கடலூர்:

    நெய்வேலி வட்டம் -2 என்.கே.ஆர். பிள்ளை சாலையில் வசித்து வருபவர் ராஜ்மோகன் (வயது 56). இவர் என்.எல்.சி. சுரங்கத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த 9-ந் தேதி ராஜ்குமார் தனது உறவினர் திருமணத் திற்காக தனது குடும்பத்தினருடன் திருச்சி சென்றார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டிற்கு வந்த பொழுது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சடைந்தார். மேலும் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி குத்துவிளக்கு உள்ளிட்டவை திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து ராஜ்மோகன் நெய்வேலி நகர போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×