என் மலர்
கடலூர்
- ஆறுமுகம் செங்கல் சூளை தொழிலாளி.
- வேலைக்கு போகாமல் வீட்டிலேயே குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சிறுவத்தூர், திடீர்குப்பம் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (52). செங்கல் சூளை தொழிலாளி.திருமணமான இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் கடந்த ஒரு மாத காலமாக வேலைக்கு போகாமல் வீட்டிலேயே குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டுக் கொண்டார். அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்ப த்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்ல ப்பட்டார். அங்கு அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை நெடுஞ்சாலை த்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
- உயிர் பலி ஏற்படும் என்ற அபா யத்துடன் தினந்தோறும் வாகன ஓட்டிகள் இருந்து வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் கோண்டூர் - மடப்பட்டு வரை ரூ. 30 கோடி செலவில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் நெல்லிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில் இருந்து கீழ்பட்டாம்பாக்கம் வரை ஒருபுறம் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை நெடுஞ்சாலை த்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகள் மந்தமாக நடைபெ ற்று வருவதால் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சாலை ஓரத்தில் தோண்ட ப்பட்ட பள்ளங்கள் அருகா மையில் பாதுகாப்பு உபகர ணங்கள் இல்லாத தால் எப்பொழுது விழுந்து விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஏற்படும் என்ற அபா யத்துடன் தினந்தோறும் கார், வேன், பஸ், இருசக்கர வாகன ஓட்டிகள் இருந்து வருகின்றனர்.
மேலும் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிக் கொண்டு வரும் மாட்டு வண்டிகள், டிராக்டர் போன்றவற்றால் ஒருபுறம் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காண ப்பட்டதோடு நாளுக்கு நாள் போக்குவரத்து பாதிப்பு இருந்து வருகின்ற து. இதன் காரணமாக வேலைக்கு செல்பவர்கள், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் போன்றவற்றை போக்குவர த்து நெரிசலில் சிக்கி கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.மேலும் நெடுஞ்சாலை த்துறையினர் எந்தவித முன் ஏற்பாடுகள் செய்யாமல் அலட்சியமாக இருந்து வருவதால் தொடர்ந்து பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றது. இந்த நிலையில் பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி வரக்கூடிய கனரக வாக னங்கள் களிஞ்சிக்குப்பம் சாலை , கஸ்டம்ஸ் சாலை வழியாக கடலூருக்கு செல்வதற்கு போலீசார் சார்பில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்த போக்குவரத்து பாதிப்பு மற்றும் உயிர்பலி ஏற்படக்கூடிய நிலையில் பணிகள் நடைபெற்று வருவதால் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாததாலும் கொள்ளையர்களை கைது செய்ய முடியவில்லை.
- கள்ளக்குறிச்சியில் தற்போது ஒரு திருட்டு வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பாலூர், திருவதிகை, ராசாபாளை யம், எல்.என்.புரம் போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட் டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை போனது. இது தொடர்பாக பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். ஆனால் போலீசாரால் இதுவரை கொள்ளையர்களை கைது செய்ய முடியவில்லை. கொள்ளை நடந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படா ததாலும் என்.எல்.சி. போராட்டம், பஸ்கள் கண்ணாடி உடைப்பு மேலும் போதிய அளவு போலீசார் இல்லாதது போன்ற காரணங்களாலும் இந்த கொள்ளை வழக்கில் துப்பு துலுக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் தற்போது ஒரு திருட்டு வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். இவர்களில் ஒருவனுக்கு பண்ருட்டி கொள்ளை சம்பவத்தில் தொடர்பு உள்ளது என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பண்ருட்டி டி.எஸ்.பியின் தனிப்படை யினர் கள்ளக்குறிச்சியில் கைது செய்யப்பட்ட ஒரு வனை சந்தேகத்தின் அடிப்படையில் காவலில் எடுத்து விசாரிக்க நட வடிக்கை எடுத்து வருகின்ற னர். இதில் துப்பு துலங்கி னால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீ சார் தெரிவித்தனர்.
- என்.எல்.சி. 2-வது சுரங்கத்தை ஜீவா தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
- எந்தவித அசம்பாவிதமும் நிகழாத வண்ணம் போலீசார் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 17 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இவர்களில் 5 ஆயிரம் பேர் நிரந்தர தொழிலாளர்கள். 12 ஆயிரம் பேர் சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள். என்.எல்.சி. நீரோட்டத்துக்காக வீடு, நிலம் வழங்கியவர்களில் பெரும்பாலானவர்கள் சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களாக பல ஆண்டுகளாக குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வருகின்றனர்.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 26-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் என்.எல்.சி. தலைமை அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
என்.எல்.சி. தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த சென்னை ஐகோர்ட்டு தடை விதித்ததை அடுத்து ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தை நெய்வேலி பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா திடலுக்கு மாற்றினர்.
நேற்று என்.எல்.சி. 1-வது சுரங்கம் வாசல் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று என்.எல்.சி. 2-வது சுரங்கம் வாசல் முன்பு 11-வது நாளாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு எந்தவித அசம்பாவிதமும் நிகழாத வண்ணம் போலீசார் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள ஒப்பந்த தொழிலாளர்கள் சுரங்க வாசல் வழியாக பணிக்கு செல்லும் நிரந்தர தொழிலாளர்களையும், சொசைட்டி தொழிலாளர்களையும் கைகூப்பி வணங்கி தங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
- சுரங்க விரிவாக்க பணிக்காக நிலம் தேவைப்படுவதால் மீண்டும் நோட்டீஸ் வழங்கி உள்ளது.
- நெய்வேலி அருகே உள்ள தென்குத்து, அம்மேரி, தொப்பிலிக்குப்பம் உள்பட பல்வேறு கிராமங்களிலும் நிலம் எடுக்கப்பட்டுள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் நிர்வாகம் விரிவாக்கப் பணிகளை தொடங்கி உள்ளது.
சுரங்க விரிவாக்க பணிகளில் தீவிரம் காட்டி வரும் என்.எல்.சி. நிர்வாகம், சுரங்க விரிவாக்க பணிக்காக நிலம் தேவைப்படுவதால் மீண்டும் நோட்டீஸ் வழங்கி உள்ளது.
நெய்வேலி அருகே உள்ள தென்குத்து, அம்மேரி, தொப்பிலிக்குப்பம் உள்பட பல்வேறு கிராமங்களிலும் நிலம் எடுக்கப்பட்டுள்ளது.
நில உரிமையாளர்கள் ஆட்சேபணை இருந்தால் 30 நாட்களுக்குள் மாவட்ட நில எடுப்பு வருவாய் அலுவலரை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பண்ருட்டி மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
- நாளை (5ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படும் என்று பண்ருட்டி மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கடலூர்:
பண்ருட்டி மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் பண்ருட்டி நகரம், திருவதிகை, ஆ.ஆண்டிக் குப்பம், இருளங்குப்பம், சீரங்குப்பம், தி.ராசாப் பாளையம், எல்.என்.புரம், கந்தன்பாளையம், வ.உசி.நகர், சாமியார் தர்கா, அ.ப.சிவராமன் நகர், பனிக்கன்குப்பம், மாளிகம்பட்டு, தாழம்பட்டு, பிள்ளையார்குப்பம், செம்மேடு, மந்திப்பாளை யம், சிறுவத்துார், அங்குசெட்டிப்பாளையம், கொக்குப்பாளையம். ஆகிய பகுதிகளில் நாளை (5ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படும் என்று பண்ருட்டி மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- மருந்துகள், உணவுகள் ஆகியவை குறித்த நேரத்தில் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.
- கட்டுப்பாட்டு அறை மற்றும் இ-சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.
கடலூர்:
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, ஆண்கள் மற்றும் பெண்கள் வார்டுகள், தீவிர சிகிச்சை பிரிவு, மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை மையம், மகப்பேறு பிரிவு, பிரசவ அவசர சிகிச்சை பிரிவு, சிறுநீரகவியல் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டு அந்த பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் மருத்துவ சேவைகள் மற்றும் மருந்துகள், உணவுகள் ஆகியவை குறித்த நேரத்தில் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.
மேலும் பல்வேறு பிரிவுகளில் உள்ள கழிப்பறைகள் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து மருத்துவமனையில் உள்ள வார்டுகள், வளாகங்கள் மற்றும் கழிப்பறைகளை தூய்மை யாக வைத்திருக்கவும் அலுவலர்களுக்கு அறிவு றுத்தினார். தொடர்ந்து மருத்துவமனையில் செயல்படும் சமையல் கூடத்தை பார்வையிட்டு சுகாதாரமான முறையில் உணவு தயார் செய்து குறித்த நேரத்தில் வழங்கப்படுகிறதா எனவும் கேட்டறிந்தார். முன்னதாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை கலெக்டரின் நேரடி கவனத்திற்க்கு வாட்ஸ் அப் (82487 74852) எண் மூலம் அளிக்கபடுவதனை துறை சார்ந்த அலுவலர்களுக்கு பிரித்தனுப்பப்பட்டு தீர்வுகாணும் வகையில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறை மற்றும் இ-சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார். மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தினை பார்வையிட்டு, வளாக பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறித்தினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் ஜெகதீஸ்வரன், இணை இயக்குனர் (சுகாதாரம்) சாரா செலின் பால், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அசோக்பாஸ்கர், தேசிய சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் காரல் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
- மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்திடுமாறு தெரிவிக்கப்படுகிறது.
- மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் வாயிலாக 2023-2024-ம் நிதியாண்டிற்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ரூ.2000, 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.6000, 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை, ஐடிஐ மற்றும் டிப்ளமோ-விற்கு ரூ.8000, இளநிலை பட்டப்படிப்பிற்கு ரூ.12000 மற்றும் முதுநிலை பட்டப்படிப்பிற்கு ரூ.14000 வழங்கபட்டு வருகிறது.
மேலும் பார்வையற்ற மாணவ, மாணவியர்களுக்கு வாசிப்பாளர் உதவித்தொகையாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை, ஐடிஐ மற்றும் டிப்ளமோ-விற்கு ரூ.3000, இளநிலை படிப்பிற்கு ரூ.5000 மற்றும் முதுநிலை படிப்பிற்கு ரூ. 6000 வழங்கபட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் தங்களுடைய அடையாள அட்டை (அனைத்துப் பக்கங்களும் மருத்துவ சான்றுடன்), குடும்ப அட்டை, சென்ற ஆண்டின் மதிப்பெண் சான்று, கல்வி சான்று, வங்கி புத்தகநகல் ஆகியவற்றுடன் இணையதளத்தில் விண்ணப்பித்திடுமாறு தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான கூடுதல் தகவலுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புதிய மாவட்ட கலெக்டர் வளாகத்தில் செப்டம்பர் 5-ந்தேதி காலை 10.30 மணிக்கு நடக்கிறது.
- 16-ந்தேதிக்குள் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-
கடலூர் மாவட்டத்தில் அரசுத்துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் குறை கேட்பு கூட்டம், புதிய மாவட்ட கலெக்டர் வளாகத்தில் செப்டம்பர் 5-ந்தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் தலைமையில், சென்னை ஓய்வூதிய இயக்குநரால் நடத்தப்பட உள்ளது. கடலூர் மாவட்டத்தில் அரசுத்துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை 2 பிரதிகளில் "ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் மனு" என குறிப்பிட்டு வருகிற 16-ந்தேதிக்குள் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
- என்.எல்.சி. 1-வது சுரங்கத்தை ஜீவா தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
- ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக நெய்வேலியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 17 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இவர்களில் 5 ஆயிரம் பேர் நிரந்தர தொழிலாளர்கள். 12 ஆயிரம் பேர் சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள். என்.எல்.சி. நீரோட்டத்துக்காக வீடு, நிலம் வழங்கியவர்களில் பெரும்பாலானவர்கள் சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களாக பல ஆண்டுகளாக குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வருகின்றனர்.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 26-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை என்.எல்.சி. தலைவர் வீட்டை நோக்கி பேரணி நடத்தப்படும் என ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் சேகர் அறிவித்து இருந்தார். ஆனால், போலீசார் இந்த பேரணிக்கு அனுமதி வழங்கவில்லை. அதனை தொடர்ந்து என்.எல்.சி. தலைமை அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
என்.எல்.சி. தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த சென்னை ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளது. இதனால் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தை வேறு இடத்துக்கு மாற்றினர்.
அதன்படி நெய்வேலி பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா திடலுக்கு போராட்ட இடத்தை மாற்றினர். இன்று 10-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. ஒப்பந்த தொழிலாளர்கள் என்.எல்.சி. 1-வது சுரங்கம் வாசல் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாலை 5.30 மணிக்கு 1-வது சுரங்கத்தின் வாசல் வழியாக வேலைக்கு சென்ற நிரந்தர தொழிலாளர்களை தங்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கைகூப்பி வணங்கி ஆதரவு திரட்டினர்.
நாளை (சனிக்கிழமை) 2-வது சுரங்க வாசல் முன்பு போராட்டம் நடைபெறுகிறது. ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக நெய்வேலியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- காசோலையை, சிறப்பு துணை ஆட்சியர் நிலம் கையகப்படுத்துதல் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- நாளை முதல் விவசாயிகள் இந்த தொகையை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிப்பு.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் என்எல்சி நிர்வாகம் விரிவாக்கப் பணிகளை தொடங்கி உள்ளது.
பரவனாறு நிரந்தரக் கால்வாய் அமைக்கும் பணியின்போது சிறிய அளவிலான பாசன நிலம் பாதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க என்எல்சி முன் வந்தது.
என்எல்சிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டு அதை வழங்கவும் என்எல்சி ஒப்புதல் அளித்தது.
பாதிக்கப்பட்ட விவசாயி தொடரந்த வழக்கு விசாரணையின்போது, "இந்த இழப்பீடு தொகையை வரும் ஆகஸ்டு மாதம் 6ம் தேதிக்குள் வழங்கும்படியும், செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்கு பிறகு நில உரிமையாளர்கள் மேற்கொண்டு விவசாய பணிகளை மேற்கொள்ள கூடாது" என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி விவசாயிகளுக்கான காசோலையை என்எல்சி நிறுவனம் ஒப்படைத்துள்ளது.
இந்த இழப்பீடு தொகைக்கான காசோலையை, சிறப்பு துணை ஆட்சியர் நிலம் கையகப்படுத்துதல் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், நாளை முதல் விவசாயிகள் இந்த தொகையை பெற்றுக் கொள்ளலாம் என என்எல்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
என்எல்சி நிறுவனம் ஏற்கனவே ஒரு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் என்ற அளவில் காசோலையை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கியிருந்தது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஏக்கருக்கு கூடுதலாக ரூ.10 ஆயிரத்திற்கான சாகோலையை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- வீராசாமி கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வருந்தார்.
- நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் வீராசாமி (வயது 46). இவர் வலசை கிராமத்தில் கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வருந்தார். இந்நிலையில் நேற்று மாலை வேப்பூர் தாசில்தார் அலுவலகத்திற்கு பணி நிமித்தமாக வந்து பணியை முடித்து விட்டு மீண்டும் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிள் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை வேப்பூர் சர்வீஸ் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீராசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.






