என் மலர்tooltip icon

    கடலூர்

    • வாய்க்கால் வெட்டும் வளையமாதேவி பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
    • இன்னும் இரண்டொரு நாட்களில் பணிகள் முடிவடைந்து விடும் என கூறப்படுகிறது.

    சேத்தியாதோப்பு:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் விரிவாக்க பணிக்காக சேத்தியாதோப்பு அருகே உள்ள வளையமாதேவி கிராமத்தில் புதிய பரவனாறு வாய்க்கால் வெட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    பணிகள் தொடங்கிய 3-வது நாளில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் என்.எல்.சி. ஆர்ச் கேட் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

    இதில் வன்முறை வெடித்தது. பல வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பலரை போலீசார் கைது செய்தனர்.

    இதையொட்டி வாய்க்கால் வெட்டும் வளையமாதேவி பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பேரி கார்டுகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

    தொடர்ந்து வாய்க்கால் வெட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று 12-வது நாளாக பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ராட்சத பொக்லைன் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    மேலும் வாய்க்கால் கரைப்பகுதியில் சிமெண்ட் கட்டைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது.

    இன்னும் இரண்டொரு நாட்களில் பணிகள் முடிவடைந்து விடும் என கூறப்படுகிறது. பணிகள் தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் பரபரப்பான சூழலில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    தற்போது வளையமாதேவி, எறும்பூர், ஆணை வாரி, சேத்தியாதோப்பு குறுக்கு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • வேலை பெற்ற பட்டியலில் உள்ள 28 பேர் ராஜஸ்தானில் நிலம் கொடுத்தவர்கள்.
    • நிறுவனத்தின் நன்மதிப்பை கெடுக்கும் நோக்கில் தவறான செய்தியை பரப்பி இருக்கக்கூடும்.

    நெய்வேலி என்.எல்.சி.யில் பணி வழங்கப்பட்ட வட இந்தியர்கள் 28 பேரின் முழு விவரங்களையும் என்எல்சி நிர்வாகம் வெளியிட்டது.

    இந்நிலையில், நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கியதில் வட இந்தியர்களின் பெயர்கள் உள்ளது குறித்து என்எல்சி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

    இதுகுறித்து என்எல்சி நிறுவனம் கூறியதாவது:-

    என்எல்சி நிறுவனம் இந்திய அளவிலான ஒரு நிறுவனமாக உள்ளது.

    என்.எல்.சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கே பணி வழங்கப்பட்டுள்ளது.

    வேலை பெற்ற பட்டியலில் உள்ள 28 பேர் ராஜஸ்தானில் நிலம் கொடுத்தவர்கள்.

    ராஜஸ்தானில் உள்ள பர்சிங்கார் சுரங்கங்கள், அனல் மின் நிலைய திட்டங்களுக்காக வழங்கப்பட்ட நிலத்தை கருத்தில் கொண்டு வேலை வழங்கப்பட்டது.

    நிறுவனத்தின் நன்மதிப்பை கெடுக்கும் நோக்கில் தவறான செய்தியை பரப்பி இருக்கக்கூடும்.

    இவ்வாறு கூறியது.

    • இறந்த ஆறுமுகத்திற்கு மனைவி மற்றும் மகன் உள்ளார் என்பதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
    • இவர் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வந்து எனது அம்மாவிடமும், என்னிடம் பிரச்சனை செய்வார்.

    கடலூர்:

    பண்ருட்டி திருவதிகை ஆயில் மில் பஸ் நிறுத்தம் அருகில் இன்று காலை சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடப்பதாக போலீசாருக்குக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து இறந்து கிடந்த நபரை குறித்து விசாரணை நடத்தியபோது இறந்த நபர் நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 55) என்பதும். நேற்று இரவு இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இறந்த ஆறுமுகத்திற்கு மனைவி மற்றும் மகன் உள்ளார் என்பதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் ஆறுமுகத்தின் மகன் பாலச்சந்தரிடம் கேட்டபோது எனது தந்தைக்கு குடிப்பழக்கம் உள்ளது. இவர் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வந்து எனது அம்மாவிடமும், என்னிடம் பிரச்சனை செய்வார். இதனால் இவரை விட்டு பிரிந்து நாங்கள் கடலூருக்கு சென்று விட்டோம். நான் சென்னையில் பழக்கடையில் வேலை பார்த்து வருகிறேன். இந்நிலையில் என து தந்தை இறந்து விட்டார் என்று செய்தி கேட்டு நான் சென்னையில் இருந்து பண்ருட்டிக்கு வருவதாக அவர் கூறினார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதுவை மாநிலத்தை சேர்ந்தவர்கள் இங்கு மீன்பிடிப்பது, தங்களின் வாகனங்களை கழுவுதல் வழக்கம்.
    • ஆய்வுக்கு அனுப்ப கடலூர் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் தென்பெண்ணையாறு உள்ளது. நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்காகவும், அப்பகுதியில் வசிப்பவர்கள் கடலூருக்கு வந்து செல்வதற்காகவும் புதுவை மாநில அரசால் தடுப்பணையுடன் கூடிய தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலத்தில் எப்போதும் தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால், கடலூர் மற்றும் புதுவை மாநிலத்தை சேர்ந்தவர்கள் இங்கு மீன்பிடிப்பது, தங்களின் வாகனங்களை கழுவுதல் வழக்கம். பள்ளி விடுமுறை நாட்களில் சிறுவர்கள் அதிகளவில் வலை விரித்தும், தூண்டில் போட்டும் மீன்களை பிடிப்பார்கள். அதன்படி கடலூர் பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள் இன்று தரைப்பாலம் அருகே மீன்களை பிடிக்க வலை விரித்தனர். சிறிது நேரம் கழித்து வலையை மேலே எடுத்தனர். வலையில் கைத்துப்பாக்கி ஒன்று இருந்தது. இதனை பார்த்த சிறுவர்கள், பொம்மை துப்பாக்கி என நினைத்து கையில் எடுத்து சென்றனர்.

    அப்போது தரைப்பாலத்தில் சென்ற ஒருவர், சிறுவர்களிடமிருந்து இதனை வாங்கி பார்த்தார். இதையெல்லாம் நீங்கள் வைத்திருக்க கூடாது, பெரியவர்களிடம் தான் இருக்க வேண்டுமென கூறி வாங்கி சென்றுள்ளார். இதனால் குழப்பமடைந்த சிறுவர்கள் கலெக்டர் அலுவலகம் எதிரில் பணியில் இருந்த போலீசாரிடம் இது குறித்து கூறினார்கள். உடனடியாக தரைப்பாலத்திற்கு சென்ற போலீசார், அந்த நபரை வழிமறித்து, அவரிடமிருந்த கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இதனைக் கண்ட போலீசார், இது ஒரு வகையான ஏர் பிஸ்டல் என்பதை உறுதி செய்தனர். இந்த கைத்துப்பாக்கியை கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த துப்பாக்கியில் குண்டுகள் உள்ளதா? இது வேறு ஏதேனும் குண்டுகளுடன் ஒத்துப்போகிறதா? இந்த கைத்துப்பாக்கி எந்த காலக்கட்டத்தில் பயன்படுத்தப்பட்டது? என்பது குறித்து கண்டறிய ஆய்வுக்கு அனுப்ப கடலூர் போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன்பிறகே இந்த கைத்துப்பாக்கி யாருடையது? எவ்வாறு தென்பெண்ணையாற்றுக்கு வந்தது என்பது குறித்து தெரியவரும் என கடலூர் புதுநகர் போலீசார் தெரிவித்தனர். சிறுவர்களின் மீன்பிடி வலையில் கைத்துப்பாக்கி சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இதுகுறித்து சந்துருவிடம் கேட்டதற்கு உங்கள் பெண்ணை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறினார்.
    • பெற்றோரை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் பண்ருட்டியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சிறுவத்தூர் திடீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சந்துரு, கூலி தொழிலாளி. இவர் பிளஸ்-2 மாணவியிடம் சென்று ஆசைவார்த்தை கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படு கிறது. இதை அறிந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து சந்துருவிடம் கேட்டதற்கு உங்கள் பெண்ணை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறினார்.

    இதற்கு பெண்ணின் பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சந்துரு பெண்ணின் பெற்றோரை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். அத்துடன் அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு தொடர்ந்து கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து மாணவி யின் பெற்றோர் பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் வள்ளி யிடம் புகார் கொடுத்தனர். இதனையடுத்து கூலி தொழிலாளி சந்துரு மீது மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவிசி தேடி வருகின்றனர்.

    • கடந்த 30-ம்தேதி திருப்பூ ருக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து சென்றார்.
    • இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சாந்தியை தேடி வருகின்றார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 28)கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (28). இவர் ராமதாஸ்க்கு தெரியாமல் கடன் வாங்கிய நிலையில் கடந்த 30-ம்தேதி திருப்பூ ருக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து சென்றார். பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை. இது குறித்து புதுப்பேட்டை போலீசில் ராமதாஸ் கொடுத்த புகாரின் பேரில் புதுப் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சாந்தியை தேடி வருகின்றார்.

    • சர்வேயர் மற்றும் சர்தார் பணியிட ங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பை 2022-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி வெளியிட்டது.
    • வேலைவாய்ப்பை வழங்குவதில் சிறப்பு கவனம் செலுத்தியதற்காக என்.எல்.சி. நிறுவனத்திற்கு பாராட்டு தெரிவித்தனர்.

    கடலூர்:

    என்.எல்.சி. இந்தியா நிறுவனம், 192 காலியிட ங்களுக்கான ஓவர்மேன், சர்வேயர் மற்றும் சர்தார் பணியிட ங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பை2022-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி வெளியிட்டது. முதன்முறையாக, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, ஆட்சேர்ப்பு தேர்வில் 20 சலுகை மதிப்பெண்களை என்.எல்.சி. அறிவித்தது. இந்த வகையில் ஆட்சேர்ப்புச் சலுகை மதிப்பெண் காரணமாக, நெய்வேலியைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள, நெய்வேலி சுரங்கங்களுக்காக நிலம் கொடுத்து பாதிக்க ப்பட்ட 39 பேர், ஓவர்மேன், சர்வேயர் மற்றும் சர்தார் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட 39 பேர்களும் என்.எல்.சி . நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளனர். புதிதாக பணியில் சேர்ந்த, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட 39 பேர்கள் அனைவரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படு த்தியதோடு, திட்டத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதில் சிறப்பு கவனம் செலுத்தியதற்காக என்.எல்.சி. நிறுவனத்திற்கு பாராட்டு தெரிவித்தனர். இத் தகவலை என்.எல்.சி. மக்கள் மேம்பாட்டு துறை தலைமை மேலாளர் தெரிவித்துள்ளார்.

    • படிப்பு முடித்தவுடன் வேலைவாய்ப்பிற்கு வழி வகை செய்யப்படும்.
    • ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை பெறலாம்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்து ள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது- தமிழ் நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு,ஓட்டல் மானேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூ ட்டில் 3 வருட முழு நேர பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு களில்சேர்ந்து படித்திடவும் , படிப்பு முடித்தவுடன் வேலைவாய்ப்பிற்கு வழி வகை செய்யப்படும். சென்னை தரமணியில் மத்திய அரசின் சுற்றுலா துறையின் கீழ், அமைய பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம். மேலும் இந்நிறுவனம் சர்வதேச அங்கீகாரம் பெற்றது.

    இந்நிறுவனத்தில்12-ம் வகுப்பு முடித்த ஆதிதிரா விடர்மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்தவருக்கு 3 வருட முழு நேர பட்ட படிப்புபி.எஸ்.சி. , ஒன்றறை ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு பட்டயப் படிப்பு (டிப்ளமோ புட் புரோடக்க்ஷன் ) 10-ம்வகுப்பு முடித்தவர்களுக்கு ஒன்றறை ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் பதனிடு தல்,கைவிைனஞர் உணவு மற்றும் பானசே வையில் கைவினைத்திறன் படிப்பு, பேக்கரி மற்றும் மிட்டாய் துறையில் பட்டயப்படிப்பு,முன் அலுவலக செயல்பாட்டில் பட்டய ப்படிப்பு ஹவுஸ் கீப்பிங் செயல்பாட்டில் பட்டயப்படிப்பு, உணவு முறை மற்றும் உணவு சேவை முதுகலை பட்டதாரி பட்டயப்படிப்பு விடுதி செயல்பாடு மற்றும் நிர்வாகத்தில் முதுகலை பட்டயப்படிப்புஆகிய பட்ட படிப்பில் சேர்ந்து படித்திடவும், படிப்பு முடிந்தவுடன், நட்சத்திர விடுதிகள். விமானம் நிறுவனம், கப்பல் நிறுவனம், சேவை நிறுவனங்கள் மற்றும் உயர் தர உணவகங்கள் போன்ற இடங்களில் வேலை வாய்ப்பும் பெற்று தரப்படும். இப்பயிற்சி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் 45 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்படி ப்பிற்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்படும். ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பீச் ரோடு சிக்னல் அருகில் வந்த போது திடீரென பயங்கர சத்தம் கேட்டது.
    • பஸ்சின் இன்ஜினில் இருந்த டியூப் ஒன்று வெடித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து இன்று காலை 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு டவுன் பஸ் பண்ருட்டி நோக்கி புறப்பட்டது. அந்த பஸ் கடலூர் அண்ணா பாலத்தை கடந்து பீச் ரோடு சிக்னல் அருகில் வந்த போது திடீரென பயங்கர சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சை நடுரோட்டில் நிறுத்தினார். இதற்கிடையே சத்தம் கேட்டு பதறிய பயணிகள் அலறி அடித்துக் கொண்டு பஸ்சிலிருந்து அவசர அவசரமாக கீழே இறங்கினர்.

    பின்னர் பஸ் பழுதானது குறித்து, போக்குவரத்து பணிமனை ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் ஊழியர்கள் விரைந்து வந்து பழுதாகி நின்ற பஸ்சை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பஸ்சின் இன்ஜினில் இருந்த டியூப் ஒன்று வெடித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பஸ்சை சாலையோரம் அப்புறப்படுத்தி அதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதற்கு இடையே பஸ்சில் இருந்து இறங்கிய பயணிகள் மாற்று பஸ்சில் பண்ருட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • வீட்டு வேலைக்கு அழைத்து வந்த பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கீரப்பாளையத்தை சேர்ந்த ராம்சிங் ஆகியோர் ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்தனர்.

    கடலூர்:

    சிதம்பரம் அடுத்த அம்மாப்பேட்டை சாரதா ராம் நகரில் உள்ள வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ் பெக்டர் வனஜா தலைமை யிலான போலீசார் விரைந்து சென்றனர் அங்கு ஒரு பெண் விப சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் புதுவை மாநிலம் காரைக்கால் திருநள்ளாறு பகுதியை சேர்ந்த உமாமகேஸ்வரி (வயது 42) என்பது தெரியவந்தது.

    இவருக்கு வீட்டில் சமையல் வேலை வாங்கித் தருவதாக கூறி, அம்மாப் பேட்டையை சேர்ந்த திவ்யா (35), பெருமாத்தூரை சேர்ந்த சவுகத்அலி (54), கீரப்பாளையத்தை சேர்ந்த ராம்சிங் (32) ஆகியோர் ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்தனர். இங்கு அவரை மிரட்டி விப சாரத்தில் ஈடுபடுத்தியதும் போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். உமாமகேஸ் வரியை மீட்டு அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    • கடலூர் அருகே போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
    • தொடர்ந்து கிருபாநிதியை பிடித்து விசாரணை நடத்தினர்.

    கடலூர்:

    நடுவீரப்பட்டு பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் போலி டாக்டர் வீடு வீடாக சென்று சிகிச்சை அளித்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நடுவீரப் பட்டு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்தி ரன் மற்றும் சுகாதார துறை யினர் அதே பகுதியில் உள்ள கிருபாநிதி (வயது 51) என்பவர் வீட்டிற்கு சென்று அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது கிருபாநிதி அரசு அனுமதி இல்லாமல், உரிய மருத்துவ சான்றிதழ் இல்லாமலும் மருந்து, மாத்திரை, மருத்துவ உபகர ணங்கள் வைத்திருந்தும், பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கிருபா நிதியை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியில் டாக்டர் ஒருவரிடம் உதவி யாளராக பணிபுரிந்து வந்ததும், தற்போது பொது மக்களுக்கு வீட்டில் சென்று சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது. இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து கிருபாநிதியை அதிரடியாக கைது செய்தனர்.

    • தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் தற்போது முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • உபகர ணங்களை சேதப்படுத்தும் அல்லது திருடும் நபர்கள் மீது நட வடிக்கை மேற்கொள்ள ப்படும்

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தங்கராஜ் விடுத்து ள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    கடலூர் மாவட்டத்தி லுள்ள 683 கிராம ஊராட்சி களிலும் இணையதள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டமானது, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் தற்போது முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இணையதள இணைப்பு வழங்கும் பணி வருகிற செப்டம்பர் மாதம் முதல் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கண்ணாடி இழை இணைப்பு 85 சதவீதம் மின்கம்பங்கள் மூலமாகவும், 15 சதவீதம் தரை வழியாகவும் இணைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்திற்கான ரேக், யூ.பி.எஸ். உள்ளிட்ட உபகரணங்கள், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம ஊராட்சி சேவை மையம் அல்லது அரசு கட்டிடத்தில் நிறுவப்ப ட்டு வருகிறது. இந்த உபக ரணங்கள் பொருத்தப்ப ட்டுள்ள அறை, சம்பந்த ப்பட்ட ஊராட்டசி மன்றத் தலைவரால் பராமரிக்க ப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கான உபரகணங்களை பாதுகா த்திடவும், தடையில்லா மின் வசதி உள்ளதை உறுதி செய்திடவும், பி.ஓ.பி. பொறுத்தப்பட்டுள்ள அறையை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளுக்கு, சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி செயலாளர் அரசாணையின்படி பெறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதனால் இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் போது, ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் வசிக்கும் மக்கள் அனைவரும் இணையதள வசதிகளை பெற முடியும். ஒவ்வொரு கிராம ஊராட்சியில் மையங்களில் பொருத்த ப்பட்டுள்ள மின்கலம், மற்றும் கண்ணாடி இழை உள்ளிட்ட உபகரணங்கள் யாவும் அரசின் உடைமைக ளாகும். மேற்கண்ட உபகர ணங்களை சேதப்படுத்தும் அல்லது திருடும் நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் காவல் துறையினர் மூலம் கடுமையான குற்றவியல் நட வடிக்கை மேற்கொள்ள ப்படும் என எச்சரிக்கப்ப டுகிறது. இவ்வாறு கூறப்பட்டு ள்ளது.

    ×