என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elderly Woman Suicide Attempt"

    • பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சியடைந்து, மூதாட்டியை மீட்டு விசாரணை நடத்தினர்.
    • கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்து மூதாட்டி கவுசல்யாவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு இன்று காலை மூதாட்டி ஒருவர் வந்திருந்தார்.

    இவர் வைத்திருந்த மண்ணெண்ணை கேனை எடுத்து தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சியடைந்து, மூதாட்டியை மீட்டு விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கடலூர் வன்னியர் பாளையத்தை சேர்ந்த கவுசல்யா (வயது 70) என்பது தெரியவந்தது. இவரது வீட்டில் இருந்த காரை ஒரு நபர் எடுத்துச் சென்றுள்ளார். இது தொடர்பாக அந்த நபரிடம் பலமுறை கேட்டும் இதுவரை திருப்பி தராததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் அளித்துள்ளார்.

    இதன் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக பலமுறை மனு அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை. எனவே, தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததாக போலீசாரிடம் மூதாட்டி கூறினார்.

    இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என மூதாட்டியிடம் போலீசார் அறிவுறுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்து மூதாட்டி கவுசல்யாவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    ×