என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை நீட்டிப்பு : கலெக்டர் தகவல்
- தொழிற் பிரிவு இடங்களுக்கு நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் வருகிற 16-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் நேரடியாக சேர்க்கை அளிக்கப்படும்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
கடலூர் மாவட்டத்தில், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், கடலூர், கடலூர் (மகளிர்), சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், மங்களுர் மற்றும் நெய்வேலி தொழிற்பயிற்சி நிலை யங்களில் 2023-ம் ஆண்டு பயிற்சியாளர்களுக்கு காலியாக உள்ள தொழிற் பிரிவு இடங்களுக்கு நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் வருகிற 16-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர் இந்ந வாய்ப்பினை பயன்படுத்தி அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர்ந்து பயன் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலைங்களில் உள்ள தொழிற் பிரிவு விபரங்கள் அறிய இணையதளத்தினை பார்த்து கொள்ளலாம். மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் நேரடியாக சேர்க்கை அளிக்கப்படும். தொழிற் பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோரும் ரூ.750 உதவித்தொகை மற்றும் விலையில்லா மிதிவண்டி, புத்தகம், காலணி, சீருடை, வரைபடக் கருவிகள் ஆகியவை வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்து தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு (மின்சாரப்பணியாளர் மற்றும் பொருத்துனர் பிரிவு) சுய வேலை வாய்ப்பு செய்திடும் பொருட்டு கைகருவிகள் அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. மாறிவரும் தொழிற்சாலைகளின் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு நிறுவனத்துடன் இணைந்து உயர்ரக தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் நவீன தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்பட உள்ளது. நவீன தொழில்நுட்ப பிரிவுகளில் சில இடங்கள் மட்டும் காலியாக உள்ளன. பயிற்சியின் போதே பிரபல தொழில் நிறுவ னங்களில் இன்டர்ன்ஷிப் டிரெய்னிங் உதவித் தொகை யுடன் வழங்கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியா ளர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும். நேரடி சேர்க்கையில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






