search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிதம்பரத்தில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 277 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்
    X

    சிதம்பரத்தில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 277 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்

    • தனியாருக்கு சொந்தமான குடோனில் திடீர் சோ தனை மேற்கொண்டனர்.
    • ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் தொகையையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    சிதம்பரம் பகுதியில் போதை விற்பனை செய்வதை தடுக்க கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிதம்பரம் நகர எல்லையில் வீடு ஒன்றை குடோனாக வைத்து போதை பொருட்கள் சப்ளை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சிதம்பரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சு ரேஷ்முருகன் மற்றும் போலீசார் சிதம்பரம் 1-வது வார்டு சிங்காரத்தோப்பு பகுதியில் கண்ணுசாமி நகரில் தனியாருக்கு சொந்தமான குடோனில் திடீர் சோ தனை மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 24 மூட்டைகளில் 277 கிலோ குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரொக்கம் ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் தொகையையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சிதம்பரம் அருகே உள்ள சி.வீரசோழகன் டி.மண்டபம் துணிச்சிலமேடு பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் மகன் அருண்குமார் (34), சிதம்பரம் அருகே ஓமக்குளம் ஜமால்நகரைச் சேர்ந்த முகமது முஸ்தபா அப்பாஸ்அலி (42), புவனகிரி அருகே உள்ள வடக்குஆதிவராகநத்தம் வடக்கு மடவிளாக தெருவைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் சீனுவாசன் (35), சிதம்பரம் கொத்தவால் தெருவைச் சேர்ந்த ஜிஜந்தர்சிங் (33) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விசாரணையில் கர்நாடகவில் இருந்து போதை பொருட்கள் கொண்டு வரப்பட்டதாக தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள் மதிப்பு ரூ.2 லட்சமாகும்.

    Next Story
    ×